வெள்ளி, 26 ஜூலை, 2013

புற்றுநோயின் கொடூரத்தால் உருமாற்றமடைந்துள்ள மனீஷா கொய்ராலா!!!

``இப்போதுள்ள தோற்றத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். முன்னரை விட தைரியமும் தன்னம்பிக்கையும் இப்போது அதிகரித்திருக்கிறது''


கடுமையான புற்றுநோயின் தாக்கத்திலிருந்து மீண்டுள்ள நடிகை மனீஷா கொய்ராலா, தனது தற்போதைய தோற்றம் குறித்த புதிய புகைப்படம் ஒன்றை, டுவிட்டர் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த புகைப்படம் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பொலிவூட், கோலிவூட் என இந்தி மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை மனீஷா கொய்ராலா.

புற்றுநோயின் தாக்கத்தினால் கடந்த பல மாதங்களாக பெரும் அவதியுற்று வந்த அவர், தீவிர சிகிச்சையின் பின்னர் இப்போது உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், டுவிட்டர் தளத்தில் தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்­டுள்ளார். அதில், மொட்டைத்தலையுடன் தோற்றமளிக்கும் அவர், ஆளே தெரியாமல் உருமாற்றமடைந்துள்ளார்.

இந்த புதிய தோற்றம் குறித்து அவர் தெரிவிக்கையில்,

``இப்போதுள்ள எனது தோற்றத்தை அப்படியே நான் ஏற்றுக்கொள்கிறேன். வெளி உலகுக்கும் இதனை தெரிவிக்கிறேன்.

எனது கடந்த காலம், கறுப்பு வெள்ளையாக இருந்தது. ஆனால், நிகழ்காலம் நன்றாக உள்ளது. கடவுள் மகிழ்ச்சியாக வைப்பார்.

மேலும், இந்த தோற்றத்துக்காக தான் வருத்தம் அடைய வில்லை. தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இதனாலேயே, எனது இப்போதைய தோற்றம் குறித்த புகைப்படத்தை வெளியிட தூண்டியுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல