சனி, 6 அக்டோபர், 2012

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தீவிரமாக செயற்பட்ட 60பேருக்கு எதிராக வழக்கு

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து தீவிரமான செயற்பட்ட 60 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் தடுப்பு காவலில் இருக்கும் இவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும் என மேலதிக சட்டமா அதிபர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆராய்ந்த சட்ட ஆலோசனைக்குழு இதனை முடிவு செய்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு செயன்முறையின் இறுதி நடவடிக்கை மற்றும் அடுத்தக்கட்ட செயற்பாடு என்பவை தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என அதன் மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 80 உறுப்பினர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் அவர்களில் 60பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த 60பேரின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இறுதி யுத்தத்தின் போது விடுதலை புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர். இவர்கள் உயிருடன் உள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் 60பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல