வியாழன், 19 ஜனவரி, 2012

நாகப் பாம்புகளும் மாணிக்கக் கற்களும்

ஒரு நாகப்பாம்பு 100 வருடம் உயிர் வாழும் என்பதும் அந்த பாம்பு தன் வாழ்நாளில் யாரையும் கடிக்காமல் இருந்தால் அதன் விஷம் இறுகி ஒரு மாணிக்கக் கல்லாக மாறும் என்பதும் அந்த மாணிக்கக் கல்லை இரவு நேரங்களில் பாம்பு உமிழ்ந்துவிட்டு அதன் வெளிச்சத்தில் இரை தேடப் பயணிக்கும் என்பதும் முழுக்க முழுக்க கற்பனையே. அதில் துளிகூட உண்மையில்லை. உண்மையில் மாணிக்கக் கல் என்பது அலுமினியம் ஆக்சைடு மற்றும் குரோமியம் கலந்த ஒரு கனிமப்பொருள் ஆகும்.

ஆங்கிலத்தில் ரூபி என்று அழைக்கப்படும் இந்த மாணிக்கக் கல் இளம் அல்லது அடர் சிவப்பு நிறத்திலுள்ள ஒரு படிக்கக்கல் ஆகும். இயற்கையாக கிடைக்கும் மாணிக்கம் மிகத்தூய்மையாக இருக்காது. வைரத்தை போலவே இதுவும் பட்டை தீட்டப்பட்டே மெருகேற்றப்படுகிறது. நிறம், அமைப்பு, ஒளிரும் தன்மை, எடை ஆகியவற்றை கொண்டே மாணிக்கக் கல்லின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 2050 சென்டிகிரேட் வெப்பத்தில் உருகக்கூடிய இந்த மாணிக்கக்கல், பர்மா மற்றும் மேன்டேலே ஆகிய நாடுகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து அதிக அளவில் வெட்டி எடுக்கப்படுகிறது. மேலும் தாய்லாந்து, கம்போடியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள சுரங்கங்களில் இருந்தும் குறைந்த அளவில் வெட்டி எடுக்கப்படுகிறது.

வைரம் (Diamond), வைடூரியம் (Cat’s eye), முத்து (Pearls), மரகதம் (Emerald), மாணிக்கம் (Ruby), பவளம் (Coral), புட்பராகம் (Topaz), கோமேதகம் (Hessonite), நீலம் (Sapphire) ஆகிய ஒன்பது கற்களும் சேர்ந்து தான் நவரத்தினம் என்று அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல