புதன், 5 டிசம்பர், 2012

அதிக நேரம் கணனி பார்த்தால்.............

பக்கத்தில் கணனி இருந்தால் பலருக்கு மனைவி, மக்கள் அலுவலக வேலை..... என எதுவும் நினைவில் எழாது. கம்பியூட்டர் என்பது பலருக்கு மூன்றாவது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம் தான். கம்பியூட்டர் தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்பியூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்பியூட்டரே கதி என இருப்பவர்களுக்கு “கம்பியூட்டர் விஷன் சின்ட்ரோம்” என்கிற பிரச்சினை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர் பிரவீன் கிருஷ்ணா.

அதென்ன “கம்பியூட்டர் விஷன் சினிட்ரோம்”? அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். “அதிக நேரம் கம்பியூட்டர் உபயோகிக்கிறவங்களுக்கு கண்கள் வரண்டு, கண்ணீரே இல்லாமப் போகலாம். அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு...... இதெல்லாம் கம்பியூட்டர் விஷன் சின்ட்ரோமோட அறிகுறிகளாக இருக்கலாம். சதா சர்வ காலமும் கம்பியூட்டரே கதியா இருக்கிறவங்க, ‘20-20-20’ விதியைப் பின்பற்றியே ஆகணும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவில் உள்ள காட்சியைப் பார்க்கணும். உள்ளங்கைகளை சூடு பறக்க தேய்ச்சு மூடின கண்கள் மேல வச்சு எடுக்கலாம். கண்கள் ரொம்ப வரண்டு போனா, கண் மருத்துவரைப் பார்க்கணும்.

வரட்சியோட அளவைப் பொறுத்து, தேவைப்பட்டா, கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளைப் பரிந்துரைப்பாங்க” என்கிற டாக்டர் பிரவீன், கம்பியூட்டர் வேலையில் சேர்வதற்கு முன்பே, கண் பரிசோதனையை மேற்கொண்டு, ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்.

“கிட்டப்பார்வையும் இல்லாம, தூரப் பார்வையும் இல்லாம கம்பியூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை. கண்ணாடி தேவைப்படும் போது, தூரப் பார்வைக்கும் கிட்டப்பார்வைக்குமான கண்ணாடி கம்பியூட்டருக்கு சரி வராது. கம்பியூட்டர் வேலைக்கான பிரத்தியேக கண்ணாடிகள் இருக்கு. ஸ்பெஷல் கோட்டிங்கோட, நடுத்ததரப் பார்வைக்கான அதைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்பியூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்கணும். பாதங்கள் தரையைத் தொடுவது மாதிரி உட்காரவேணும். 90 டிகிரி கோணத்துல உட்கார்றந்து சரியா இருக்கும். கம்பியூட்டருக்கு “ஆன்ட்டி ரெஃப்ளெக்ஷன் மானிட்டர்” போடுவதும் கண்களைப் பாதுகாக்கும். பொதுவா 40 பிளஸ்ல இருக்கிறவங்களுக்கு, வெள்ளெழுத்தோட சேர்ந்து, இந்த கம்பியூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்சினையும் வரும். அந்த வயதில் வரக் கூடிய பிரச்சினையா என ஒதுக்காமல், கம்பியூட்டர் விஷன் சின்ட்ரோமுக்கும் சோதனை செய்து, தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல