அமெரிக்காவில் மேற்கு நியுயார்க் பகுதியில் இருந்து குடியரசு கட்சி சார்பாக இரண்டு முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர், கிறிஸ்டோபர் லீ. இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். கிறிஸ்டோபருக்கு இணையதளம் மூலமாக பெண் தோழி ஒருவர் அறிமுகமானார். இந்த நிலையில், மேல்சட்டை அணியாமல் வெற்றுடம்புடனான தனது புகைப்படத்தை அந்த தோழிக்கு கிறிஸ்டோபர் அனுப்பி வைத்தார்.
இணையதளம் மூலமாக அனுப்பிய அந்த படமும் அந்த தோழிக்கு அவர் அனுப்பிய இ-மெயில் கடிதங்களும் இணையதளத்தில் வெளியாகின. `கிசு கிசு' செய்திக்கென்றே உள்ள இணையதள பக்கத்தில் அவை இடம் பெற்றன. அதைத் தொடர்ந்து, கிறிஸ்டோபருக்கு கடும் கண்டனம் எழுந்தது. இதனால், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், தன்னுடைய நடத்தைக்காக தனது குடும்பத்தினர், அலுவலக ஊழியர்கள் மற்றும் தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக