கொழும்பில் உள்ள ஒரு முன்னணி தனியார் நிறுவனத்தில் சிரேஷ்ட அதிகாரியின் செயலாளராக பணியாற்றி வந்த ஓர் அழகிய இளம் பெண் பஸ்ஸில் வழமையாக செல்வார். பல நாட்களாக பஸ் தரிப்பு நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவர்ச்சிகரமான ஓர் அழகிய ஆண்மகன் தன்னை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை அந்த இளம் பெண் தெரிந்து கொண்டாள்.
முதலில் மறைமுகமாக அவளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ஆண் மகன் பின்னர் அந்தப் பெண்ணைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான். பார்ப்பதற்கு அழகாகவும், நல்லவனாகவும் தோற்றமளிக்கும் அந்த இளைஞனைப் பார்த்து பதிலுக்கு அவளும் சிரித்தாள். பின்னர் அவன் அவளுக்கு அருகில் வரவே சுய அறிமுகத்துடன் அவர்களின் நட்பு வளர்ந்தது.
ஒரு சிகை அலங்கார சலூனை நடத்தி வந்ததாக அந்த ஆண் மகன் தன்னை அறிமுகம் செய்திருக்கிறான். தனக்கு ஓரளவு வருமானம் கிடைக்கின்ற போதிலும் தான் இதுவரையில் வாகனம் ஒன்றை வாங்கவில்லை என்று உண்மையை சொல்லியிருக்கிறான். அவர்களின் காதல் வலுவடைந்ததை அடுத்து அந்த இளம் பெண் தனது பெற்றோரின் அங்கீகாரத் துடன் காதலனை ஒரு சிறிய திருமண வைபவம் ஒன்றின் மூலம் கைப்பிடித் தாள்.
திருமணம் செய்து முடித்த பின்னர் அந்த இளம் பெண்ணுக்கு ஓர் உண்மை புலனாகியது.
தான் காதலித்த ஆண் மகன் ஒரு பெண் என்பதை அவள் தெரிந்து கொண்டு அதிர்ச்சியடைந்தாள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக