விடுதலை புலிகள் எங்கே, எப்படி, யாரிடம் யுத்தத்துக்கு ஆயுதங்கள் வாங்கினார்கள்?
விடுதலைப் புலிகளின் மூன்று ஆயுதக் கப்பல்கள் இலங்கை கடற்படை கப்பல்களால் இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள கடலில் வைத்து அடுத்தடுத்து தாக்கி அழிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், அப்பகுதியில் நின்றிருந்த 4-வது கப்பல் நகர்ந்து, இந்தோனேசிய கடல் எல்லைக்குள் சென்றுவிட்டது.
இந்த நேரத்தில் இலங்கை கடல்படை கப்பல்களில் எரிபொருள் அளவு குறைந்து போய்விட்டது.
இந்த தகவல் இலங்கையில் உள்ள கடற்படை தலைமையகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, மேற்கொண்டு ஆபரேஷனை தொடராமல் இலங்கையின் திருகோணமலை துறைமுகத்துக்கு திரும்பி வருமாறு கடற்படை தளபதி வசந்த கரணகொட உத்தரவிட்டார்.
இலங்கை கடற்படையின் முதலாவது ஆழ்கடல் ஆபரேஷனில், விடுதலைப் புலிகளின் 3 கப்பல்களையே அழிக்க முடிந்தது.
இந்த இடத்தில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் எதற்காக இந்தோனேசியா அருகே நின்றிருந்தன என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதை புரிய வைப்பதற்கு, விடுதலைப் புலிகள் ஆயுதம் வாங்கும், மற்றும் அதை இலங்கைக்கு கொண்டுவரும் ஆபரேஷன் எப்படி நடந்தது என்று தெரிந்து கொள்வது அவசியம்.
விடுதலைப் புலிகளின் ஆயுதம் வாங்கும் பிரிவுக்கு கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தலைவராக இருந்த காலத்தில் (2002-ம் ஆண்டு வரை) இந்த ஆபரேஷனுக்காக தயார் செய்த தளம், இந்தோனேசியா. ஆனால், அவர்கள் இந்தோனேசியாவில் ஆயுதம் எதையும் வாங்குவதில்லை. ஆயுதங்களை இந்தோனேசியாவுக்குள் இறக்குவதும் இல்லை.
இந்த விவகாரம், இந்தோனேசிய உளவுத்துறைக்கும் தெரிந்திருந்தது. தமது நாட்டுக்குள் விடுதலைப் புலிகளின் ஆயுத நடமாட்டம் கிடையாது என்பதால், அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள்.
அப்படியானால், இந்தோனேசியாவில் என்ன செய்தார்கள் விடுதலைப் புலிகள்?
புலிகளின் காலியான கப்பல்கள் இந்தோனேசிய துறைமுகங்களுக்கு வந்து தங்கும். கப்பல் கேப்டன், மாலுமிகள் தங்குவதும் இந்தோனேசியாவில்தான். ஆயுதம் தவிர்ந்த மற்றைய பொருட்கள் வாங்கப்படுவதும், வேறு இடங்களில் இருந்து கொண்டுவந்து ஸ்டோர் பண்ணப்படுவதும், இந்தோனேசியாவில்தான்.
உதாரணமாக, யுத்தத்தில் காயமடையும் விடுதலைப் புலிகளுக்காக மருந்துகள், இந்தோனேசியாவில் வாங்கப்படும். வேறு சில உணவுப் பொருட்களும் அங்கு வாங்கப்படும்.
விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவினரின் படகுகளுக்கு தேவையான அவுட்போர்ட் மோட்டார்கள், ஜப்பானில் இருந்து இந்தோனேசியாவுக்கு கொண்டுவரப்பட்டு, இந்தோனேசியாவில் ஸ்டோர் பண்ணப்படும். அதேபோல, விடுதலைப்புலிகள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள், மலேசியாவில் வாங்கப்பட்டு, இந்தோனேசியாவுக்கு கொண்டு வரப்பட்டு ஸ்டோர் பண்ணப்படும்.
இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் காலியான கப்பல்களில் இவை ஏற்றப்படும். அந்த சரக்குடன் கப்பல் கிளம்பும்.
இந்தோனேசிய கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு இதில் எந்த ஆட்சேபமும் கிடையாது. கப்பலில் ஆயுதங்கள் ஏதும் கிடையாது.
ஆயுதங்கள் வாங்கப்படுவது, வட கொரியாவில்.
வட கொரியா ஆயுதத் தொழிற்சாலையின் ஏஜென்ட் ஒருவர், இந்தோனேசியா அல்லது தாய்லாந்துக்கு வருவார். லீ என்று அழைக்கப்படும் இந்த நபரின் நிஜ பெயர் சூ இங் பார்க். இவருடன் டீல் பேசி, ஆயுதங்களை மொத்த விலையில் வாங்குவார் கேபி.
இந்த ஆயுதங்கள் வாங்குவதற்கு லைன்-ஆஃப்-கிரெடிட் கிடையாது. ‘கையிலே காசு’ டீல்தான். ஆனால், ஆயுதங்கள் கப்பலில் லோட் பண்ணப்பட்ட பின்னரே காசு.
டீல் பேசப்பட்டு முடிந்ததும், இந்தோனேசியாவில் இருந்து புறப்படும் கப்பல் வட கொரியா செல்லும். கப்பல் அங்கு சென்றவுடன், ஆயுதங்கள் கப்பலில் ஏற்றப்படும். ஆனால், பணம் கொடுக்கும்வரை கப்பல் அங்கிருந்து நகர முடியாது. பணம் தாய்லாந்தில் உள்ள பேங்க் ஒன்றில் போடப்படும். அந்த தகவல் உறுதி செய்யப்பட்டபின், கப்பல் வட கொரியாவில் இருந்து கிளம்பி, இலங்கை கடல்பகுதி அருகே வரை வரும்.
கப்பல் எப்போது வரும் என்ற தகவல் கடல்புலிகளுக்கு அறிவிக்கப்பட, அவர்கள் தமது படகுகளில் இலங்கை கடல் எல்லைக்கு சற்று வெளியே வந்து ஆயுதங்களை ஏற்றிச் செல்வார்கள்.
இதுதான், 2002-ம் ஆண்டுவரை கே.பி. பொறுப்பாளராக இருந்த காலத்தின் நடைமுறை.
2002-ம் ஆண்டு, பொறுப்புகள் கே.பி.யிடம் இருந்து பறிக்கப்பட்டு வன்னியில் இருந்த காஸ்ட்ரோவிடம் கொடுக்கப்பட்டது. அதன்பின், ஆயுத ஆபரேஷனில் இருந்த கே.பி.யின் ஆட்கள் அனைவரும் மாற்றப்பட்டு, காஸ்ட்ரோவின் ஆட்கள் நியமிக்கப்பட்டனர்.
பல ஆண்டுகளாக இந்த ஆபரேஷனில் ஈடுபட்டிருந்த கே.பி.யின் ஆட்கள் ஒதுங்கிக் கொண்டனர். சிலர் வேறு வேலைகளில் ஈடுபட தொடங்கினர். கே.பி.யும் ஒதுங்கிக் கொண்டார். அவருக்கு மாதாமாதம் சிறிய தொகை பென்ஷன் போல வழங்கப்பட்டது.
புதிதாக பொறுப்பேற்றவர்களும், இந்தோனேசியாவையே தமது பிரதான தளமாக பயன்படுத்தினார்கள். அதே வட கொரிய ஆயுத ஏஜென்ட்டை பயன்படுத்தினார்கள்.
ஆனால், முன்புபோல ஆயுதங்களை ஏற்றியபின் காசு என்று கே.பி. ஏற்படுத்தி வைத்திருந்த டீல் மாறியது. அதுவும் பல பிரச்னைகளுக்கு காரணமாகியது.
(தொடரும்)
விறுவிறுப்பு இணையம்

அத்தியாயம் 25

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக