வியாழன், 19 ஜனவரி, 2012

audacity சாப்ட்வேர் பயன்படுத்தி, மொபைல் போன்களுக்கு ரிங் டோன் தயாரிக்கும் முறை

பெரும்பாலான மொபைல் போன்கள், எம்பி3 ரிங் டோனை ஏற்றுக் கொள்கின்றன. முதலில் audacity புரோகிராம் உங்களிடம் இல்லை எனில் http://audacity.sourceforge.net/download என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும்.

அதே தளப் பக்கத்தில் LAME MP3 என்ற என்கோடரையும் டவுண்லோட் செய்திடவும். இதன் மூலம் தான் உங்கள் பாடலை இறக்கி, பின்னர் மொபைல் போனுக்கு மாற்ற இயலும். அடுத்து File>import>audio எனச் செல்லவும். இப்போது பாடலை இயக்கி, உங்களுக்குத் தேவையான பகுதியை கட் செய்திடவும்.

15 விநாடிகள் ஒலிக்கின்ற அளவு இருந்தால் போதும். இதற்கு ஒரு பெயர் கொடுத்து தனியே பதிவு செய்து, File>export தேர்ந்தெடுத்து போனுக்கு அனுப்பவும். இந்த பகுதியை அமைக்கையில் பிட் ரேட் எவ்வளவு தேவை எனக் கேட்கும். பிட்ரேட் அதிக எண்ணிக்கையில் இருந்தால், தெளிவு இருக்கும். ஆனால் பைல் பெரிதாகி இடம் அதிகம் பிடிக்கும். உங்கள் போன் எந்த அளவில் பைல் ஒன்றைக் கொள்ளும் எனப் பார்த்து அமைத்திடவும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல