விசிலடிச்சான் குஞ்சுகள் - என்ன ஒரு புது வார்த்தை என நினைக்கும் சில நல்லுலங்களுக்கு......... ஒவ்வொரு திரையரங்கிலும் ஆரம்ப நாள் முதல் இன்று வரை உள்ள ஒரு விஷயம் தரை டிக்கட்கள் அதன் பின் மாடர்ன் சொஸைட்டி திரையரங்குகளும் ரூபாய் 2.90 என்னும் டிக்கட் ஒன்று உண்டு அது திரைக்கும் முன் 3 ரோக்கல் கட்டையால் செய்யபட்ட இருக்கைகளை கொண்ட இந்த சீட்களை பிடிக்கும் பெரும்பாலோர்தான் இந்த விசிலடிசசன் குஞ்சுகள்! அது மட்டுமின்றி இவர்கள் தான் சினிமாவின் பிம்பத்தை பார்த்து உணர்ச்சிவசப்படுவார்கள்.
பெரும்பாலும் இடைவிடாம்ல் விசில் அடித்து கொண்டே படத்தை காணுவர். தனக்கு பிடித்த ஹீரோவை கையில் சூடம் ஏற்றி வணங்குவர் ஒவ்வொரு காட்சியிலும் வில்லன்களை சபிப்பர் அந்த வில்லனை நோக்கி செருப்பை ஏன் கத்தியை வீசி திரையைக் கூட கிழித்திருக்கின்றனர் இந்த குஞ்சுகள். இப்படி பட்ட ஒரு கூட்டம் ஒவ்வொரு ஊரிலும் உண்டு அதனால் தான் என்னவோ பெரும்பாலும் குடும்பத்துடன் முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு படம் பார்க்க செல்ல மாட்டார்கள் ஏன் என்றால் இவர்களின் இரன்டாம் தர வசனங்கள் படம் முழுதும் அடிக்கும் சீட்டிகைகளும் படம் பார்க்கவே வைக்காது.
இது கொஞ்சம் மாறி செகன்ட் கிளாஸ் மற்றும் முதல் வகுப்பு / பால்கனி வரை வந்தது. ஆனாலும் சில திரையரங்குகளில் இது இல்லாமல் இருந்த காரணம் சத்யம் போன்ற திரையரங்குகளில் விசில் அடித்து இந்த மாதிரி கமென்ட் செய்தால் புடதியில் கை வைத்து வெளியே தள்ளிவிடுவார்கள் என்று அஞ்சியே அன்று மட்டும் நல்ல சிட்டிசன்களாய் படம் பார்த்து பின்பு உதயம் போன்ற திரையரங்குக்கு போய் வழக்கம் போல இந்த விசிலடிச்சான் குஞ்சுகளின் அராஜகம் தொடரும்.......
அந்த விசிலடிச்சான் குஞ்சுகளை பெரும்பாலும் இங்கிருக்கும் ஃபேஸ்புக் சமூகம் அவாய்ட் செய்யும் ஏன் என்றால் தான் ஒரு டீஸன்ட் என்னும் இமேஜை ஹைட்ராலிக் ஜாக் மூலம் ஓங்கி உயர்த்தி நிறுத்துவது தான். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் எந்த ஒரு நடிக நடிகை பர்ஸனல் விஷயத்தையும் தன் பங்குக்கு ஜாதி / மதம் / தனிபட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் எக்ஸ்ட்ராவாய் இரண்டு பிட்டை கூட்டி போட்டு கொளுத்து விடுவர்.
இதை சிலர் இன்னு தன் பங்கிற்க்கு அட்வைஸ் / அனலைஸிஸ் / அவேர்னெஸ் என்று மென்று கொன்று களைவார்கள். மேலும் சினிமா அல்லது வேறு எந்த ஒரு பிரபலத்தையும் பற்றி பேசினாலே தானும் ஒரு பெரிய அறிவாளி என்னும் இவர்கள் இன்னும் மாடர்ன் சொசைட்டி விசிலடைச்சான் குஞ்சுகள் தான். சேரன் எந்த ஜாதி எந்த மதம் எந்த மகன் எந்த மகள் எது வாயினும் நீங்கள் உங்கள் நெளிந்த சொம்புகளுடன் சென்று பஞ்சாயத்து என்ற பெயரில் உளறுவது எத்தனை அபத்தம். இது ஒருபுறமிருக்க மகளை பெற்றவன் என்ற உரிமையில் நான் இதை கண்டிக்கிறேன் என்று இன்னொரு சைடு உரச – ஏன் மகளை பெத்தவன் மட்டும் தான் இதை நியாயபடுத்த வேண்டுமா ? மத்தவன் அவர் மகளூக்கோ அல்லது எங்கோ இருக்கும் சந்துருக்கு சப்போர்ட் செய்யணுமா? இதில் பலர் சந்துருவின் குடும்ப பிண்ணனியை ஆராய்ந்து தீஸிஸ் எழுத, பலர் புகைந்து கொண்டு இருக்கும் ஜாதி தீக்கு நன்கு ஊதி கொழுந்து விட்டு எரியவைக்க முயல்வதை பார்த்தால் கருமம் என்று தலையில் அடித்து கொள்ளத்தான் தோன்றுகிறது.
சினிமா நடிகனோ நடிகையோ வானத்தில் இருந்து உதித்த நட்சத்திரம் அல்ல நானும் நீங்களும் கொடுக்கும் காசில் கொழிக்கும் ஒரு சராசரி ஸ்பெஷல் சாதா தனிமனிதர்கள் தான். நீங்கள் காசு கொடுத்தோ கொடுக்காமாலோ பார்த்த திரைப்படத்தை விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு எல்லா வகையிலும் உண்டு ஏன் என்றால் இவர்கள் பப்ளிக் பர்ஸனாலிட்டீஸ் ஆனால் அவர்களின் தனிபட்ட வாழ்க்கையோ அல்லது அந்தரங்க விஷயங்களையோ விமர்சிக்க அவரை பழிக்க உங்களுக்கு எந்த ஒரு உரிமையையும் எந்த ஒரு அத்தாரிட்டியும் கொடுக்கபடவில்லை என்பதை அறிக.
இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள் இதை நான் செய்யவே இல்லையே என நீங்கள் கூறினால் உங்களை அறிந்தோ அறியாமலோ இந்த விசிலடிச்சான் குஞ்சுகள் உங்களின் நட்பு வட்டத்தில் அவர்கள் நாறுவது மட்டுமில்லாமல் உங்களையும் சேர்த்து நாற வைப்பது மட்டுமில்லாமல் உங்கள் லைக் மைன்டட் புத்தியை மீன் மைன்டட் அல்லது சைக்கோபாத்கள் என்னும் இமேஜை இவர்கள் தருவது உங்கள் சமூக அந்தஸ்த்திர்க்கு நிறைய டேமேஜ் செய்யும். இதை திரை மறைவில் தூபம் போடும் ஜாதி வெறியர்கள் / ஃபேக் ஐடிகள் மற்றும் புரட்சி புண்ணாக்குகள் / எழுத்தாளர் போர்வையில் நடமாடும் மிக்ஸர் வண்டிகள் / கவிதை கான்டாமிருகங்கள் இவர்களுக்கு சப்ஜெக்ட் வேண்டுமெனில் தன் வீட்டு பிரச்சினையை அனலஸி செய்து டாக்டர் விசிலடிச்சான் குஞ்சுகள் என பட்டம் வாங்கலாம். இந்த டாக்டர்களை இனம் கண்டு அழியுங்கள் உங்கள் நட்பு வட்டத்தை ஆரோக்யமாக வைத்திருங்கள் -
நன்றி வணக்கம்.
ஆந்தைரிப்போர்ட்டர்
டைரக்டர் சேரன் மகள் காதலும் நாடகக் காதல்தான் - ராமதாஸ் ஸ்டேட்மென்ட்!
”சேரன் தெரிவித்துள்ள வேறு சில கருத்துக்களையும், குற்றச்சாட்டுகளையும் வைத்து பார்க்கும் போது இதுவும் ஒரு நாடகக் காதலாகவே தோன்றுகிறது. சேரன் கூறியுள்ள கருத்துக்களைத் தான் நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.அனைத்து சமுதாய பேரியக்கத்தின் கூட்டங்களில் கூட இதே கருத்தை வலியுறுத்தி தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழ்திரைப்பட இயக்குனரும், நடிகருமான சேரனின் மகள் தாமினியின் காதல் விவகாரம் பற்றி ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கின்றன. ஒரு பொறுப்புள்ள, பாசமுள்ள தந்தை என்ற வகையில் இந்த விசயத்தில் சேரனின் மனம் எந்த அளவுக்கு காயப்பட்டிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது.
தமது காதலை எதிர்ப்பதாகவும், தனது காதலனை மிரட்டுவதாகவும் சேரன் மீது அவரது மகள் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான விசாரணைக்கு நேர் நின்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேரன், ‘‘எனது மகளின் காதலை நான் முதலில் ஆதரித்தேன். ஆனால், ஒரு தகப்பன் என்ற முறையில் எனது மகளுக்கு கணவனாக வருபவரையும், எனக்கு மருமகனாக வருபவரையும் நல்லவரா, கெட்டவரா என்று பார்க்கக்கூடாதா? ஒரு தவறான பையனை எப்படி எனது மகளின் கணவனாக ஏற்றுக் கொள்ள முடியும்?’’ என்று கேட்டிருக்கிறார். இந்த விசயத்தில் சேரனின் கேள்விகள் நியாயமானவை.
இது தவிர சேரன் தெரிவித்துள்ள வேறு சில கருத்துக்களையும், குற்றச்சாட்டுகளையும் வைத்து பார்க்கும் போது இதுவும் ஒரு நாடகக் காதலாகவே தோன்றுகிறது. சேரன் கூறியுள்ள கருத்துக்களைத் தான் நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
அனைத்து சமுதாய பேரியக்கத்தின் கூட்டங்களில் கூட இதே கருத்தை வலியுறுத்தி தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‘‘பள்ளி, கல்லூரி மாணவிகளின் படிப்பைக் கெடுக்காமல், காதல் நாடகம், கட்டப்பஞ்சாயத்து, பணப் பறிப்பு இல்லாமல், சாதி ஒழிப்பு எனும் போலி வேடம் போடாமல், கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம் ஆகியவற்றுக்கு முன்னுரிமைத் தந்து 21 வயதுக்கு மேல் நடக்கும் காதல் திருமணங்களை நாங்கள் எதிர்க்கவில்லை’’ என்று தீர்மானத்தில் தெளிவாகக் கூறியிருந்தோம்.
எங்களின் நிலைப்பாட்டில் உள்ள நியாயத்தை இயக்குனர் சேரனும், அவரைப் போன்ற சூழலில் உள்ள பெற்றோரும் இப்போது உணர்ந்திருப்பார்கள். இந்த விவகாரத்தில் சென்னை மாநகர காவல்துறை கடைப்பிடித்து வரும் முதிர்ச்சியான அணுகுமுறையும் வரவேற்கத் தக்கது.
சேரனின் மகளும், அவரது காதலரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதற்கான வயதை அடைந்து விட்டவர்கள் என்பதைக் காரணம் காட்டி, அவர்களின் பொறுப்பற்ற செயலுக்கு பச்சைக் கொடி காட்டிவிடாமல், படிப்பை முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், வேலை வாய்ப்பு பெற்று வாழ்க்கையில் நிலை நிறுத்திக் கொண்ட பின்னர் காதல் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அறிவுரை கூறியிருப்பது பாராட்டத்தக்கது.
தருமபுரி இளவரசன் – திவ்யா காதல் நாடகத் திருமண விவகாரத்திலும் அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் இத்தகைய அணுகு முறையை கடைபிடித் திருந்தால், திவ்யாவின் தந்தை நாகராஜன் தேவையின்றி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார். அதைத் தொடர்ந்து நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
ஆனால், முற்போக்கு வாதிகள் என்ற போர்வையில் செயல்பட்டுவரும் சில பிற்போக்கு சக்திகள் ‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்று கூறி படிக்கும் வயதில் காதல் செய்யும்படி பிரச்சாரம் செய்து வருகின்றனர். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுவதற்கும், கலாச்சார சீரழிவுக்கும் மட்டுமே இத்தகைய பிரச்சாரங்கள் வழி வகுக்கும்.
இனி வரும் காலங்களிலாவது நல்லது, கெட்டது அறியாத வயதில் வரும் காதல் பிரச்சினைகளில் அனைத்து தரப்பினரும் முதிர்ச்சியுடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக மட்டுமே அப்பாவி பெற்றோர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியும்.
பதின்வயதில் வயதில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகள் காரணமாக ஏற்படும் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பெண் களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கு ஏற்படும் துயரங்கள் மற்றும் கொந்தளிப்புகள் குறித்து ஒரு வழக்கில் விரிவாக விளக்கியுள்ள கர்நாடக உயர்நீதி மன்றம், இந்தப் பிரச்சினைக்கான தீர்வையும் வழங்கியுள்ளது.
21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் போது அத்திரு மணத்திற்கு அவர்களின் பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் இல்லா விட்டால் அத்தகைய திருமணங்கள் செல்லாதவை அல்லது ரத்து செய்யத் தகுந்தவை என அறிவிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் பரிந் துரைத்திருக்கிறது.
21 வயதுக்கு முன்பாக திருமணம் செய்யும்போது அதற்கு பெற்றோரின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது சிங்கப்பூர், ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, 21 வயதுக்கு முன்பாக நடைபெறும் திருமணங்களுக்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாக்கும் வகையில் உடனடியாக சட்டத் திருத்தம் கொண்டு வரும்படி வலியுறுத்துகிறேன்.”என்று அதில் தெரிவித்துள்ளார்.
ஆந்தைரிப்போர்ட்டர்
‘‘சந்துருவுக்கு ஏற்கனவே 3 பெண்களுடன் தொடர்பு’’ டைரக்டர் சேரன் பரபரப்பு பேட்டி
சென்னை,
‘‘சந்துருவுக்கு ஏற்கனவே 3 பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. என் மூத்த மகளிடமும் ‘ஐ லவ் யூ’ சொன்னான்’’ என்று டைரக்டர் சேரன் கூறினார்.
காதல்
டைரக்டர் சேரனின் மகள் தாமினிக்கும், சென்னை சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்ற இளைஞருக்கும் இடையேயான காதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காதல் பிரச்சினையில் தீர்வு காண போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் சேரன், அவருடைய மகள் தாமினி, சந்துரு ஆகியோர் கலந்து கொண்டார்கள். விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சந்துருவை போலீசார் அனுப்பி வைத்தார்கள். தாமினி தந்தை சேரனுடன் செல்ல மாட்டேன் என்று கூறியதால், அவரை மைலாப்புரில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.
பேட்டி
இந்த நிலையில் டைரக்டர் சேரனும், அவருடைய மனைவி செல்வராணியும் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது சேரன் கூறியதாவது:– ‘‘என் மனைவியை இதுவரை வெளியுலகுக்கு நான் அறிமுகம் செய்ததில்லை. இப்போது அறிமுகம் செய்கிறேன். இதுதான் என் மனைவி. எனக்கு 2 மகள்கள். நான், பணக்காரன் அல்ல. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். என் அப்பா சினிமா தியேட்டர் ஊழியர். அம்மா ஆசிரியை. என் மகள்களுக்கு சினிமா பின்னணி, பணக்கார வாசனை வரக்கூடாது என்பதற்காக, அவர்களை கவனமாக வளர்த்தேன்.
செல்லமாக...
நானும், என் மனைவியும் காதல் திருமணம் செய்தவர்கள். இன்று வரை என் இளைய மகளுக்கு நாங்கள் என்ன சாதி என்று சொன்னதில்லை. மூத்த மகள் விவரம் தெரிந்தவள். சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறாள். இளைய மகள் தாமினிக்கு படிப்பில் சின்ன தேக்கம் இருந்தது. தாழ்வுமனப்பான்மை இருந்தது. எனவே அவளை செல்லமாக வளர்த்தோம். அவளுடைய காதல் விவகாரம், எந்த ஒரு தகப்பனுக்கும் நேராத கொடுமை என்று சொல்ல முடியாது. இதுபோல் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கு காலமாற்றம் ஒரு காரணம். தொடர்பு சாதனங்கள் இன்னொரு காரணம். நானும், என் மனைவியும் எங்கள் மகள்களை தோழிகள் போல் வளர்த்தோம். கருத்து சுதந்திரம் கொடுத்தோம். காதலித்தால் எதிர்க்கக்கூடாது என்று கருதினோம்.
18 வயதில்...
என் இளைய மகளுக்கு 18 வயதில் காதல் வந்தது. நாங்கள் எதிர்க்கவில்லை. படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்கிறோம் என்றோம். அதன்பிறகு பையனை பற்றி விசாரித்தோம். அவனுடைய பின்னணி பயத்தை ஏற்படுத்தியது. அவனுக்கு வேலை இல்லை. இருதய நோயுள்ள தாயும், அக்காவும் இருந்தார்கள். நான் அந்த பையனை நேரில் சந்தித்து, ஒரு வேலை தேடிக்கொள். பத்து அல்லது பதினைந்தாயிரம் சம்பளத்துக்கு வழி செய்து கொள். வாழ்க்கையில் முன்னேறிக்காட்டு. இல்லையென்றால், சொல்ல மறந்த கதையில் என் கதாபாத்திரம் போல் ஆகிவிடும் என்றேன். மூன்று வருடத்துக்குப்பின், திருமணம் செய்து வைக்கிறேன் என்றேன். அதுவரை இருவரும் வெளியில் சுற்றாமல் இருங்கள் என்று கேட்டுக்கொண்டேன். அவனும் ஏற்றுக்கொண்டான்.
தவறான பார்வை
இந்த நிலையில் ஒருநாள் என் மகள் தாமினி, ‘‘அப்பா என்னால் அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. செத்துடணும் போல் இருக்கு’’ என்று அழுதாள். எந்த தகப்பனும் செய்யாததை நான் செய்தேன். அந்த பையனுக்கு போன் போட்டு, என் மகள் உன்னிடம் பேச வேண்டும் என்று சொல்கிறாள். பேசுப்பா என்றேன். அதன்பிறகு சந்துருவின் நடவடிக்கைகள் வேறு மாதிரி இருந்தது. அவனுடைய பார்வை தவறாக இருந்தது. நிறைய பொய் பேசினான். அவனுடைய போனை சோதித்துப் பார்த்தபோது, வேறு சில பெண்களுடன் அவனுக்கு தொடர்பு இருப்பதும், இரவு நேரங்களில் வெகுநேரம் அவர்களுடன் பேசியிருப்பதும் தெரியவந்தது. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
மூத்த மகளிடம்...
என் மூத்த மகளிடமும் பேஸ்புக்கில், ‘ஐ லவ் யூ’ சொல்லியிருக்கிறான். ஏற்கனவே மூன்று பெண்களை காதலித்து ஏமாற்றியிருக்கிறான். அவனுடைய நடத்தை சரியில்லை. வேலை இல்லை. வேறு பெண்களுடன் தொடர்பு. இதையெல்லாம் பார்த்த பிறகு ஒரு தகப்பனால் எப்படி மகளை திருமணம் செய்து கொடுக்க முடியும்? அதுமட்டுமல்லாமல், உன் அப்பா படத்தில் என்னை கதாநாயகனாக நடிக்க வை என்று என் மகளை வற்புறுத்தியிருக்கிறான். எழில் டைரக்டு செய்யும் படத்தில் சந்துருவை நடிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று என் மகளே என்னிடம் கூறினாள். என் மகளை வைத்து, என்னை மிரட்டுவதாக உணர்ந்தேன்.
மூளைச்சலவை
என் மகளே ஒரு கட்டத்தில், அவன் எனக்கு வேண்டாம்பா என்று கூறினாள். அவனிடம் இருந்து பிரித்து விடுங்கள் என்று போலீசில் சொன்னாள். அதற்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவளை மூளைச்சலவை செய்து, எனக்கு எதிராக திருப்பி விட்டான். என் மகள் நல்ல மனநிலையில் இருக்கிறாளா? என்று கூட சந்தேகமாக இருக்கிறது.’’
இவ்வாறு சேரன் கூறினார். அவர் பேட்டி அளித்தபோது, பல இடங்களில் பேச முடியாமல் அழுதார். அவர் அழுததைப் பார்த்து மனைவி செல்வராணியும் அழுதார். சேரனை, டைரக்டர் அமீர் தேற்றினார். சேரனின் மனைவி செல்வராணி கூறும்போது, ‘‘சேரன் என்ற அடையாளத்துடன் எங்களை பார்க்க வேண்டாம். நான் ஒரு தாய். ஒரு பெண். எங்கள் மகள் எந்த நிலையில் திரும்பி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். எங்கள் மகளை திருப்பிக்கொடுங்கள்’’ என்றார்.
அமீர் பேட்டி
டைரக்டர் அமீர் கூறியதாவது:– ‘‘நான் எதற்குமே கலங்க மாட்டேன். முதல்முறையாக கலங்கி விட்டேன். எங்கள் வீட்டு பெண்ணுக்கு ஏற்பட்ட நிலையை பார்த்து கலங்கினேன். அவளை இந்த நிலைக்கு ஆளாக்கிய சந்துரு, ஒரு குற்றவாளி. அவனை பற்றி உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும்.
ஏற்கனவே அவனால் மூன்று பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து இருக்கிறான். அவனுடைய அக்காளுடன் வாழ்வது அவருடைய கணவர்தானா? என்று சந்தேகப்படுகிறோம். இதுபற்றி உளவுப்பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும்.’’ மேற்கண்டவாறு அமீர் கூறினார்.
பேட்டியின்போது டைரக்டர்கள் கரு.பழனியப்பன், சமுத்திரக்கனி, ராம், சுப்பிரமணியம் சிவா, பட அதிபர் ஞானவேல், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், பாடல் ஆசிரியர் சினேகன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
தினதந்தி
‘‘காமினியை ஒருபோதும் கைவிட மாட்டேன்’’ எங்கள் காதலில் உறுதியாக இருக்கிறோம் காதலர் சந்துரு
சென்னை,
‘‘நானும், காமினியும் எங்கள் காதலில் உறுதியாக இருக்கிறோம். என் வீடு தேடி வந்த காமினியை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்’’ என்று டைரக்டர் சேரன் மகளின் காதலர் கூறினார்.
காதல்
டைரக்டர்–நடிகர் சேரனின் இரண்டாவது மகள் காமினி. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மின்னணு ஊடகம் பட்டப்படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், சென்னை சூளைமேட்டை சேர்ந்த லட்சுமி நாராயணனின் மகன் சந்துருவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த காதலுக்கு சேரன் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து காமினி வீட்டை விட்டு வெளியேறி, காதலர் வீட்டில் அடைக்கலம் ஆனார். இன்று காலை 11 மணிக்கு காமினியும், அவருடைய காதலர் சந்துருவும் சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்தார்கள்.
பேட்டி
அப்போது சந்துரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
‘‘நானும், காமினியும் கடந்த 2 வருடங்களாக உயிருக்கு உயிராக காதலித்து வருகிறோம். எங்கள் காதல் விவகாரம் சேரனுக்கு தெரியவந்ததும், என்னை கூப்பிட்டு மிரட்டினார். இனிமேல் என் மகளை நீ பார்க்கக் கூடாது. அவளை பின்தொடரக் கூடாது என்று கூறினார்.
அவருடைய மிரட்டலுக்கு நான் பயப்படவில்லை. என் காதலில் உறுதியாக இருந்தேன். அதேபோல் காமினியும் உறுதியாக இருந்தாள். இந்த சூழ்நிலையில் சேரன் வீட்டில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
மிரட்டல்
அவர் என்னை அழைத்து பேசினார். முதலில் நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதிக்க முயற்சி செய். நானே உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறேன் என்றார். இந்த சமயத்தில் காமினிக்கு உடம்பு சரியில்லாமல் போனது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அவளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
காமினியை பார்த்து உடல் நலம் விசாரிப்பதற்காக சென்றேன். என்னை பார்க்க அனுமதிக்கவில்லை. அப்போது ஒரு பட அதிபர் என்னிடம் வந்து, ‘‘உன்னையும் காமினியையும் சேர்த்து வைக்கிறேன். என் கூட வா’’ என்று அழைத்து சென்றார். கோடம்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகில் வந்ததும், அவர் என்னை மிரட்ட ஆரம்பித்தார்.
காரை ஏற்றி...
காமினியை மறந்து விடு. இல்லையென்றால், ரோட்டில் நீ போய்க்கொண்டிருக்கும்போதே காரை வைத்து உன்னை தட்டி விடுவோம். விபத்து நடந்த மாதிரி காட்டி விடுவோம். நீ ஆசைப்பட்டபடி, சினிமாவுக்கும் வர முடியாது என்று மிரட்டினார்.
இந்த சமயத்தில் சேரனும், இன்னும் சிலரும் அங்கு வந்தார்கள். ‘‘இவன் கிட்ட என்ன பேச்சு’’ என்றபடி, அவர் என்னை அடித்து உதைத்தார். உடனே நான் ஓட ஆரம்பித்தேன். என்னை விரட்டி விரட்டி அடிக்க ஆரம்பித்தார்கள். ரோட்டில் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை. சினிமா படப்பிடிப்பு என்று நினைத்தார்களோ என்னவோ...
பதற்றம்
இந்த சம்பவத்துக்குப்பின் என் அம்மாவும், அக்காவும் பதற்றம் அடைந்தார்கள். நமக்கு இது ஒத்து வராது. காதலும் வேண்டாம்...ஒன்றும் வேண்டாம் நீ பத்திரமாக இருந்தால் போதும் என்று கோவையில் கட்டிட காண்டிராக்டு தொழில் செய்யும் என் மாமா வீட்டுக்கு என்னை அனுப்பி வைத்தார்கள். நான் அங்கு மாமா சொன்ன வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.
இந்த சமயத்தில்தான் சென்னையில் என் வீட்டில் இருந்து எனக்கு போன் வந்தது. காமினி அவள் வீட்டை விட்டு நம் வீட்டுக்கு வந்து விட்டாள் என்றார்கள். சேரனும், அவருடைய ஆட்களும் என்னை விரட்டி விரட்டி அடித்த தகவலை தெரிந்து கொண்டு காமினி வீட்டை விட்டு வெளியேறி, என் வீட்டில் அடைக்கலமாகி இருக்கிறாள்.
கைவிட மாட்டேன்
எப்போது என் வீடு தேடி வந்தாளோ அப்போதே அவள் எனக்குரியவளாகி விட்டாள். நானும், காமினியும் எங்கள் காதலில் உறுதியாக இருக்கிறோம். காமினியை ஒருபோதும் நான் கைவிட மாட்டேன்.’’
இவ்வாறு சந்துரு கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக