அன்ரன் பாலசிங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதும் அன்ரன் பாலசிங்கம் உடனடியாகவே விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பு கொண்டு நிலமையை விளங்கப்படுத்தியதுடன் குறித்த வித்தியாசமான பத்திரிகையாளருடைய தேவைப்பாடு அவரை தொடர்ந்து எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற விடயங்களை பிரபாகரனிற்கு விளங்கப்படுத்தினார். அன்ரன் பாலசிங்கத்தின் நீண்ட விளக்கங்களை கேட்ட பிரபாகரன் இந்த விளக்கங்களை ஒரு கருத்தாகவே பொருட்படுத்தாமல் இது தவறுதலாக நடந்திருக்கலாம் இது தொடர்பில் நான் விசாரித்து சொல்கிறேன் எனக் கூறிவிட்டு பாலசிங்கத்தினுடனான தொடர்புகளை துண்டித்து விட்டு உடனடியாக பொட்டம்மானுடன் தொடர்புகொண்டு நிலமையை கேட்க முற்பட்டார்.
இதன்போது நான் நேரடியாக வந்து நிலமையை விளங்கப்படுத்துகிறேன் எனக் கூறிய பொட்டம்மான் தலைவரிடம் நேரடியாகச் சென்று நிலமையை விளங்கப்படுத்தியதுடன் குறித்த யாழ்ப்பாண பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தொடர்பான குற்றவியல் கோப்பு ஒன்றை எடுத்து தலைவரிடம் நேரடியாக கொடுத்தார். இதனைப் பார்த்த பிரபாகரன் உடனடியாக அதிர்ச்சி அடைந்தவராகக் காணப்பட்டதுடன் இவர் தொடர்பில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொட்டம்மானைப் பார்த்துக் கேட்டார். இதற்கு கொடுப்புக்குள் சிரித்தவாறு பொட்டம்மான் அளித்த பதில் தலைவரை திருப்தியடைய வைத்தது.குறித்த பத்திரிகையாளரை போடுவதற்குரிய காலம் இன்னும் கனியவில்லை இவரை இன்னும் சில தேவைகளுக்காக பயன்படுத்த வேண்டியுள்ளது. இவரை எமது தேவைகளுக்குப் பயன்படுத்திய பின்னர் இவர் இழைத்த துரோகத்திற்கு எமது இயக்கத்தால் வழங்கப்படுகின்ற உயர்ந்த தண்டனையை வழங்க தயாராக இருக்கிறோம். இது தொடர்பில் கபிலம்மான் கடுமையான குழப்பத்தில் இருக்கிறார். குறித்த ஊடகவியலாளரை உடனடியாக போடவேண்டுமென கபிலம்மான் என்னுடன் குழம்பிக் கொண்டிருக்கின்றார். நான் ஒருவாறு சமாளித்துவிட்டு வருகிறேன். நீங்களும் ஒருதடவை கபிலம்மானிடம் அவசரப்பட வேண்டாம் என நிலைமையை விளங்கப்படுத்துங்கள் என தலைவரிடம் பொட்டம்மான் கேட்டுக்கொண்டார்.
பின்னர் இயக்க விடயங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இருவரும் கலந்துரையாடிய பிறகு பொட்டம்மான் அங்கிருந்து வெளியேறி விட்டார். இதன் பின்னர் பிரபாகரன் இவ்விடயத்தை தனது நேரடிக் கவனத்திற்கு உட்படுத்த விரும்பினார். உடனடியாகவே குறித்த பத்திரிகை உட்பட யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற பத்திரிகைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பிலான ஒரு விபரக் கோவையையும் அவர்களது செயற்பாடுகள் தொடர்பிலான விளக்கங்களையும் தனக்கு ஒரு மாதத்துக்குள் தரவேண்டுமென தமிழ்ச்செல்வனை அழைத்து பிரபாகரன் பணித்திருந்தார்.
இதனை அடுத்து தமிழ்ச்செல்வன் இவ்விடயத்தை கையாளும் பொறுப்பை சர்வதேச தமிழீழ மாணவர் பேரவைக்கு பொறுப்பாக இருந்த கண்ணன் என்பவரிடம் ஒப்படைத்தார். கண்ணன் என்பவர் ஒரு பல்கலைக்கழக மாணவன் போன்று பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவாறு முழுமையாக தனது நடவடிக்கைகளை இயக்கத்தின் தேவைக்கேற்ப முன்னெடுத்து வந்தார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறையைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகராக இருந்தது சமாதான காலத்தின் பின்னரே இவருடன் கூடப்பழகிய பல்கலைக் கழக மாணவர்கள் உட்பட பலருக்கு தாமதமாக தெரியவந்தது. இருந்தாலும் ஊடகங்கள் தொடர்பான விடயங்களை கையாளும் பொறுப்பு மிக இரகசியமாகவே இருந்து வந்தது.
சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை பேரளவில் யாழ்மாவட்ட அரசியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது போன்று வெளியில் தெரிந்த போதிலும் அல்லது யாழ்மாவட்ட அரசியல் துறையினர் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை தமக்குக் கீழேயே இயங்குவதாக எண்ணிய போதிலும் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவைக்கு பொறுப்பாக இருந்த கண்ணன் என்பவர் தலைவரின் ஒரு நேரடி விசுவாசமான போராளியாகவே இருந்தார். இவரது செயற்பாடுகள் குறிப்பாக ஊடகங்களை கையாளும் செயற்பாடு உட்பட ஊடகங்கள் தொடர்பிலான தகவல்களை சேகரிக்கின்ற செயற்பாடுகள் முற்று முழுதாக இரகசியம் பேணப்பட்ட ஒரு செயற்பாடாகவே இருந்து வந்தது. கண்ணன் தனது செயற்பாடுகள் தொடர்பில் தன்னுடன் கூட இருந்த போராளிகளுக்கோ அல்லது யாழ்மாவட்ட அரசியல் துறையினருக்கோ எதனையும் தெரியப்படுத்துவதில்லை.
இவரது செயற்பாடுகள் நேரடியாக தமிழ்ச்செல்வனையே சென்றடைந்தது. தமிழ்ச்செல்வன் நேரடியாக கண்ணனிடம் பெறுகின்ற தகவல்களை உடனுக்குடன் தலைவரிடம் தெரியப்படுத்தி வந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டுவீச்சில் சாவைத் தழுவும் வரைக்கும் தமிழ்ச்செல்வன் கடுமையான விசுவாசியாகவே செயற்பட்டு வந்தார். குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த பல தளபதிகள் பல விடயங்களை பிரபாகரனுக்கு மறைத்திருந்த போதிலும் ஒரு சிறிய விடயத்தைக் கூட பிரபாகரனுக்கு மறைக்காமல் உடனுக்குடன் தகவல்களை தமிழ்ச் செல்வன் தெரிவித்து வந்தமையால் பிரபாகரனுக்கும் தமிழ்ச்செல்வன் மீது கூடுதலான அன்பும் பாசமும் இருந்தது.
பிரபாகரன் தான் எங்கு செல்வதாக இருந்தாலும் பொட்டம்மானுடன் தமிழ்ச் செல்வனையும் கூடுதலாக அழைத்துக்கொண்டே செல்வார். அரசியல்துறை சார்ந்த பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஏனைய தளபதிகள் பிரபாகரனிடம் முன்வைக்கின்ற பொழுதும், தமிழ்ச்செல்வன் தொடர்பில் யார் முறையிட்டாலும் பிரபாகரன் அதனை பெரியளவில் கணக்கில் எடுப்பதில்லை.அந்தளவிற்கு தமிழ்ச்செல்வன் மீது பிரபாகரனுக்கு நம்பிக்கை இருந்தது.
இதனால்தான் பொட்டம்மான் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் திரட்டும் தகவல்களில் உள்ள சரி பிழையை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக தமிழ்ச்செல்வன் ஊடாக மேலதிக தகவல்களைப் பெறும் முயற்சியில் பிரபாகரன் களம் இறங்கி இருந்தார். இருந்த போதிலும் யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்பில் முழுமையான தகவல்களை கண்ணனால் திரட்ட முடிந்த போதிலும் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான பத்திரிகையெனவும் முன்னணிப் பத்திரிகை எனவும் தங்களை பிரச்சாரப்படுத்தி வரும் குறித்த பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தொடர்பிலான தகவல்களை கண்ணனால் திரட்ட முடியாமல் போய்விட்டது. இதற்குப் பிரதான காரணம் கண்ணன் வைத்திருந்த கூடுதலான தொடர்பாளர்கள், குறித்த பத்திரிகைக்கு சார்பான போக்கையே பின்பற்றினர். அல்லது குறித்த பத்திரிகையின் கபடத் தனத்தை புரியாதவர்களாக இருந்தனர் எனலாம்.
கண்ணனால் தமிழ்ச்செல்வனிற்கு வழங்கப்பட்ட யாழ் ஊடகங்கள் தொடர்பிலான நிலவர அறிக்கையில் யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் வலம்புரி பத்திரிகையானது ஒரு கட்சிப் பத்திரிகை என்ற விடயமே பிரதான இடத்தை பிடித்திருந்ததுடன் பிரபாகரன் எதிர்பார்த்த குறித்த ஊடகவியலாளர் தொர்பிலான விபரங்கள் எதுவும் அதில் குறிப்பிடப்படாமல் குறித்த பத்திரிகையும் அதன் பிரதம ஆசிரியர் தொடர்பிலும் நல்ல அபிப்பிராயங்களுடனான தகவல்கள் மட்டுமே அதில் காணப்பட்டது. இந்த அறிக்கையை பார்வையிட்ட தமிழ்ச்செல்வன் தனது வழமையான புன்னகையுடன் கண்ணனை அனுப்பிவிட்டு நேரடியாக தலைவரிடம் சென்று அறிக்கையை சிரித்தவாறு கையளித்தார்.
இதன்போது தலைவர் தமிழ்ச்செல்வனை நீர் விபரம் அறியாத ஒருவரை அனுப்பியிருக்கிறீர் அதுதான் சரியான விபரங்கள் வரவில்லையென சற்று கடும் தொனியில் கூறிய பொழுது வழமையான சிரிப்புடன் ஓம் நானும் பார்த்தேன், சரியான விபரங்கள் வரவில்லைத்தான் அண்ணை என தமிழ்ச்செல்வன் தலைவரிடம் கூற சரி இன்னும் ஒரு சந்தர்ப்பம் தருகிறேன் முயன்று பாரும் என்று கூறி தலைவர் தமிழ்ச் செல்வனிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டார்.
தமிழ்ச்செல்வன் புதிதாக நியமித்த அந்த ஊடகங்களை ஆராய்ந்த பொறுப்பாளர் யார்? அவரால் முழுமையான தகவல்களை பெற முடிந்ததா? அல்லது தமிழ் ஊடகங்கள் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனவா? எவ்வாறு ஈடுபட்டன? என்பவற்றை மேலும் பார்ப்போம்.
(தொடரும்.)
(வே. அர்ச்சுணன்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக