வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள டேபிள் ஒன்றில் முதல் செல்லுக்கும் டேபிளின் இறுதி செல்லுக்கும் செல்ல வேர்ட் ஒரு ஷார்ட் கட் கீ தந்துள்ளது. டேபிளுக்குள் கர்சரை அமைத்துக் கொண்டு ஆல்ட் + ஹோம் கீகளை அழுத்தினால் அந்த வரிசையில் முதல் செல்லுக்கு கர்சர் செல்லும். முதல் செல்லில் உள்ள சொல்லின் முதல் கேரக்டருக்கு முன் கர்சர் நிற்கும். அதே போல் கடைசி செல்லின் சொல்லுக்கு முன்னால் கர்சர் செல்ல ஆல்ட் + என்ட் கீகளை அழுத்த வேண்டும் .
வேர்டில் உள்ள டேபிளில் பல செல்கள் இருந்தால் அதில் எடிட் செய்கையில் அல்லது டேட்டா இடுகையில் ஒவ்வொரு செல்லுக்கும் இடையே தாவ வேண்டிதிருக்கும். பொதுவாக கர்சரை ஆரோ கீகள் மூலம் ஒவ்வொன்றாகத் தாவச் செய்வோம். இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. ஆல்ட் கீயை டவுண் ஆரோ கீயுடன் அழுத்தினால் கர்சர் அடுத்த செல்லின் மேலாகச் செல்லும். ஆல்ட் + அப் ஆரோ கீ அழுத்தினால் முந்தைய செல்லின் மேல் இடத்திற்குச் செல்லும்.
இதில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் டாகுமெண்ட் பிரிண்ட் லே அவுட் வியூவில் இருந்தால் தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும். மேலும் திரையில் தெரியும் செல்களுக்குள்ளாகத்தான் இந்த தாவல் நடைபெறும்.
வியாழன், 19 ஜனவரி, 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக