லண்டனில் நேற்றுஆரம்பமான கருத்தரங்கில், இலங்கைக்கான முன்நாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கைம் கலந்துகொண்டுள்ளார். இதில் சர்வதேச மன்னிப்புச் சபையின் அதிகாரி அலன் கீனன், BBC நிகழ்சித் தொகுப்பாளர், ஸ்டீபன் ஸக்கர், மற்றும் ஐ.நா அதிகாரி ஜஸ்மின் சுக்கா ஆகியோர் கலந்துகொண்டனர். நேற்று மாலை 6.00 மணிக்கு ஆரம்பமான இக் கருத்தரங்கு 8.00 மணிவரை நடைபெற்றது. இந் நிலையில் இதில் பேசிய நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்கைம், விடுதலைப் புலிகளை கடுமையாகச் சாடியுள்ளார். இதனை கருத்தரங்கில் கலந்துகொண்ட தமிழர்கள் எதிர்த்துள்ளார்கள்.
புலிகள் தமிழர்களை மனிதக் கேடையமாகப் பாவித்தார்கள் என்றும் , புலிகள் முன்னரே சரணடைந்திருந்தால், இவ்வளவு இழப்புகளும் வந்திருக்காது என்று அவர் கருத்து தெரிவித்ததை, தமிழர்கள் பலமாக எதிர்த்துள்ளார்கள். இது தொடர்பான மேலதிக செய்திகள் விரைவில் வெளியாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக