புதன், 24 ஜூலை, 2013

பெண்களுக்கு பகட்டில்லாத ஆண்களைத் தான் மிகவும் பிடிக்கும்..!

தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும், தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் ஆண்களுக்கு பிடிக்கும் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

மனதை மயக்கும் சிவப்பு

பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் காதல் உணர்வு ஏற்படுகிறதாம். ஏனெனில் சிவப்பு நிறத்தில் ஆடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என கூறப்படுகிறது.

ஆண்களை கவரும் பெண்கள்

பெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான். இதில் கண்களுக்கு மேக்கப் போடாத பெண்களை குறைந்த ஆண்களுக்கு மட்டுமே பிடிக்குமாம். சில இளைஞர்களுக்கு தான் இது போன்ற கண்கள் பிடிக்குமாம். ஆனால், நகரத்தில் வசிக்கும் இளைஞர்களுக்கு ஒவ்வொரு அழகு தான் பெரிதும் கவர்கின்றதாம்

ஐ லைனர் போடும் பெண்கள் பெரும்பாலான இளைஞர்களை வசீகரிக்கின்றனர்.

இயற்கை அழகை ரசிக்கும் இளஞைர்கள்

சில ஆண்கள் ஒப்பனை செய்யும் பெண்களை வெறுக்கின்றார்களாம். அவர்கள் என்ன தான் இருந்தாலும் பெண்களுக்கு இயற்கையான அழகே, தனிதான் என்று ரசிக்கின்றனர். இப்படி வேறுப்பட்டு இருந்தாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பது பெண்களின் கண்கள் தான் என்பது மற்றொரு விசேஷம்…! கண்ணுக்கு மை அழகு… கவிதைக்கு பொய் அழகு என்பது போல பெண்ணின் கண்ணுக்கு ஒப்பனை அழகு தான் என்கிறார்கள்.

பகட்லில்லாத ஆண்கள்

ஆண்கள் அணியும் உடையின் வர்ணத்தில் சிவப்பு நிறம் இருந்தாலே போதும், தன்னை அறியாமலே பெண்கள் திரும்பிப்பார்ப்பார்கள். சிவப்பு நிறத்தில் ஆடைகள் போடும் ஆண்களை கவர்ச்சிகரமானவராக பெண்கள் உணர்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பெண்களுக்கு பகட்டில்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும். எளிமையான, நகைச்சுவை உணர்வு, பேச்சு திறமை கொண்ட ஆண்களை தான் பெண்கள் சுற்றிச் சுற்றி வருவார்களாம். பெண்களை கவர ஆண்களுக்கான செலவு குறைவுதான். ஆனால் ஆண்களை கவர வேண்டும் என்றால் பெண்களுக்குத்தான் செலவு அதிகம் ஆகும் இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல