செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

நாய் குரைத்ததால் உரிமையாளருக்கு சிறை

வீட்டில் நாய்களை வளர்ப்பவர்கள், இரவு நேரத்தில் அவை குரைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். இது, இத்தாலியில் நடந்த சம்பவம். அந்த நாட்டின் சிசிலி நகரில் உள்ள ஒரு வீட்டில் 10 நாய்கள் வளர்க்கப்படுகின்றன. இரவில் அந்த நாய்கள் கடுமையாக குரைத்ததால் அருகில் இருப்பவர்கள் அவதிப்பட்டனர்.

எனவே, நாய்களை கட்டுப்படுத்துமாறு புகார் தெரிவித்தனர். அதை அந்த வீட்டின் உரிமையாளர்கள் கண்டு கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து, அக்கம்பக்கம் வசிப்பவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த இத்தாலி உயர் நீதிமன்றம், நாய்களின் உரிமையாளர்கள் 4 பேரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அவர்களுக்கு தலா 4 மாத சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல