வெள்ளி, 18 ஜனவரி, 2013

நீர்

உலகின் மொத்த நீரின் அளவு மாறாமல் உள்ளது. மற்றப் பொருட்களைப் போன்று நீரை உற்பத்தி செய்ய இயலாது. நீர் சுழற்சியினால் கடல்நீர் சூரிய வெப்பத்தில் ஆவியாகி பின்னர் மழையாக பொழிகிறது.

நாம் வாழும் பரப்பில் 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. இதில் 97 சதவீதம் உப்பு நீராகக் கடலில் உள்ளது. 2 சத வீதம் பனிக் கட்டியாக உறைந்துள்ளது. 1 சத வீதம் தண்ணீ ரைத்தான் மனிதனும், ஏனைய ஜீவராசிகளும் குடிநீராகவும், விவசாயத்திற்கும், மற்ற தேவை களுக்கும் பயன்படுத்த முடியும்.

உலகமயமாதலின் விளைவாக இயற்கை வளங்கள் யாவும் முதலாளிகளின் லாப வேட் டைக்கு பலியாகியுள்ளன. இன்று நீர் பல கோடி டாலர்கள் புழங்கும் பெரிய வர்த்தகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் மிக அதிகலாபம் ஈட்டும் துறை என்று கூறப்படுவ தால் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் அதில் முழு மூச்சுடன் இறங்கியுள்ளன. நீர் அனைவருக்கும் பொதுவான சொத்து.

எனவே நீரை பாதுகாத்து விநியோகிக்க வேண்டியது அரசின் கடமையாக கருத வேண்டும். நமது இயற்கை வளங்கள் தொடர் பாக அரசுகள் எந்தவிதமான ஒப்பந்தம் செய்து கொண்டாலும் மக்கள் மத்தியில் விவாதித்து ஒப்புதல் பெற்ற பின்பே ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும். இன்று நம்மிடம் உள்ள இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்த வேண் டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக் கும் உள்ளது. நாம் இந்தப் பொறுப்பை தட்டிக் கழித்தால் வருங்கால சந்ததியினருக்கு மிகவும் மோசமான உலகைத்தான் விட்டுச் செல்வோம்.

என் தாத்தா ஆற்றில் நீரைப் பார்த்தார்

என் தந்தை கிணற்றில் நீரைப் பார்த்தார்

நான் குழாயில் நீரை பார்த்தேன்

என் மக்கள் பாட்டில்களில் பாக்கெட்டு களிலும் பார்க்கின்றனர்.

எனது பேரக் குழந்தைகள்???
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல