நாடு கடந்த அரசின் 4 வது அமர்வுகள் லண்டனில் இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. இதன் முதல் அமர்வு பிரித்தானிய நாடாளுமன்றில் சிறப்பாக நடைபெற்றது. இருப்பினும் அடுத்து நடைபெறவிருந்த அமர்வுக்கான மண்டபம் திடீரென ரத்தானதால், நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். பிரன்ட் டவுன் ஹால் (மண்டபம்) கடைசி நேரத்தில் ரத்தாக யார் காரணம் என்ற கேள்விகளுக்கு இதுவரை ஒரு தெளிவான விடை கிடைக்கவில்லை. இருப்பினும் இலங்கையில் இருந்து வெளியாகும் அரச ஊடகமாக த ஐலன் என்னும் பத்திரிகை, இதற்கு காரணம் பிரன்ட் நகரசபையில் வேலைசெய்யும் சிங்களவர் தான் என விரலைக் காட்டியுள்ளது. சன்ன லொக்கு லியனகே என்னும் சிங்களவரே, பிரன்ட் மண்டபத்தை நாடு கடந்த அரசுக்கு கொடுக்கவேண்டாம் என்று கூறியுள்ளாராம். இதற்கான காரணம் என்ன என்று கேட்டால் இடியப்பச் சிக்கலாக உள்ளது.
லண்டனில் இயங்கிவரும் நம்பிக்கை ஒளி என்னும், தொண்டு நிறுவனம் ஒன்று தாம் மாநாடு நடத்தவிருப்பதாக பிரன்ட் டவுன் ஹாலை முன்பதிவு செய்துள்ளது. ஆனால் அவர்கள் முன்பதிவுசெய்த மண்டபத்தில் நாடு கடந்த அரசின் அமர்வுகள் நடைபெறவிருந்த விடையத்தை, அங்கு வேலை பார்க்கும் சிங்களவர் ஒருவர் கண்டறிந்துள்ளார். இதனை அவர் புகாராகக் கொடுத்துள்ளார். மற்றும் இந்த அமர்வுகளை நடத்த விடவேண்டாம் என்று, சிலர் தொலைபேசியூடாக பிரன்ட் நகரசபைக்கு தெரிவித்துள்ளார்கள். இதுவரை மட்டுமே சிங்களத்தின் பங்கு இருந்திருக்கிறது. ஆனால் இதற்கு அப்பால் நடந்த விடையங்கள் தான் உள்வீட்டுப் பிரச்சனையை படம்போட்டுக் காட்டுகிறது. அதாவது பிரன்ட் டவுன் ஹால் ரத்தானதை அடுத்து, பிறிதொரு மண்டபத்தை பதிவுசெய்ய நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் முற்பட்டுள்ளனர். (இவை எல்லாம் சில மணி நேரங்களில் தான் நடந்துள்ளது)
முதலாவது இடம், ரத்தான சில மணி நேரத்தில் அடுத்த மண்டபத்தை தேடி அங்கு செல்ல, அங்கேயும் அனாமதேய தொலைபேசி அழைப்புகள் ஆபிசுக்கு வந்துள்ளது. அதனால் அவர்கள் மண்டபத்தைக் கொடுக்கவில்லை. பின்னர் அடுத்த மண்டபத்தை தேடி இவர்கள் செல்ல, அங்கேயும் அனாமதேய அழைப்புகள் அந்த மண்டபத்தின் ஆபிசுக்கு வந்துள்ளது. அப்படி என்றால், இவர்கள் எந்த மண்டபத்தை பதிவுசெய்ய முற்படுகிறார்கள் என்பதனை சில நிமிடங்களில் தெரிந்து, அதனை இலங்கைக்குச் சொல்லி சிங்களவர்கள், பின்னர் அனாமதேய அழைப்பை மேற்கொள்வார்களா ? அது சாத்தியமா ? இல்லையே ! எனவே நாடு கடந்த அரசில் உள்ள சிலரே இதனையும் செய்திருக்கவேண்டும் என்று, அவர்களே பேசிக்கொள்கிறார்கள். இவ்வாறு உள்வீட்டுப் பிரச்சனைகள் பல, காணப்படும் ஒரு அமைப்பாக நாடு கடந்த அரசு மாறியிருப்பது துரதிஷ்டவசமானது. நாடு கடந்த அரசானது உருப்படியாக ஒரு வேலைத் திட்டத்தை மேற்கொள்லவில்லை எனப் பலதடவைகள், நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். இவ்வாறு உள்வீட்டுப் பிரச்சனைகள் காணப்படும் அமைப்பானது எவ்வாறு தன் இலக்கை அடையும் என்பதில் பெரும் ஐயப்பாடு எழுந்துள்ளது.
இதனை விலக்கி, ஒற்றுமையாக நின்று, தமிழர்கள் விடுதலை அடைய நாடு கடந்த அரசு பாடுபடவேண்டும் என்பதே தமிழ் மக்களின் பெருவிருப்பாக உள்ளது என்றால் அது மிகையாகாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக