வியாழன், 19 ஜனவரி, 2012

`ஜெய்ஹிந்த்'!

நம்மையெல்லாம் சிலிர்க்கச் செய்யும் `ஜெய்ஹிந்த்' முழக்கத்தைத் தோற்றுவித்தவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

`ஜெய்ஹிந்த்' முழக்கம் பிறக்கக் காரணமாக இருந்த நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காண்போம்.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஹரிபுராவில் காங்கிரஸ் பேரவை கூடியபோது அதன் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக இருந்த சுபாஷ் சந்திரபோஸ், காங்கிரஸ் கட்சியைத் தீவிரமான பாதையில் வழிநடத்திச் சென்று துரிதமாகச் சுதந்திரம் பெற வேண்டும் என்று திட்டமிட்டார்.

வெள்ளை ஆட்சிக்கு ஆறு மாத கால அவகாசம் அளித்து நாட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட வேண்டும். பிரிட்டீஷ் ஆட்சி வெளியேறத் தவறினால் தீவிரமான போர்முறைகளைக் கடைப்பிடித்து வெள்ளையரை வெளியேற்ற முனைய வேண்டும் என்ற கருத்தை சுபாஷ் கொண்டிருந்தார்.

அவருடைய தீவிரமான போராட்டத் திட்டங்கள், காங்கிரஸ் தலைவர்கள் பலருக்குப் பிடிக்கவில்லை. அதனால் விடுதலைப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியை நம்பாமல் தனி வழியில் செயல்பட வேண்டும் என்று தீர்மானித்து காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் விலகிக் கொண்டார்.

அந்த நேரத்தில்தான் இரண்டாவது உலகப் போர் தொடங்கியது. சுபாஷ் சந்திரபோஸை வெள்ளை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காரணமின்றித் தான் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும், தன்னை விடுதலை செய்யும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் சுபாஷ் சந்திரபோஸ் அறிவித்தார். உடனே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் வெள்ளை ஆட்சியின் காவலர்கள் அவரது வீட்டைச் சூழ்ந்து காவல் இருந்தார்கள். திடீரென்று ஒருநாள் சுபாஷ் சந்திரபோஸ் காவலர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு வீட்டைவிட்டு மட்டுமல்ல, நாட்டை விட்டே வெளியேறினார்.

சுபாஷ் அந்தக் காலத்தில் உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருந்த ஹிட்லரை சந்தித்தார். போஸின் சுதந்திரப் போராட்ட முயற்சிகளுக்கு உதவுவதாக ஹிட்லர் வாக்குறுதி அளித்தார்.

சிங்கப்பூரில் சுபாஷ் சந்திரபோஸ் சுதந்திர இந்திய தேசத்தை அறிவித்தார். அந்தத் தேசத்தை ஒன்பது நாடுகள் ஆதரித்தன. நாட்டுக்கென தனி ரூபாய் நோட்டும் வெளியிடப்பட்டது. `ஜெய்ஹிந்த்' என்ற வீர முழக்கம் பிறந்தது அவ்வேளையில்தான்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல