அமெரிக்க ஒக்லஹொமாவிலுள்ள துல்ஸா எனும் இடத்திலுள்ள ஒலொகஹ் ஏரிக்கரையோரமாக அண்மையில் இணை பிரியாத காதல் ஜோடியாக வலம் வந்த அட்றின் அன்ட்றூஸ் என்ற இளைஞனும் கெரி ஹில் என்ற யுவதியும் பலரதும் கவனத்தை ஈர்ப்பவர்களாக மாறியிருந்தனர்.
அவர்கள் இருவரும் ஏனைய காதல் ஜோடிகள் போன்று காணப்பட்டாலும் இளைஞனான அட்றின் (17வயது) பிறப்பில் பெண் என்பதும் யுவதியான கெரி ஹில் (19 வயது) பிறப்பில் ஆண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு வருடத்துக்கு முன் பெண்ணாக மாறுவதற்கான தனது விருப்பத்தை பல்கலைக்கழக மாணவியான கெரி தெரிவித்ததையடுத்து, அவரது விருப்பத்தை உள்ளூர் பத்திரிகையொன்றில் வாசித்து அறிந்து கொண்ட நன்கொடை வழங்குனர் ஒருவர் அவரது பால்மாற்ற சிகிச்சைக்காக 35,000 அமெரிக்க டொலரை அன்பளிப்பாக வழங்கினார்.
இதனையடுத்து கெரியுடன் காதல் வசப்பட்டிருந்த அட்றின் அவருடனான காதலைத் தொடரும் முகமாக தனது மார்பகங்களை அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றி ஆணாக மாறியுள்ளார்.
எனினும் ஒருவித அச்சம் காரணமான தனது அகற்றப்பட்ட மார்பு பகுதியை சிறிது காலம் மறைத்து வந்த அட்றின், கடந்த ஜூன் மாதம் திறந்த மார்புடன் பொது இடத்தில் முதன் முதலாக தோன்றினார்.
எமரெல்ட் என்ற இயற்பெயரைக் கொண்ட அட்றினும் லூக் என்ற இயற்பெயரைக் கொண்ட கெரியும் இரு வருடங்களுக்கு முன் பால் மாற்று சிகிச்சைக்கு ஆதரவளிக்கும் குழுவொன்றின் கூட்டத்தில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டனர்.
தாம் பால்மாற்று சிகிச்சையை செய்து கொண்ட ஆரம்ப காலகட்டத்தில் சக மாணவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியதாக அட்றினும் கெரியும் தெரிவித்தனர்.
எனினும் காலப்போக்கில் மக்களின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு தம்மை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புவதாக அவர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக