செக்ஸ், சிகரெட்,மது போன்ற பழக்கங்களை விட எந்த நேரமும் பேஸ்புக், டிவிட்டரே கதியென்று கிடப்பது மக்களிடையே படு மோசமான பழக்கமாக மாறிக்கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் பிசினஸ் ஸ்கூல் ஒன்று இதுதொடர்பாக ஒரு பெரிய ஆய்வை நடத்தியது.
அந்த ஆய்வில் பேஸ்புக், டிவிட்டர், பிளாக்பெர்ரி சாதனம் போன்றவற்றை பயன்படுத்தும் நபர்களை வைத்து ஆய்வு நடத்தினர். 7 நாட்கள் இந்த ஆய்வு நடந்தது.
ஆன்லைன் மூலமாக நடந்த இந்த சர்வேயில் 250 பேர் கலந்து கொண்டனர். அதில் செக்ஸ், சிகரெட் பழக்கத்தை விட மிக மோசமான முறையில் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மக்கள் அடிமையாகிக் கிடப்பது தெரிய வந்ததாம்.
செக்ஸ், சிகரெட்டை விட பேஸ்புக்கும், ட்விட்டரும்தான் அனைவரையும் அதிகம் தூண்டுகிறதாம். ஒரு நாளைக்கு சராசரியாக 7 முறையாவது பேஸ்புக், ட்விட்டர் பக்கம் போய் விடுகின்றனராம் அதற்கு அடிமையானவர்கள். மேலும் ஒரு நாளைக்கு சராசரி 14 மணி நேரத்தை இதற்காக செலவிடுகிறார்களாம். செக்ஸுக்காக கூட இப்படி மெனக்கெடுவதில்லையாம்.
இன்னும் படுக்கை அறையில் பக்கத்தில் மனைவியோ அல்லது காதலியோ இருந்தால் கூட அப்போது கூட பேஸ்புக் அல்லது ட்விட்டர் பற்றி நினைக்கிறார்களாம்.
இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், செக்ஸ், சிகரெட், போதைப் பழக்கம், விளையாட்டு என அனைத்தையும் தகர்த்துத் தரைமட்டமாக்கும் அளவுக்கு இந்த பேஸ்புக், ட்விட்டர் பழக்கம் விஸ்வரூபம் எடுத்து நிற்பதாக கூறியுள்ளனர். இது வருங்கால சந்ததிகளை ஒரு மனநோயாளியாக்கி விடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக