திபெத்தின் சில பிராந்தியங்களில் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கமோ அன்றி தகனமோ செய்யாது, அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி கழுகுகளுக்கு உணவாக அளிக்கப்படும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
திபெத்தின் சீன மாகாணங்களான கிங்காய், இன்னர் மொங்கோலியா மற்றும் மொங்கோலியாவில் இத்தகைய நடைமுறை செயற்படுத்தப்பட்டு வருகிறது.
கழுகுகள் உயர்ந்த குன்றுப் பகுதியிலேயே ஓய்வெடுப்பதால் இந்த செயற்கிரமமானது 'வான நல்லடக்கம்' எனப்படுகிறது.
மேற்படி செயற்கிரமத்திற்கு சடலத்தை பதப்படுத்த வேண்டியதில்லை என்பதுடன் சவப்பெட்டியும் அவசியமில்லை என பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
இந்த வான நல்லடக்கம் செயற்கிரமத்தை பின்பற்றுபவர்கள் வஜ்ரயனா பெளத்த மதப் பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.
இறந்த மனிதனின் சதையை கழுகுகளுக்கு உணவாக வழங்குவதன் மூலம் அவை உணவுக்காக சிறிய பிராணிகளை உண்பதை தடுத்து அந்தப் பிராணிகளைக் காப்பாற்ற முடிகிறது என இந்த செயற்கிரமத்தை பின்பற்றுபவர்கள் கூறுகின்றனர்.
மனித சடல பாகங்கள் கழுகுகளுக்கு இரையாக்கப்படுவதற்காக 'மெளன கோபுரம்' என அழைக்கப்படும் பகுதியில் ஒருவருட காலம் வரை வைக்கப்படுகின்றன.
ஆண்களது சடல பாகங்களும் பெண்களது சடல பாகங்களும் அந்தக் கோபு ரத்தின் வெவ்வேறு பகுதி களில் வைக்கப்படு கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக