வெள்ளி, 18 ஜனவரி, 2013

ஃபேஸ்புக்கில் எல்லா தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறீர்களா..?

ஃபேஸ்புக் சமூக தளத்தை பயன்படுத்துபவர்கள்வெகு சீக்கிரத்திலேயெ பாப்புலராகி விடுகிறார்கள். அது உங்களைப் பொருத்தவரை இலவசம் தான்.

ஆனால் அதை நடத்தும் நிறுவனத்துக்கு அது பணம் காய்ச்சி மரம் தான். ஆமாம் ஃபேஸ்புக் உங்கள் தகவல்களை காசாக்கி கொண்டு கொழிக்கிறது.

தினமும் உங்கள் பெர்ஷனல் தகவல்கள் மூலம் ஐந்தரைக் கோடி ரூபாயை வருமானமாக ஈட்டுகிறது இந்த தளம். கடந்த ஆண்டு ஒரே ஒரு ஃபேஸ்புக் பயனாளர் மூலம் மட்டும் ரூ.65.46 கிட்டியது என்றால் இந்த ஆண்டு ரூ.68.76 என்று அதன் வருமானம் அதிகரித்திருக்கிறது.

ஆனால் அது போதவில்லை என்று அதன் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்துக்கு மேலும் அழுத்தம் கொடுக்கிறார்கள். அதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த வருமானம் கூட வேண்டும் என்பது முதலீட்டாளர்களின் விருப்பம். அதற்காக ஃபேஸ்புக்கை நடத்துபர்கள் உங்கள் தகவல்களை மற்றவர்களுக்கு காசுக்கு விற்க முன்வந்து விட்டார்கள்.

ஆமாம், நீங்கள் வெறும் 55/- ரூபாய் கொடுத்தால் நீங்கள் தனிப்பட்டது என்று வைத்திருக்கும் தகவல் முதல், உங்கள் தொடர்பு தகவல் வரை எல்லாவற்றையும் அது கொடுக்க தயாராக இருக்கிறது.

அடுத்து உங்கள் டைம்லைன் பலகையில் மிக அதிகமான விளம்பரங்கள் வந்து விழப் போகிறது. நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை பயன்படுத்துகிறீர்களோ அந்தளவுக்கு அதிகமான வருமானம் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு வருமாம்.

அதுமட்டுமல்ல, சில இணையதளங்கள் மற்றும் மென்பொருள்கள் தானாகவே ஃபேஸ்புக்கிலிருந்து தங்களுக்கு தேவையான பெர்ஷனல் தகவல்களை திரட்டி கொள்ளப் போகிறது. அதற்கான காசையும் ஃபேஸ்புக் பெற்றுக்கொள்ளுமாம்.

இப்படி காசுக்காக நம் அனுமதி இல்லாமலேயே அதை நாம் இலவசமாக பயன்படுத்துகிறோம் என்ற ஒரே ஒரு சலுகையை மட்டும் நமக்கு கொடுத்து விட்டு நம் சீக்ரெட் தகவல்களை எல்லாம் காசாக்க கிள்ம்பியிருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

அதனால் சதா எந்த காலமும் ஃபேஸ்புக்கே கதி என்று கிடப்பவர்கள் உங்கள் பெர்ஷனல் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருங்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல