-மக்கள் பீதியால் தலைதெறிக்க ஓட்டம்
அமெரிக்க லாஸ் வெகாஸை சேர்ந்த மாயாஜால வித்தைக்காரரும் நகைச்சுவைக் கலைஞருமான அன்டி குரொஸ், தனது உடலின் கால்களற்ற மேல் பகுதி அந்தரத்தில் மிதக்க ஒரு கையில் தனது உடலின் கீழ்ப் பகுதியை ஏந்தியவாறு வீதியொன்றின் வழியாக நடந்து பாதையில் சென்றவர்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளார்.
அவரது விசித்திர தோற்றப்பாட்டைக் கண்டு பீதியடைந்த மக்கள் கூச்சலிட்டவாறு வீதியில் தலைதெறிக்க ஓடியுள்ளனர்.
சிலர் தப்பியோடும் முயற்சியில் நிலத்தில் விழுந்துள்ளனர்.
தான் எவ்வாறு இந்த அச்சமூட்டும் மாயாஜாலத்தை செய்தார் என்பது தொடர்பில் தகவல் எதனையும் வெளியிட மறுத்துள்ள அன்டிகுரொஸ், தனது மாயாஜாலத்தின் இரகசியத்தை பார்வையாளர்களே ஊகித்து அறியுமாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக