ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

கூந்­தலில் துர்­நாற்றம் வீசு­கி­றதா..?

கூந்தல் நன்கு அழ­காக இருந்தால் மட்டும் போதாது. கூந்தல் நல்ல நறு­ம­ணத்­து­டனும் இருக்க வேண்டும். ஆனால் அவ்­வாறு கூந்­தலை நறு­ம­ணத்­துடன் வைப்­பது என்­பது அவ்­வ­ளவு எளி­தா­னது அல்ல. கூந்தல் நல்ல மணத்­துடன் இருக்க வேண்­டு­மெனில், முதலில் கூந்­தலில் இருந்து துர்­நாற்றம் வீசு­வ­தற்­கான கார­ணத்தை அறிய வேண்டும். பொது­வாக கூந்­தலை சரி­யாக நீரில் அல­சா­விட்டால், கூந்­தலில் இருந்து துர்­நாற்றம் வீசும். ஏனெனில் வியர்­வை­யா­னது நீண்ட நாட்கள் தலையில் தங்­கினால், அவை துர்­நாற்­றத்தை ஏற்­ப­டுத்தி, ஸ்கல்ப்பில் பல பிரச்சி­னை­களை ஏற்­ப­டுத்­தி­விடும். இத்­த­கைய துர்­நாற்­றத்தைப் போக்­கு­வ­தற்கு, நல்ல நறு­ம­ண­மிக்க எண்­ணெய்­களை கூந்­த­லுக்குப் பயன்­ப­டுத்­தலாம்.

அது­மட்­டு­மல்­லாமல், கூந்­தலில் இருந்து வெளி­வரும் துர்­நாற்­றத்­திற்கு, ஹெயர் மாஸ்க் மற்றும் பெக்­குகள் கூட கார­ண­மாக இருக்கும். உதா­ர­ண­மாக, முட்டை கூந்­த­லுக்கு மிகவும் நல்­லது என்று கூந்­த­லுக்கு பயன்­ப­டுத்­தியப் பின், கூந்­தலில் இருந்து முட்­டையின் துர்­நாற்­ற­மா­னது வீசும். ஆகவே இத்­த­கைய ஹெயர் மாஸ்க்­கு­களைப் போட்டப் பின்பு, கூந்­தலின் மணத்தை அதி­க­ரிப்­ப­தற்கு என்ன செய்ய வேண்­டுமோ அதை செய்து நறு­ம­ண­மிக்­க­தாக வைத்துக் கொள்­ளலாம். அதிலும் இயற்கை பொருட்­களைக் கொண்டு கூந்­தலின் நறு­ம­ணத்தை அதி­க­ரிப்பது தான், எப்­போதும் சிறந்­தது.

இப்­போது கூந்­தலின் நறு­ம­ணத்தை அதி­க­ரிப்­ப­தற்கு என்­ன­வெல்லாம் செய்ய வேண்­டு­மென்று பார்ப்போம்.

எலு­மிச்சை : எலு­மிச்­சையை கூந்­த­லுக்குப் பயன்­ப­டுத்­தி­னாலும், கூந்தல் நறு­ம­ணத்­துடன் இருக்கும். மேலும் பொடுகு இருந்­தாலும் நீங்­கி­விடும். எனவே எலு­மிச்சை சாற்றை கூந்­த­லுக்குத் தடவி, ஷாம்போ போட்டு குளிக்க வேண்டும்.

தலைக்கு குளிக்­கவும்: தலைக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குளிக்க வேண்டும். ஏனெனில் தற்­போது சுற்­றுச்­சூழல் மிகவும் மோச­மா­ன­தாக இருப்­ப­தால், தலைக்கு எளிதில் தூசிகள் படிய வாய்ப்­புள்­ளது. ஆகவே தொடர்ச்­சி­யாக ஒருநாள் விட்டு ஒருநாள் குளித்தால், கூந்­தலின் நறு­ம­ணத்தை தக்க வைக்­கலாம்

ரோஸ் வோட்டர் : ரோஸ் வோட்டர் ஒரு சிறந்த நறு­ம­ண­மூட்டும் பொருள். இது சரு­மத்­திற்கும் மிகவும் சிறந்­தது. ஆனால் கூந்­த­லுக்கு அவ்­வ­ளவு பெரிய நன்­மையை அளிக்­கா­விட்­டாலும், கூந்­த­லுக்கு ரோஸ் வோட்­டரைத் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் நறு­ம­ணத்­துடன் இருக்கும்.

மல்­லிகை எண்ணெய் : நறு­ம­ண­மிக்க எண்­ணெயை கூந்­த­லுக்கு பயன்­ப­டுத்­தி­னாலும், கூந்­தலின் வாசனையை அதி­க­ரிக்­கலாம். அதிலும், மல்­லிகை எண்­ணெயைக் கொண்டு தலைக்கு மசாஜ் செய்தால், கூந்தல் நறு­ம­ணத்­துடன் இருப்­ப­தோடு, கூந்தல் வளர்ச்­சியும் அதி­க­ரிக்கும்.

பூக்கள்: பெண்­க­ளுக்குப் பொது­வாக கூந்­த­லுக்கு பூ வைப்­பது என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே தலைக்கு தினமும் நல்ல நறு­ம­ண­மிக்க பூக்­களை வைப்­பதன் மூலம், கூந்­தலின் நறு­ம­ணத்தை அதி­க­ரிக்­கலாம்.

செம்­ப­ருத்தி எண்ணெய்: பொது­வாக செம்­ப­ருத்தி எண்ணெய் கூந்­த­லுக்கு மிகவும் சிறந்­தது. அதிலும் அந்த எண்­ணெயை கூந்­த­லுக்கு தடவி வந்தால், கூந்தல் கரு­மை­ய­டை­வ­துடன், மயிர்­கால்கள் நன்கு வலி­மை­யாகும். மேலும் செம்­ப­ருத்தி எண்­ணெயில் நல்ல நறு­மணம் இருப்­பதால், இதனை கூந்­த­லுக்கு பயன்­ப­டுத்த, கூந்­தலில் நறு­ம­ண­ம் வீசும்.

சாம்­பி­ராணி புகை: அக்­கா­லத்தில் எல்லாம் முடியை உலர வைப்­ப­தற்கு சாம்­பி­ராணி புகையைப் போடு­வார்கள். இவ்­வாறு செய்­வதன் மூலம், இயற்­கை­யா­கவே கூந்­தலின் நறு­ம­ணத்தை தக்க வைக்­கலாம்.

ஹென்னா : ஹென்னா என்னும் மரு­தாணிப் பொடியை கூந்­த­லுக்கு பயன்­ப­டுத்­தினால், நரை­மு­டி­யா­னது நிறம் மாறு­வ­தோடு, கூந்­தலும் நன்கு நறு­ம­ணத்­துடன் இருக்கும்.

தேயிலை : கொதிக்கும் நீரில் சிறிது தேயி­லையை சேர்த்து நன்கு கொதிக்­க­விட்டு, பின் அதனை வடி­கட்டி, அந்த நீரைக் கொண்டு கூந்­தலை அல­சினால், கூந்தல் நன்கு மணத்துடன் இருக்கும்.

மேற்கூறிய அனைத்து முறைகளைப் பின்பற்றியும் கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசினால், வெப்பமான இடத்தில் இருந்து விலகி, நல்ல குளிர்ச்சியான இடத்தில் இருப்பதே சிறந்தது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல