இணையத்தில் பல ஆடியோ வீடியோ கன்வர்டர் புரோகிராம்கள் உள்ளன. சில கட்டணம் செலுத்திப் பெற வேண்டும். சில இலவசமாகக் கிடைக்கும். அதில் ஹேண்ட் பிரேக் (Handbrake): என்ற இலவச புரோகிராம் மிகவும் பயனுள்ள ஒன்று. இதனை http://handbrake.fr/?article=download என்ற இணைய தள முகவரியில் பெறலாம். ஏறத்தாழ அனைத்து டிவிடி பார்மட் பைல்களையும் இது மாற்றித் தருகிறது. இன்புட் வீடியோவிற்கான பிட் ரேட் கால்குலேட்டர், ஓரளவிற்கு கிடைக்கும் சப் டைட்டில் வசதி, வீடியோ படங்களை இன்டர்லேஸ் செய்வது, கிராப் மற்றும் ஸ்கேலிங் செய்வது போன்றவற்றையும் இதில் மேற்கொள்ளலாம். இது மாறா நிலையில் வீடியோ பார்மட்டினை .m4v என்ற பார்மட்டுக்கு மாற்றும். ஆப்ஷன் கட்டம் பெற்று உங்களுக்கு வேண்டிய பார்மட்களையும் பெறலாம். ஆனால் அது வெளிப்படையாகக் காட்டும்படி இதன் யூசர் இன்டர்பேஸ் இல்லை.
வியாழன், 19 ஜனவரி, 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக