சென்னை: நடிகை மஞ்சுளாவின் மரணம் தமிழ் சினிமா கலைஞர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.தமிழ் திரையுலகமே ஒட்டுமொத்தமாக அவருக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டுவந்ததே அதற்கு சாட்சியாக அமைந்தது.
காரணம், மஞ்சுளா - விஜயகுமார் தம்பதிகள் திரையுலகில் பழகிய விதம் அப்படி. அவர்களுக்கு அனைவருமே நண்பர்கள்தான்.
மஞ்சுளா மறைவுச் செய்தி கேட்டதுமே, சமூக வலைத்தளங்களில் மிகுந்த வருத்தத்துடன் அதைத் தெரிவித்த கலைஞர்கள், அவருடன் பழகிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
காரணம், மஞ்சுளா - விஜயகுமார் தம்பதிகள் திரையுலகில் பழகிய விதம் அப்படி. அவர்களுக்கு அனைவருமே நண்பர்கள்தான்.
மஞ்சுளா மறைவுச் செய்தி கேட்டதுமே, சமூக வலைத்தளங்களில் மிகுந்த வருத்தத்துடன் அதைத் தெரிவித்த கலைஞர்கள், அவருடன் பழகிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
குஷ்பு, ராதிகா
இவர்களில் முக்கியமானவர்கள் குஷ்பு, ராதிகா போன்ற இன்றைய சீனியர் நடிகைகள்தான். இவர்கள் மஞ்சுளா குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர்கள். இவர்களில் ராதிகா தன் கணவர் சரத்குமாருடன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். ராதிகா, பூர்ணிமா பாக்யராஜ், சங்கீதா ஆகியோர் விஜயகுமாரையும் அவர் மகள்களையும் கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டு அழுதனர்.
ரம்யா கிருஷ்ணன்
மஞ்சுளாவுக்கு மிக நெருங்கிய நடிகைகளுள் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். மஞ்சுளா மறைவுச் செய்தி அறிந்ததும் உடனடியாக சென்னைக்கு வந்து மஞ்சுளாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
சினேகா
மஞ்சுளா - விஜயகுமார் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான இன்னொரு முன்னணி நடிகை சினேகா. இன்று அவர் தன் கணவர் பிரசன்னாவுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்த் - பிரேமலதா
தேமுதிக தலைவரும் விஜயகுமாரின் ஆரம்ப கால நண்பர்களில் ஒருவருமான விஜயகாந்தும் அவர் மனைவி பிரேமலதாவும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, விஜயகுமாருக்கு ஆறுதல் கூறினர்.
கவுண்டமணி, பாக்யராஜ்
கவுண்டமணி, பாக்யராஜ் ஆகியோருடன் அவர்களின் ஆரம்ப நாட்களிலிருந்தே நெருக்கமான நட்பு கொண்டவர் விஜயகுமார். மஞ்சுளாவின் மறைவுச் செய்தி தங்களை மிகவும் பாதித்ததாகக் கூறி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பாக்யராஜுடன் மனைவி பூர்ணிமாவும் வந்திருந்தார்.
மனோரமா
மஞ்சுளா மறைந்தார் என்பதை என்னால் நம்ப முடியலையே என்ற அழுதபடி அஞ்சலி செலுத்தினார் மனோரமா. இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், நடிகர் சங்க செயலாளர் ராதாரவி, நடிகர் ஆர் பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Thatstamil
Thatstamil









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக