புதன், 24 ஜூலை, 2013

நெல் வயலில் மர்லின் மன்றோ (படங்கள் இணைப்பு)

நெல் வயலொன்றில் 7 வெவ்வேறு வர்ணமுடைய 9 நெல் தானிய வகைகளைப் பயன்படுத்தி மறைந்த ஹொலிவூட் நடிகை மர்லின் மன்றோவின் உருவப் படத்தை வடிவமைத்து ஜப்பானிய கலைஞர்கள் புதுமை படைத்துள்ளனர்.

1955 ஆம் ஆண்டு வெளிவந்த ‘த செவன் இயர் இட்ச்’ திரைப்படத்தில் மர்லின் மன்றோ தனது ஆடையின் கீழ் பகுதி பறக்க கலைநயத்துடன் தோன்றும் இந்தக் காட்சி உலகளாவிய ரீதியில் பெரும் பிரபலம் பெற்ற ஒன்றாக உள்ளது.

இந்நி­லையில் வட ஜப்பானில் அயோமொரி பிராந்தியத்தில் இனகடடெமுரா கிராமத்தில் வெவ்வேறு நெல் தானியங்களை குறிப்பிட்ட ஒழுங்கில் பயிர்ச்செய்கை செய்ததன் மூலம் மேற்படி மர்லின் மன்றோவின் உருவப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை கவரும் முகமாக நிலத் தோற்ற அமைப்பில் கலைப் படைப்பு­களை சிருஷ்டிக்கும் செயற்பாட்டில் கடந்த 21 வருட காலமாக மேற்படி கிராமவாசிகள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நி­லையில், தற்போது 140 மீற்றர் நீளமும், 100 மீற்றர் அகலமுமுடைய நெல் வயலில் வடிவமைக்கப்பட்டுள்ள மர்லின் மன்றோவின் உருவப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் மாத மத்தி வரை காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல