ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

வய­தா­னாலும் அழகைக் கூட்­டலாம்

தலைப்பைப் பார்த்­ததும், ‘இதற்கும் நமக்கும் சம்­பந்­த­மில்லை’ எனப் பக்­கத்தைப் புரட்­டா­தீர்கள். 25 பிளஸ்சில் இருக்கும் ஒவ்­வொரு பெண்ணும் அவ­சியம் தெரிந்து கொள்ள வேண்­டிய தக­வல்கள் இவை. ‘50 பிளஸ் நெருங்­கு­ப­வர்­கள்தான் வய­தா­ன­வர்கள்’ என்­கிற பார்வை உங்­க­ளுக்கு இருக்­கலாம். ஆனால், முது­மைத்­தோற்றம் என்­பது உங்கள் சரு­மத்­தையும் கூந்­த­லையும் 25 வய­தி­லி­ருந்தே விரட்ட ஆரம்­பிக்­கின்ற உண்மை உங்­க­ளுக்­கு­ தெ­ரி­யுமா?

“முதுமைத் தோற்­றத்­துக்கு எதி­ரான உங்கள் போராட்­டமும் முயற்­சி­களும், 25 வய­தி­லி­ருந்தே தொடங்­கப்­பட வேண்­டி­யது அவ­சியம்” என்­கிறார் ‘நேச்­சுரல்ஸ் டபிள்யூ’ உரி­மை­யாளர் வீணா குமா­ரவேல். இள­மையைத் தக்க வைத்­துக்­கொள்ள ஆசைப் ­ப­டு­வோ­ருக்கு அவ­ரது ஆலோ­ச­னைகள் நிச்­சயம் உதவும். ‘‘நமது சருமம்,20 வயதில் இருப்­பது மாதிரி 40 வய­திலோ, 40இல் இருப்­பது மாதிரி 60 வய­திலோ இருப்­ப­தில்லை. 20களின் தொடக்­கத்தில், சரு­மத்தின் செல்கள், மீள்­தன்­மை­யையும் ஈரப்­ப­தத்­தையும் இழக்கத் தொடங்கும்.

சரு­மத்தில் அதுவரை இருந்த மிரு­துத்­தன்மை மாறி, ஒரு­வித வறட்­சி­யையும் மெலி­தான கோடு­க­ளையும் பார்க்­கலாம். சரு­மத்தின் அழ­குக்கும் பூரிப்­புக்கும் கார­ண­மான எலாஸ்டின் மற்றும் கொலாஜன் என்­கிற இரண்டு புர­தங்­களின் சுரப்பும் குறையத் தொடங்கும். அதற்கு மிக முக்­கிய காரணம் வெயில். கூடிய வரையில் வெயிலில் செல்­வதைத் தவிர்ப்­பதும், தினம் இரண்­டரை லீற்றர் தண்ணீர் குடிப்­பதும், 30 வயதில் அடி­யெ­டுத்து வைப்­போ­ருக்குப் பாது­காப்­ப­ளிக்கும்.

30இல் அடி­யெ­டுத்து வைப்­போ­ருக்கு, கண்­க­ளுக்­க­டியில் மெலி­தான கோடுகள் தென்­பட ஆரம்­பிக்கும். சருமம் வறண்டு போவது, சரு­மத்தில் ஆங்­காங்கே சிவப்பு மற்றும் பிரவுன் நிறப் புள்­ளிகள் தோன்­று­வது, கண்­க­ளுக்­க­டியில் வீக்கம், வாயைச் சுற்­றியும் நெற்­றி­யிலும் கோடுகள் போன்­றவை தோன்­றலாம். கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகிய புர­தங்­களின் சுரப்பு இன்னும் அதி­க­மாகக் குறையத் தொடங்­கு­வதன் விளை­வு­களே இவை.

40 வய­துக்குப் பிறகு சரு­மத்தில் உண்­டா­கின்ற பிரச்சி­னை­களை சரி செய்து, பழைய தோற்­றத்­துக்குத் திரும்பச் செய்­வது சற்றே சிர­ம­மா­ன­துதான். அத­னால்தான், 40 பிளஸ்சில் இருப்­ப­வர்கள் எடை குறைக்கும் முயற்­சி­களை மேற்­கொள்­ளும்­போது, அவர்­க­ளது முகத்­த­சைகள் தொய்­வ­டைந்து, முது­மைத்­தோற்றம் தெரி­கி­றது. எலாஸ்டின், கொலாஜன் சுரப்பு இல்­லா­ததால், சருமம் உறுதி இழந்து, தொய்­வ­டை­கி­றது. சுருக்­கங்­களும் கோடு­களும் இன்னும் சற்று ஆழ­மாகத் தெரியும்.

50 வயதில் சருமச் சுருக்­கங்­களும் கோடு­களும் வெளிப்­ப­டை­யா­கவே தெரியத் தொடங்கும். மெனோபாஸ் கால­கட்டம் என்­பதால், பெண்­களின் உடலில் நிகழும் ஹோர்மோன் மாற்­றங்­களும் சரும அழகைப் பெரி­தாகப் பாதிக்கும். இவை எல்லாம் அந்­தந்த வய­துக்­கு­ரிய இயற்­கை­யான மாற்­றங்கள். இள­மையில் இருந்தே சருமப் பரா­ம­ரிப்பில் அக்­கறை காட்ட ஆரம்­பிக்­கி­ற­வர்­க­ளுக்கு, இந்த மாற்­றங்கள் தள்ளிப் போவ­துடன், நீண்ட காலம் இளமைத் தோற்றம் தக்க வைக்­கப்­ப­டு­கி­றது. அதற்கு என்­ன­வெல்லாம் செய்ய வேண்டும்?

தினமும் சரு­மத்­துக்கு கிளென்சர், டோனர், மொயிச்­ச­ரைசர் உப­யோ­கிக்க வேண்டும். வய­தாக ஆக கொழுப்பு உணவுகளை தவிர்த்து, முழு தானிய உண­வுகள், மீன், காய்­க­றிகள், பழங்­களை அதிகம் சேர்க்க வேண்டும். உப்­பையும் சர்க்­க­ரை­யையும் பாதி­யாகக் குறைப்­பது நல்­லது. சோயா உண­வு­களை அதிகம் சேர்த்துக் கொள்­ளலாம். மெனோபாஸில் இருப்போருக்கு ஈஸ்ட்ரோஜென் ஹோர்மோன் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சோயா உதவும். வால்நட் மற்றும் பாதாம் ஆகியவை இளமைக்கு உதவக்கூடியவை. தக்காளி,பப்பாளி,கிவி, ஓரஞ்சு, திராட்சை, மாதுளை, அவகோடா, ஸ்ட்.ேராபெர்ரி ஆகிய பழங்களும், பசலைக்கீரை, பீட்ரூட், கிரீன் டீ, டார்க் சொக்லெட் போன்றவையும் இளமைத் தோற்றத்துக்கான உணவுகள் ஆகும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல