சனி, 6 அக்டோபர், 2012

கேள்வி - பதில்

நவம்பர் மாதத்தில் இசை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஒரு அறிக்கை விட்டுள்ளார். என்ன காரணம்?

இயக்குனர் செல்வமணியின் இந்த அறிக்கை அவர் சொந்தமாகச் சிந்தித்து வெளியிட்ட ஒன்றென்று என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. தெலுங்கு நடிகை ரோஜாவை மனைவியாக்கி அரைத் தமிழனாக மாறிவிட்ட செல்வமணியெல்லாம் இலங்கைத் தமிழருக்கு அட்வைஸ் செய்ய வந்துவிட்டார்.

கடந்தகாலத்தில் கார்த்திகை மாதத்தில் கணக்கற்ற களியாட்ட விழாக்களை இந்தத் தமிழ்ச் சமூகம் கொண்டாடி முடித்துள்ளது. கார்த்திகை மாதத்தில் புலிப் பிரமுகர்கள் வீடுகளில் கூட பூப்புனித நீராட்டு விழா தொடக்கம் கலியாணச் சடங்கு வரை வெகுசிறப்பாக நடந்து முடிந்த வரலாறு செல்வமணிக்கு தெரியாமல் இருப்பது நம்பமுடியாமல் தான் இருக்கிறது.

2009ம் வருடம் வைகாசி மாதம் முள்ளிவாய்க்கால் மற்றும் அதன் அண்டிய பகுதிகளிலும் அப்பாவித் தமிழரும் புலிகளும் செத்துக்கொண்டிருக்கும் போது வெளிநாட்டுத் தமிழர்கள் விழாக்கள் வைக்காமலா இருந்தார்கள்.

செல்வமணி சொல்வது போல, கார்த்திகை மாதத்தில் இசை நிகழ்ச்சி, களியாட்ட விழாக்கள் நடத்தக் கூடாதென்றால், கார்த்திகை மாதத்தில் திரைப்படக் காட்சிகளையும் காண்பிக்காமல் நிறுத்தி வைக்கலாமே.

செல்வமணி இதுபற்றி தனது திரைப்பட சகாக்களிடம் பேசிப்பார்க்கலாமே. செல்வமணிக்கு தமிழும் ஒரு வியாபாரம் தான். ஈழத்தமிழனும் ஒரு வியாபாரப் பண்டம்தான்.

செல்வமணிக்கு இளையராஜா மீது என்ன கோபம்? 

ஊர்க்குருவி
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல