நூறு வீதம் சைவமக்கள் வாழும் குப்பிளான் கிராமத்தில் சுவிசர்லாந்தில் தமிழ் மக்களை மதம் மாற்றிய போதகர் லர்வின் நிக்கல்சன் போதகர் அருணகிரி என்பவர்களால் குப்பிளானில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ரேகேபோத் என்ற கிறிஸ்தவ தேவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டதை கண்டித்து அப்பிரதேச மக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இப்பிரதேச மக்கள் நேற்று யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும், உடுவில் பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், இந்து கலாசார திணைக்களம் மற்றும் சைவ அமைப்புக்களுக்கும் மகஜர்களை கையளித்துள்ளனர்.
பிரதேசசபை இக்கட்டிடத்திற்கு அனுமதி வழங்கப்படாத போதிலும் சட்டவிரோதமாக அவர்கள் இக்கட்டிடத்தை கட்டியுள்ளனர் என குப்பிளான் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குப்பிளான் மக்கள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தனித்தமிழ் சைவக்கிராமமாகிய குப்பிளான் கிராமத்தில் கிறிஸ்தவர்கள் இல்லாத இக்கிராமத்தில் பிரதேச சபையின் கட்டட அனுமதியின்றியும் பிரதேச செயலகத்தின் சமய செயற்பாடுகளுக்கான அனுமதி இன்றியும் கட்டப்படும் இத்தேவாலயம் தொடர்பாக பிரதேச சபைக்கும் பிரதேச செயலத்துக்கும் தெரியப்படுத்தி இருந்தோம். எமக்கு தெரிந்த வகையில் பிரதேச சபையினால் தடை உத்தரவு கடிதம் வழங்கிய போதும் இவர்கள் அதை உதாசீனம் செய்து தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
சட்டவிரோதமாக இத்தேவாலயம் திறக்கப்படுவதால் எமது கிராமத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
சமய கலாச்சாரத்தை பேணும் எமது மக்கள் இத் திறப்பு விழாவைக் கண்டித்து அடையாள அகிம்சை வழி போராட்டத்தை நடத்திவருகின்றனர். இத் தோவாலய திறப்பு விழாவையும் வழிபாட்டு முறைகளும் எமது கிராமத்தின் சமுக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துகின்றமையை கண்டித்து அடையாள அகிம்சை வழி எதிர்ப்பு போராட்டத்தை சைவ பெரும் மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எமது கிராம மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானவர் அல்லர். அவர்கள் எமது பிராந்தியத்தில் புதிதாக தமது செயற்பாடுகளை மேற்கொள்வதும் எமது வாழ்வின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் மாற்றுமத செயற்பாடுகளில் ஈடுபடுவதும் எமது கிராமத்தில் சமுக அமைதியின்மையின்மையை ஏற்படுத்தியுள்ளது. எனவே அமைதியான வாழ்வுச்சூழலை உத்தரவாதப்படுத்தி உறுதிப்படுத்தும் வரை எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதும் சமுக அமைதிக்கு பங்கம் விளைவிக்காது இருப்பதை உறுதிப்படுத்துவதும் தங்கள் கடமை ஆகும். ஆகவே எங்கள் கோரிக்கையை உடன் ஏற்று உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு குப்பிளான் கிராம மக்கள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்த மகஜரில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக போதகர் அருணகிரி, மற்றும் போதகர் லர்வின் நிக்கல்சன் சுவிஸிலிருந்து வருகை தந்துள்ளார்கள். இவர்கள் சுவிஸில் பல தமிழ் மக்களை ஏமாற்றி மதம் மாற்றியதுடன் அவர்களின் சம்பள பணத்தில் 10வீதத்தை அறவிட்டு வருகின்றனர். இதன் மூலம் இவர்கள் பெருந்தொகை பணத்தை மோசடி செய்துள்ளனர் என்றும் இவர்களிடம் ஏமாறிய மக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக