வெள்ளி, 18 ஜனவரி, 2013

இனி எந்த நாட்டுக்கும் ‘ஃபேஸ்புக்’கில் இலவசமாக பேசலாம்!

உங்கள் ஃப்ரெண்ட்ஸ் எந்த நாட்டில் இருந்தாலும் இனி நீங்கள் அவர்களுடன் மணிக்கணக்கில் ஃபேஸ்புக் மூலம் அரட்டையடிக்கலாம். இந்த இலவசமாக பேசக்கூடிய புதிய வசதியினை பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் விரைவில் ஆரம்பிக்க உள்ளது.

முதல்கட்டமாக ஐபோனில் உள்ள ஃபேஸ்புக் மெஸேஞ்சரில் இந்த வசதியை கொண்டு வந்திருக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் இப்போதைக்கு கனடா நாட்டில் மட்டுமே ஆரம்பித்திருக்கிறது.

இதன் மூலம் ஃபேஸ்புக் வலைத்தளத்தில் இருக்கும் நண்பர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் அவர்களிடம் நீங்கள் இலவசமாக பேச முடியும்.

தற்போது ஐபோனில் உள்ள ஃபேஸ்புக் மெஸேஞ்சர் அப்ளிகேஷனில், நாம் பேசி அதனைப் பதிந்து குரல் அஞ்சலாக அனுப்பும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மெஸேஞ்சர் அப்ளிகேஷனில் உள்ள + குறியினை அழுத்தி நாம் பேசுவதை பதிந்து அனுப்பலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல