ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

டீன் ஏஜ் வய­தி­னரை வாட்டும் மன அழுத்தம்

இன்­றைக்கு மனச்­சோர்­வையும் மன அழுத்­தத்­தையும் ஒன்­றாக நினைத்துக் குழம்பித் தவிக்­கி­ற­வர்கள் ஏராளம். இரண்­டுக்கும் வித்­தி­யாசம் உண்டு!

உட­ல­ளவில், உணர்­வ­ளவில் தன் எல்­லைக்­குட்­பட்ட வழி­களால் சமா­ளிக்க முடி­யா­த­படி ஒரு பிரச்சி­னையை சந்­திப்­பது இக்­கட்டு நிலை (Crisis) எனப்­படும். ஒரு சூழ்­நி­லையை இக்­கட்டு நிலை­யாக பார்க்கும் கண்­ணோட்­டத்­தினால் உட­லிலும் மன­திலும் உண்­டாகும் பாதிப்­புதான் மன அழுத்தம் (Stress).

ஸ்ட்ரெஸ் கார­ண­மாக தற்­கொலை வரை போகிற டீன் ஏஜ் பிள்­ளை­களும் இருக்­கி­றார்கள். ஆகையால் டீன் ஏஜ் ஸ்ட்ரெஸானது ஆரம்­பத்­தி­லேயே கண்டு பிடித்து ஜாக்­கி­ர­தை­யாகக் கையா­ளப்­பட வேண்­டிய ஒன்று. சரி­யான நேரத்தில் கண்­டெ­டுக்­கப்­ப­டாத மன அழுத்­த­மா­னது, அந்தப் பிள்­ளையின் எதிர்

காலத்தைப் பாதிப்­ப­தோடு, உள­வியல் ரீதி­யான பிரச்சி­னை­க­ளையும் சந்­திக்கச் செய்­து­விடும்.

டீன் ஏஜில் ஸ்ட்ரெஸ் வர பல கார­ணங்கள் இருக்­கலாம். பதின்ம வயதுப் பிள்­ளை­களின் பெரும்­பான்மை நேரம் வீடு அல்­லது பள்­ளி­யி­லேயே கழி­வதால், ஸ்ட்ரெஸ் உண்­டாக்கும் கார­ணங்­களும் அந்த இரண்டு இடங்­களில் இருந்தே கிளம்பும். உணர்­வு­பூர்­வ­மான விட­யங்­களால் உண்­டா­கிற மன அழுத்­தமே டீன் ஏஜ் பிள்­ளைகள் மத்­தியில் அதிகம். அதன் பின்­ன­ணியில் கீழ்க்­கண்ட கார­ணங்­களில் ஒன்றோ, பலதோ இருக்­கலாம்.

* தன் மீதான எதிர்­பார்ப்பு (பெற்றோர், ஆசி­ரியர், நண்­பர்கள் உட்­பட).

* பிறர் மீதான எதிர்­பார்ப்பு (பெற்றோர், ஆசி­ரி­யர், நண்­பர்­கள்­ உட்­பட).

* பெற்றோர், ஆசி­ரியர் அல்­லது பயிற்­சி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து வரும் அழுத்தம் அல்­லது எதிர்­பார்ப்பு.

* ஹோம் வேர்க் செய்­வதில் தொடங்கி, பரீட்­சையில் மதிப்பெண், ரேங்க் அல்­லது கிரேட் எடுப்­பது வரை­யி­லான அழுத்­தங்கள்.

* சக மாண­வர்­க­ளு­ட­னான மனஸ்­தாபம்.

* பெற்றோர் அல்­லது உடன்­பி­றந்­த­வர்­க­ளு­ட­னான மனஸ்­தாபம்.

* விட­லைப்­ப­ரு­வத்தில் ஏற்­படக் கூடிய உடல்­மாற்­றங்கள்.

* பெற்றோர், ஆசி­ரியர் ஆகியோர் தம்மை மற்ற பிள்­ளை­க­ளுடன் ஒப்­பிட்டுப் பேசு­வ­தி­னாலும், தாமே தம்மை மற்ற பிள்­ளை­க­ளுடன் ஒப்­பிட்டுப் பார்ப்­ப­தி­னாலும் உண்­டாகும் தாழ்வு மனப்­பான்மை அல்­லது தன்னைப் பற்­றிய நெகட்டிவ் சிந்­தனை.

* பெற்­றோ­ருடன் அனல் பறக்கும் விவாதம்.

* குடும்­பத்தின் பொரு­ளா­தார சிக்கல்.

* குடும்­பத்­தினுள் நிகழும் சோக சம்­ப­வங்கள் (உதா­ர­ணத்­துக்கு நெருங்­கிய நபரின் இறப்பு, பெற்­றோர்­க­ளி­டையே அல்­ல­து­கு­டும்­பத்­தி­ன­ரி­டையே உண்­டாகும் கசப்­பான விவா­தங்கள்...).

* குடும்­பத்­தி­னரின் நோய் பாதிப்பு (உதா­ர­ணத்­துக்கு இதய நோய், புற்­றுநோய்...).

* நண்­பர்­க­ளி­டையே உறவு முறிவு.

* காதலர் அல்­லது காத­லி­யு­ட­னான உறவு முறிவு.

* பெற்­றோரின் பிரிவு அல்­லது விவா­க­ரத்து.

* மன­துக்கு ஒவ்வாத சூழலில் வசிக்க வேண்­டி­ய­நிர்ப்­பந்தம்.

* புதிய பகு­திக்கு இடம் பெயர்­வது.

* புதிய பள்­ளிக்­கூ­டத்­துக்கு மாறு­வது.

* பய­மு­றுத்தும் சமு­தாய நிகழ்­வுகள்.

இத்­த­கைய சூழ்­நி­லை­களில் பதின்ம பருவப் பிள்­ளைகள் சிக்­கும்­பொ­ழுது அவர்கள் வெற்­றி­க­ர­மாக அதை கையாள்­வதோ, அதில் சிக்கித் தவிப்­பதோ அவர்கள் வளர்ந்த விதத்­தையும் குடும்பப் பின்­ன­ணி­யையும் பொறுத்­தது. மன உறுதி உள்­ள­வர்­க­ளாக இருந்தால், தன்­னிச்­சை­யா­கவும் பொறுப்­பா­கவும் நடந்து கொள்ளத் தெரிந்து வைத்­தி­ருப்­பார்கள். மன அழுத்­தத்தில் இருந்து தன்னை விடு­வித்துக் கொள்ளும் வேலை­களில் (இசையை ரசிப்­பது, டி.வி பார்ப்­பது, நண்­பர்­க­ளுடன் இருப்­பது...) ஈடு­ப­டுத்திக் கொள்­வது,நண்­பர்கள் அல்­லது மற்­ற­வர்­களின் உத­வியை நாடு­வது எனத் தெளி­வாக, வாழ்க்­கையின் அடுத்­த­டுத்த கட்­டங்­களை நோக்கி நகர்­கி­றார்கள்.

வளர்ந்த விதம், குடும்பப் பின்­னணி சரி­யாக அமை­யாமல் மன­பலம் அற்­ற­வர்­க­ளாக இருந்தால், அவர்­களால் மன அழுத்­தத்தில் இருந்து வெளியே வர முடி­யாது. பெரும்­பாலும் உடைந்து போன, பிரிந்து போன குடும்பப் பின்­ன­ணியில் வளர்ந்த டீன் ஏஜ் பிள்­ளை­க­ளுக்கு அது சாத்­தி­யப்­ப­டாது. மேற்­கூ­றி­ய­படி மன அழுத்­தத்தை நீர்த்துப் போகச் செய்யும் வித்­தைகள் இவர்­களின் மன­துக்கு புலப்­ப­டாது. அதன் விளை­வாக அவர்­க­ளுக்கு பட­ப­டப்பு, மனச்­சோர்வு, கோபம், தற்­கொலை எண்ணம், குடி மற்றும் போதைப்­ப­ழக்கம், உடல்­நலக் குறை­பாடு போன்­றவை உண்­டா­கலாம்.

சரி... இந்த இடத்தில் பெற்­றோரின்

பங்கு என்ன?

* பிள்­ளைகள் தமது மன அழுத்­தத்தில் இருந்து விடு­பட, பெற்­றோர்தான் வழி­ ந­டத்த வேண்டும். பிள்­ளை­களின் பிரச்சி­னை­களை எந்த விமர்­ச­னமும் செய்­யாமல், பொறு­மை­யாக காது கொடுத்துக் கேட்க வேண்டும். விளை­யாட்டு அல்­லது வேறு விருப்பத் துறை எதி­லா­வது பிள்­ளைகள் ஈடு­பட ஊக்­க­ம­ளிக்க வேண்டும்.

* ஆரோக்­கி­ய­மான சில பழக்­க­வ­ழக்­கங்­களை குடும்­பத்தில் உள்ள அனை­வ­ருமே பின்­பற்­று­வ­தும்­கூட, பிள்­ளை­களின் மன அழுத்தம் நீங்க மறை­மு­க­மாக உதவும். அதற்கு என்­ன­வெல்லாம் செய்­யலாம்?

* சரி­யான நேரத்தில் சரி­யான உணவை உண்­பது. உடற்­ப­யிற்சி செய்­வது. காபி, கோலா போன்­ற­வற்றைத் தவிர்ப்­பது (இவற்றில் உள்ள கஃபைன், பட­ப­டப்­பையும் கோபத்­தையும் அதி­க­ரிக்கச் செய்யும்). மது­பா­னங்கள், புகை­யிலை மற்றும் சட்­டத்­துக்குப் புறம்­பான போதைப்­பொ­ருட்­களை எடுத்துக் கொள்­வதைத் தவிர்ப்­பது.

* எதற்­கெ­டுத்­தாலும் உணர்ச்சி வசப்­ப­டாமல், மன அழுத்­தத்தை எதிர்த்துப் போராடும் வலி­மையை வளர்த்துக் கொள்­வது. தனக்கு ஒரு நெரிசல் உண்­டாகும் பொழுது அழுதோ, ஆர்ப்­பாட்டம் செய்தோ அதைப் பெரி­தாக்­காமல், அமை­தி­யாக, பொறு­மையை இழக்­காமல் அதை ஆராய்ந்து அதைக் கையாளப் பழ­கு­வது.

* யாரு­டனும் தம்மை ஒப்­பி­டாமல் தன் சூழ்­நி­லைக்­கேற்ப நடந்து கொள்­வது. குறிப்­பாக மன அழுத்­தத்தை உண்­டாக்கும் சூழ்­நி­லையைப் பற்றி ஒரு பேப்­பரில் எழுதி அதற்­கான பின்­ன­ணி­யையும் குறித்­து, அதி­லி­ருந்து மீள்­வ­தற்­கான வழியை மற்­ற­வ­ரிடம் பேசி தாமும் யோசிக்­கலாம்.

* நண்­பர்கள் அல்­லது உற­வுகள் சூழ இருந்தால் அது நிச்­சயம் மன அழுத்­தத்­தி­லி­ருந்து மீள உதவும்.

* பெற்றோர், தாங்கள் பின்­பற்றி, தங்­க­ளுக்கு வெற்­றியைக் கொடுத்த ஸ்ட்ரெஸ் நிர்­வாக டெக்­னிக்­கு­களை பிள்­ளை­க­ளுக்கும் கற்றுக் கொடுக்­கலாம்.

இது மட்டும் போதாது பெற்­றோரே...

எக்­கா­ரணம் கொண்டும் உங்கள் பிள்­ளை­களை மட்டம் தட்­டியோ, நெகட்­டி­வா­கவோ பேசா­தீர்கள். அப்­ப­டிப்­பட்ட பேச்சு, அவர்­க­ளுக்குள் ஒரு­வித பயத்­தையும் தோல்வி மனப்­பான்­மை­யையும் தாழ்வு மனப்­பான்­மை­யையும் விதைத்து விடும். ‘சரியா படிக்­க­லைன்னா, நீ உருப்­ப­டவே மாட்டே’ எனச் சொல்­வ­தற்குப் பதில், ‘படிப்­புல இன்னும் கொஞ்சம் அதிக கவ­னத்­தையும், நேரத்­தையும் செலுத்­தினா, நீ நிச்­சயம் பெரிசா சாதிப்பே...’ எனச் சொல்­லலாம்.

உங்கள் டீன் ஏஜ் மகன் அல்­லது மகளின் ஸ்ட்ரெஸ், அவர்­க­ளது உடல்­ந­லத்­தையோ, நட­வ­டிக்­கை­க­ளையோ, சிந்தனைகளையோ பாதிக்கிறதா எனக் கண்காணியுங்கள். ‘காலத்தை வீணாக்காதே. உட்கார்ந்து படி’ என்று விரட்டாமல் உங்கள் பிள்ளைகளுக்கு போதுமான ஓய்வு நடவடிக்கைகளில் ஈடுபட காலத்தைக் கொடுங்கள். ஷொப்பிங் மால்களில் வின்டோ ஷொப்பிங் செய்வதோ, ஐபாடில் இசையை ரசிப்பதோ, செல்லப்பிராணியைக் கொஞ்சி மகிழ்வதோ... உங்கள் மகன் அல்லது மகளை எது மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கிறதோ, அதைச் செய்வதைத் தடுக்காதீர்கள்.

இவற்றில் எதுவுமே கை கொடுக்கவில்லை... உங்கள் பிள்ளையின் மன அழுத்தம் அதீதமாகி விட்டது என உணர்ந்தால், மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல தயங்காதீர்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல