செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

நல்ல சுகதேகியாக இருந்து உடல் பயிற்சி செய்யும் மஹிந்தர்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மிகவும் ஆரோக்கியம் ஆக உள்ளார் என்று தகவல் வெளியிட்டு உள்ளது 'திவயின' சிங்கள பத்திரிகை.

கடந்த மாதம் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி சென்று இருந்தார்.

இவர் அங்கு புற்று நோய் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றார் என்று செய்திகள் வெளியாகின.

இவர் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு இருக்கின்றார் என்று பரவலாக கதைகள் அடிபடுகின்றன. இந்நிலையில் திவயின பத்திரிகையாளர்களில் ஒருவரான காமினி சுமனதேர அலரி மாளிகைக்கு இரு தினங்களுக்கு முன் அதிகாலை 4.00 மணி அளவில் சென்று இருக்கின்றார்.

அங்கு ஜனாதிபதி தீவிரமாக உடல் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தமையை நேரில் கண்டு இருக்கின்றார். ஜனாதிபதி சுமார் ஒரு மணித்தியாலங்கள் உடல் பயிற்சிகள் செய்து இருக்கின்றார்.

இந்நிலையில் நல்ல சுகதேகியாக இருந்து உடல் பயிற்சி செய்கின்றார் என்கிற தலைப்பில் பத்தி ஒன்றை எழுதி உள்ளார் மேற்படி பத்திரிகையாளர். ஜனாதிபதி உடல் பயிற்சி செய்கின்றமையை காட்டும் புகைப்படங்களையும் பிரசுரித்து உள்ளார் .
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல