வியாழன், 19 ஜனவரி, 2012

பேஸ்புக்கில் மறைந்துள்ள புதிய வசதி

பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக்கில் பல்வேறு வசதிகள் உள்ளது. பேஸ்புக் சாட் வசதி அதில் முக்கிமான ஒரு வசதி, இதன் மூலம் நண்பர்களுக்குள் அரட்டை அடித்து மகிழலாம்.

இந்த சாட் வசதியில் ஒரு வசதி மறைந்து உள்ளது. அந்த வசதியின் மூலம் அரட்டை அடிக்கும் நண்பர்களோடு விருப்பமானவர்களின் ப்ரோபைல் புகைப்படத்தை சாட்டில் அனுப்பலாம்.

Smileys பதில் அந்த நண்பரின் ப்ரோபைல் போட்டோவையே சாட்டில் அனுப்பலாம். இந்த வசதியை எப்படி உபயோகிப்பது என கீழே உள்ள வழிமுறையை பாருங்கள்.

முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கை திறந்து எவருடைய சாட் விண்டோவையாவது திறந்து கொள்ளுங்கள். அதில் நீங்கள் ப்ரோபைல் புகைப்படத்தை பகிர நினைக்கும் நபரின் Profile முகவரியை குறித்து கொள்ளுங்கள்.

Profile ID = https://www.facebook.com/profile.php?id=000000000000000
User Name = https://www.facebook.com/xxx

கடைசியாக Bold-ல் கொடுத்துள்ளது தான் அவர்களுக்கான முகவரி, இதை குறித்து கொள்ளவும்.

அடுத்து உங்கள் சாட் விண்டோவில் செய்தி டைப் செய்யும் பகுதியில் இந்த முகவரியை அடைப்பு குறிக்குள் கொடுத்து என்டர் அழுத்தினால் போதும் புரொபைல் புகைப்படம் தெரியும்.

உதாரணமாக: [[000000000000000]]
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல