பகிடி என்றால் நகைச்சுவை. பகிடிக்குச் சொன்னேன்.. அதற்குப் போய் கோபித்துக்கொண்டால் எப்படி? அவன் பகிடி பகிடியாகவே நன்றாக உறைக்கும்படிச் சொல்லிவி டுவான்.. இப்படி நம் அன்றாடப் பேச்சுவழக்கில் இந்தச் சொல் புழக்கத்தில் இருக்கிறது. இன்னும் தமாஷ் என்று கூடச் சொல்வார்கள். ஆனால், இந்தப் பகிடி அதாவது தமாஷ் என்பது இன்று உயிரைக் குடிக்கும் சொல்லாகவும் மாண வர்கள் காதில் நாராசமாகப் பதியும் சொல்லாகவும் அண் மைக்காலமாக ஆகிப்போயிருக்கிறது. பல்கலைக் கழகங் களிலும் கல்லூரிகளிலும் புதிய மாணவர்களை வரவேற்கவும் சிரேஷ்ட மாணவர்களுக்கும் புதியவர்க ளுக்கும் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும்தான் இந்தப் பகிடி செயற்பாடு அந்தக் காலத்தில் ஆரம்பிக் கப்பட்டிருக்கின்றது.
பகிடிவதை என்பது புதியவர்களை உள்வாங்குவதற்காகச் செய்யப்படுவது என்று கூறப்படும் இந்நடவடிக்கையால் புதியவர்கள் மோசமான பாதிப்புக்களை அடைவ துண்டு. பகிடிவதை பன்னெடுங்கால மாக நடைபெற்று வருகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந் தில் மிகப் பரவியிருந்ததாகக் கூறப் படுகிறது. பகிடிவதை பொதுவாக மூன்று வகைப்படுகிறது பேச்சுரீதியான (உள) துன்புறுத்தல், உடல்ரீதியான துன்புறுத்தல், பாலியல் ரீதியான துன்புறுத்தல்
உடல்ரீதியான துன்புறுத்தல் இறப்புக்கும் காரண மாவதுண்டு. இலங்கையில் வரப்பிரகாஷ் என்ற மாணவனின் மரணம் இத்தகையதொரு சம்பவமாகும். இந்தியாவில் நாவரசு கொலை வழக்கு பகடிவதையால் ஏற்பட்ட ஒரு கொலைச் சம்பவமாகும். இந்தியாவில் பகடிவதை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது தென்பது மகிழ்ச்சிக் குரியது. பல்கலைக் கழகத்தில் மாத்திரமன்றி பாடசாலைகளில் உயர் வகுப்புக ளுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களும்கூட பகிடிவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அண்மையில் பதுளையில் ஒரு மாணவி பகிடிவதையினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டி ருக்கிறார்.
பல்கலைக் கழகங்களில் பகிடிவதை தாளாத சில யுவதிகள் பல்கலைக்கழகக் கல்விக்கே முழுக்குப் போட்டுவிட்டு வீடுகளுக்குத் திரும்பியிருக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆர்வத்தோடும், கண்களில் தெறிக்கும் மகிழ்ச்சியோடும், எதிர்பார்ப்போடும், எதிர்காலம் பற்றிய பல வண்ணக் கனவுகளோடும் ஒரு மாணவன் பல்கலைக்க ழகத்திற்குள் காலெடுத்து வைக்கிறான்.
போட்டி நிறைந்த இவ்வுலகத்தை கல்வியால் வெல்ல வேண்டும் என்ற ஒரு வெறி தெறிக்க, அவனுள் ஒரு பெருமித உணர்வு ஆசையோடு பலமுறை கடந்து சென்ற பல்கலைக்கழகத்திற்குள் இன்று தானும் ஒரு மாணவனாக நிற்கிறோம் எனும் பெருமிதம் அவன் முகமெங்கும் பிரகாசிக்கிறது. தன் தாய் மஞ்சள் கயிற்றில் கட்டியிருந்த ஒரு துண்டு தங்கத்தையும் அடைமானம் வைத்து இங்கனுப் பியதற்கு, நல்ல முறையில் கல்வி கற்று ஒரு தங்கப் பதக் கத்தைப் பெற்று அவன்; கழுத்தில் போட்டு விட வேண்டு மென்ற வைராக்கியம் அவளுக்கு.
முதல் நாள், முதல் வகுப்பு, அவன் வகுப்பறை முழுவதும் மேலாண்டு மாணவர்கள் சு+ழ்ந்திருந்து பெருங்குரலெடுத்து அவனை வரவேற்கிறார்கள். புது அனுபவம் அவனுக்கு எங்கோ பறப்பது போல் மகிழ்ச்சியாய் இருந்தது. ஆனால் இவையெல்லாம் ஒரு சில நிமிடங்களே நிலைத்தன. திடீரென ஒருதொகை மாணவர்கள் இழிவான வார்த்தைகளைக் கூறிக் கொண்டு புயலென அவ்வகுப்பறையினுள் வந்தார்கள். அவர்கள் புது மாணவனை உடைகளைக் கழட்டுமாறு ஓங்காரமிடுகிறார்கள். அனைவரும் ஒன்று கூடி ஒருவனை அதைச் செய், இப்படிச் செய்யென கட்டளையிட அவனும் பயத்தால் நடுங்கிக் கொண்டே அனைத்தையும் செய்கிறான். அவன் மறுக்கும் போது உடல் ரீதியாக அவனைத் துன்புறுத்துகிறார்கள்.
உளவியல் ரீதியாகவும் தாக்குகிறார்கள். இவ்வாறு புதுமுக மாணவர்கள் எதிர்நோக்கும் உளவியல் மற்றும் உடலியல் தாக்குதல்கள் எண்ணிலடங்கா. மேலும் புதுமாணவர்கள் தங்களைத் தாங்களே கீழ்த்தரமாக உடலியல் தொல்லை செய்து கொள்ள வற்புறுத்தப்படுகிறார்கள். அதேநேரம் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் சொல்லிலடங்கா. அடியேய் உங்கம்மா, எங்கடி வேலை பார்க்கிறா.. இந்த ரோஸைக் கொண்டுபோய் அவனிடம் கொடுத்து அவனைக் காதலிக்கிறதாச் சொல்லடி… இந்தத் தண்ணீர்ப் போத்தல் 20ஐயும் குடியடி… இப்படி தாய், சகோதரிகளுடன் பிறவாதவர்களைப்போல் என்னவோ வானத்திலிருந்து குதித்தவர்களைப்போல் மிகக் கேவலமாகப் பேசுவதும்.. அந்தப் பெண் வாழ் நாளில் அறிந்திராத தூசணை வார்த்தைகளைப் பிரயோகிப்பதும் பெண்களுக்கு பல்கலைக் கழகக் கல்வியே வேண்டாம் எனப்போகிறது என்கிறார்கள் பெற்றோர்கள்.
எனவே கல்வி நிலைய நிர்வாகமே பகிடிவதைக்கு எதிரான அனைத்துச் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பிரச்சினைகள் நடந்த பின் காவல் துறையை நாடுவதை விட மாணவர்களின் தேவையறிந்து சட்டத்தைப் பாரபட்சமில்லாமல் நடைமுறைப்படுத்துவதே நல்ல முகாமைத்துவமாகும் என்பது நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. பகிடி, வதையாகக் கூடாது. ஆற அமர சிந்திப்போம்.
ஜீவிதன்
தினகரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக