புதன், 24 ஜூலை, 2013

'டீன் ஏஜ்' பிள்ளைகளைப் புரிந்து கொள்ளுங்கள்!

இவ்வளவு நாளும் குழந்தையாக வலம் வந்தவர்கள் திடீரென இளம்பெண்­ணாக, பருவ வயதுக்குரிய உடல், மன மாற்றங்களுடன் வளர்ந்து நிற்கும் போது, அத்தனை இரசிப்பும் திடீரென ஒரு நாள் தவிப்பாக மாறலாம். அவள் வளர்ந்து,அழகுடன் மலர்வதைக் கண்டு பூரிப்படையும் தாய் மனம் அதே நேரத்தில் அவளின் வித்தியாசமான நடவடிக்கைகளினால் திகிலடையும்.

‘‘ரொம்ப புத்திசாலித்தனமாக எல்லா விஷயமும் பேசுவா. ஆனா, சில விடயங்களை நான் சொன்னா கேட்கவே மாட்டேங்கறா...’’ என சில தாய்மார் புலம்புவ­துண்டு.

‘‘என் பொண்ணு டீன் ஏஜ்ல அடியெடுத்து வச்சாலும் வச்சா... ஒவ்வொரு நாளும் எனக்கு அவ சி.பி.ஐ விசாரணை நடத்துற மாதிரி இருக்கு. அவ கேட்கற கேள்வி­களும்,அவளோட நடவடிக்கைகளும், ‘நான் நல்ல அம்மாதானா’ன்னு என் மேலேயே எனக்கு சந்தேகத்தை உண்டாக்குது’’ எனப் புலம்பித் தீர்த்தார் இன்னொரு அம்மா.

டீன் ஏஜ் மகள் வைத்திருக்கிற பெரும்பாலான அம்மாக்களின் நிலை இதுதான். எப்போதும் எதற்கெடுத்தாலும் மகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கிற அம்மாக்கள் ஏராளம். உங்கள் மகள், சிறு வயதில் எல்லாவற்றையும் உங்களுடன் பகிர்ந்திருப்பாள். அவள் வயதுப் பிள்ளை­களுடன் சண்டை போட்டுக் கொண்டு உடனே உங்களுடன் வந்து அதைப் பற்றி அழுது புலம்பித் தீர்த்திருப்பாள். ஆனால், வளர்ந்த பின், எல்லாமே இரகசியம்தான்!

“வெளியே போயிட்டு வீட்டுக்கு வந்ததும் நேரா அவரூமுக்கு போய் கதவை மூடிக்கிறா. நான் எதைக் கேட்டாலும், ‘எப்போ பார்த்தாலும் ஏதாவது கேள்வி கேட்டுட்டே இருக்கீங்களேன்னு கத்திட்டு போறா. எப்போதும் ‘உம்’­முன்னு மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிறா’’ என்றும் இன்னும் சிலர் புலம்புவதுண்டு

அம்மாக்களுக்கும் ‘டீன் ஏஜ்’ பெண்களுக்கும் இடையே உண்டாகும் இந்த விரிசலுக்கு பல காரணங்கள் உண்டு. அந்தக் காரணங்களைப் புரிந்து கொண்டு, அவர்களைக் கைப்பிடித்து சரியான பாதையைக் காட்ட வேண்டிய பொறுப்பு உங்களுடையதே!

டீன் ஏஜில் அந்த வயதுக்கே உரிய குழப்பங்கள், நம்பிக்கைகள், ‘சரியா? தவறா’ என்கிற கேள்விகள், தயக்கங்கள் என மன அழுத்தத்தை உண்டாக்கும் மனநி­லையில் இருப்பார்கள் பெண் குழந்தைகள். ஆனால், பல அம்மாக்கள் அதைப் புரிந்து கொள்வதில்லை. எப்போதும் புத்தகமும் கையுமாக, படிப்பையும் எதிர்காலத்தையும் பற்றிய சிந்தனையில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு மட்டும்தான் ஸ்ட்ரெஸ் அதாவது மன உளைச்சல் வரும் என்றில்லை.

எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் சுரப்பிகள் சுரக்கும் இரசாயனங்களின் தாக்கத்தினாலும், அவர்­ளின் சுற்றுச்
சூழலினால் விளையும் பயங்களினாலும் சாதாரண விடயங்கள் கூட அச்சுறுத்தலை உண்டாக்கி அவர்களுடைய எண்ணங்களிலும் நடவடிக்கைகளிலும் மாற்றத்தை உண்டாக்கும். இத்தருணத்தில் முக்கியமாக பள்ளியிலிருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் வரும் எதிர்பார்ப்புகளும் வற்புறுத்தல்களும் அவர்களை அழுத்தும்போது அவர்களால் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. ஏழாவது, எட்டாவது படிக்கிற பிள்ளைகளுக்குக்கூட இன்று மனச்சுமைகள் ஏராளம். இதனால் வீடும் பாடசாலையும் அவர்களுக்கு சிறைகளைப் போலவே தோன்றும். ‘‘திடீரெனப் பள்ளிக்­கூடம் செல்ல மறுப்பதும் அடிக்கடி லீவு போடுவதும் கூட நடப்ப­துண்டு’ ‘ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்த அடுத்த நிமிஷமே ஹோம் வேர்க் பண்ண வேண்டும் . டியூஷனுக்கும் போக வேண்டும் வீட்டுக்கு வந்து இரவு சாப்பாட்டு நேரம் வரைக்கும் படிக்க வேண்டும். இது தான் அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது.

பாடசாலைக்குச் செல்லும் பெண் பிள்ளைகளுக்கு பல சவால்கள் இன்று உண்டு. புதிய புதிய தேவைகள்... புதுப்புது சவால்கள் எனப் பாடசாலை இறுதியை நோக்கி நகரும் பிள்ளைகளின் உலகத்தில் தினம் ஒரு அனுபவம். பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள், பாடசாலையின் தேவைகள், தன் இயற்கைத் தேவைகள்,நண்பர்களின் தாக்கம், எதிர்கால சிந்தனை என பல நிலைகளில் இவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.

இந்த அழுத்த நிலையின் காரணமாக இப்பெண்கள் ‘மூடி’யாக,எரிச்சலுடன்,கோபமாக, யாரிடமும் பேசாத அமைதியாக,அதீத களைப்பாக, வலிகளை உணர்வதாக, உடன் பிறந்தவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு, செல்போனும் கையுமாக, ஹோம்வேர்க் செய்வதிலிருந்து தப்பித்தவாறு,, ஒதுங்கியவாறு நடந்து கொள்ளலாம்.

பதின்ம வயதுப் பெண்கள் உடலளவில் வளர்ந்து விட்டாலும் மனதளவில் குழந்தைகள்தான்.

இந்தக் குழப்­ப­மான பரு­வத்தில் உங்கள் ஆத­ரவு மிக அதி­க­மாக அவர்­க­ளுக்குத் தேவை. தன்­னு­டைய மன அழுத்­தத்­தி­லி­ருந்து விடு­பட அவள் தன் நண்­பர்­க­ளுடன் அதிக நேரம் உரை­யா­டலில் செல­வ­ழிக்­கலாம்.

இது பெற்­றோரால் அலட்­சியம்,திமிர், அன்­பற்ற நிலை எனப் பல­வி­த­மாக தப்­பர்த்தம் செய்து கொள்­ளப்­ப­டு­கி­றது. தங்கள் மேல் அன்பு குறைந்து விட்­டது போன்றும், தங்­களை விட்டு நண்­பர்­களே கதி­யெனப் பிள்ளை பிரிந்து போய் விட்­டது போன்றும் உணர்­வார்கள்.

இதனால் அம்மாக்கள் பிள்­ளையை நச்சரிப்­பார்கள். பிள்ளைகளும் இதற்குப் பதிலடி கொடுக்க... அங்கே ஒரு நச்சு வட்டம் உருவாகி விடுகி­றது. நம்பிக்கையும்,நல்ல பேச்சு வார்த்தையும்தான் இந்தச் சூழ்நிலையில் உங்கள் மகளைத் தேற்றக்கூடிய விடயங்கள். மகளின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் நடவடிக்கையையும் குறுக்கு விசாரணை செய்கிற வக்கீல் மாதிரிப் பார்க்காமல்,பொசிட்டிவாக பார்க்கப் பழகுங்கள்.

அவளின் குழப்பங்களையும் கஷ்டங்களையும் புரிந்து, உணர்ந்து அவளுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தருகிற வகையில் நடந்து கொள்ளுங்கள். இந்த சில வருடங்களை நீங்கள் சரியாகக் கையாண்டு விட்டால், பிறகு உங்கள்
அம்மா மகள் உறவில் சிக்கல்களே வராது! ‘எல்லாமே போச்சு’,‘என் மகள் கைக்கு அகப்படாம போயிட்டா’ என்றெல்லாம் புலம்புவதை நிறுத்தி விட்டு அவள் என்ன செய்தாலும் அவளை அன்புடன் அரவணையுங்கள். என்ன நடந்தாலும் நீங்கள் அவளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என உணர்த்துங்கள். உங்கள் மகளின் உலகத்தில் நீங்கள் ஒரு பாகமாக ஒன்றி விட்டால்தான், அவள் தவறு செய்யும்போது அவளை நீங்கள் கண்டித்தால் உங்களை மதித்து அவள் புரிந்து செயற்படுவாள்.

குழப்பமான சூழ்நிலையில் தன்னம்பிக்கை தளரும் போது ‘நான் அம்மாகிட்டே பேசலாம்’ என்ற நம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் நீங்கள் அவளைக் கையாண்டால் அவள் எப்பொழுதும் உங்கள் கைகளிலிருந்து நழுவ மாட்டாள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல