தெலுங்கானா மாநிலம் உதயமாகப் போவதாக மத்திய அரசு அறிவித்த உடனே, அதற்கு கிடைத்துள்ள ரெஸ்பான்ஸ் கலவையாக, இத்தனை களேபரமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
தெலுங்கானாவுக்கு சிலர் பலத்த ஆதரவு தெரிவித்துள்ளனர். கூடவே, தங்கள் மாநிலங்களிலும் அத்தகைய பிரிவினை வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பத் துவங்கிவிட்டார்கள்.
ராயலசீமா, மகாராஷ்ட்ரா, உத்திரப்பிரதேசம், புதுச்சேரி, வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே புகைந்து கொண்டிருந்த தனிமாநில நெருப்பு எரியத் துவங்கியுள்ளது. இரண்டு பகுதிகளில் தனிநாடு கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
இன்னொரு பக்கம் அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்துள்ளது ஆந்திரா முழுவதும்.
மாநிலங்களிலும் கூட தெலுங்கானா மாநிலம் அமைய எழுந்துள்ள எதிர்ப்பு வியப்பளிக்கிறது. காரணம், தனி தெலுங்கானா என்ற போராட்டம் இன்று நேற்று ஆரம்பமானதல்ல. சுதந்திரம் அடைந்து, ஹைதராபாத் நிஜாமின் வசமிருந்த தெலுங்கானா பிரதேசங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்ட காலம் தொட்டே இருந்து வருகிறது . அப்போதெல்லாம் யாரும் இதை எதிர்க்கவே இல்லை என்பது முக்கியமானது.
இப்போது நாம் விஷயத்துக்கு வருவோம்…
“பெரிய மாநிலங்களை இப்படி பிரிப்பது சரியா.. தனி மனிதர் அல்லது அவரது ஆதரவாளர்கள் முரண்டு பிடிப்பதற்கெல்லாம் தலை வணங்கிவிட்டால் நாடு என்னாவது… இன்னும் இப்படி பல தனி மாநில அல்லது கூடுதல் அதிகாரம் கொண்ட சுயேச்சை மாநிலங்கள் அமைய வேண்டும் என்ற கோரிக்கை எழாதா?
ஏற்கெனவே ஒருவர் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தென் தமிழகம் அமைக்க வேண்டும் என்று கோரி வரும் சூழலில், இந்த தனிமாநில கோரிக்கைக்கு அங்கீகாரம் கொடுத்திருப்பது முட்டாள்தனமாகாதா?
இப்படியே போனால், அடுத்து ஒவ்வொரு மாவட்டமும் தனி மாநிலங்களாக உடையும் ஆபத்து உள்ளதை யாரும் யோசிக்கவில்லையா?
இந்த பிரிவினை உணர்வு பொங்கி நீர்த் தகராறு, நிலத் தகராறு, மொழித் தகராறு என வியாபித்து, கடைசியில் தனி நாடு பிரிவினை என்கிற உச்சத்தைத் தொடாதா?
தெலுங்கானா அறிவிப்பால் மீண்டும் உயிர்ப்பெற்றுள்ள 10க்கும் மேற்பட்ட தனிமாநிலக் கோரிக்கை மற்றும் 2 தனி நாடு கோரிக்கையை இந்தியா எப்படி கையாளப் போகிறது?”
-இப்படிக் கேட்கிறார்கள் சிலர். ‘நாடு ஒட்டுப்போட்ட ஒரு லம்பாடிப் பாவாடையாக இல்லாமல், பளிச்சென்ற ஒரே நிறத்துடன் கூடிய முழுமையான பாவாடையாக இருக்க வேண்டும்’ என்பது இவர்கள் விருப்பம். இருக்கட்டும்!
தெலுங்கானா… சரிதானே!
இன்னொரு பிரிவினரோ தனிமாநில பிரிவினை என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும், வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் என்கிறார்கள்.
“தனி மாநிலம் உருவானால், தனி தலைநகர் உருவாகும். ஒரு மாநில தலைநகருக்குரிய அத்தனை வசதிகளும் ஏற்படுத்தப்படும். இதனால் உருவாகும் வேலைவாய்ப்பு, பணப்புழக்கம், உள் கட்டமைப்பு மேம்பாடுகள் போன்றவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரே எல்லை என்ற கோஷம் உணர்ச்சிகரமாக இருந்தாலும், அது வாழ்க்கை மேம்பட உதவப் போவதில்லை. நடைமுறையை யோசிக்க வேண்டும்.
எல்லைகளைத் தாண்டி மனிதர்களின் விருப்பங்கள், உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள் என எல்லைகள் வகுப்பது நிர்வாக வசதிக்காகத்தான். சிறந்த நிர்வாகத்தை மக்களுக்குத் தரவேண்டும், அவர்களின் வாழ்நிலை மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே. மக்களை புல்டோசருக்கடியில் நசுக்கிவிட்டு எல்லைகளைக் காத்து நிற்பதில் ஏது பயன்?
ஒரு மாநிலத்தைப் பிரிப்பதால் என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது.. பிராந்திய உணர்வு இப்போது என்ன குறைவாகவா இருக்கிறது? பரந்த மாநிலமாக இருக்கும் ஆந்திரத்துக்கோ, கர்நாடகத்துக்கோ நதிநீர் தாவாக்களில் பரந்த மனதோடு நடந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதா… இப்போது கோதாவரி ஆந்திராவுக்கே என்பவர்கள், அடுத்து தெலுங்கானாவுக்கே என்று கோஷம் போடப் போகிறார்கள்…அவ்வளவுதானே.
ஏற்கெனவே ஜார்க்கண்ட், உத்தராஞ்சல், சட்டீஸ்கர் என புதிய மாநிலங்கள் உருவானபோது எங்கே போயின இந்த எதிர்ப்புக் குரல்கள்?
இதே தெலுங்கானா கோரிக்கையை இரண்டு நாட்களுக்கு முன்புவரை அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஆதரித்து, சட்டசபையில் பேசினவே.. அன்றைக்கு தெரியவில்லையா பிராந்திய உணர்வின் ஆபத்து?
‘பாம்பும் சாகணும்… கம்பும் உடையக் கூடாது’ – இதுதான் தனிமாநில கோரிக்கை எதிர்ப்பாளர்களின் மனநிலை. இதப் பொருட்படுத்த வேண்டியதில்லை!”
-இப்படி சில குரல்கள்.
இனி நீங்க சொல்லுங்க… தெலுங்கானா… சரிதானா?
ஹைதராபாத் இந்தியாவின் 29வது மாநிலம் தெலுங்கானா என்பது தெரியும். ஆனால் தெலுங்கானாவைப் பற்றிய பல முக்கியமான விஷயங்கள் நிறையப் பேருக்குத் தெரிந்திருக்காது.
ஒட்டுமொத்த ஆந்திராவையும் எடுத்துக் கொண்டால், தெலுங்கானா பிராந்தியத்தால்தான் அது வளமானதாக காணப்படுகிறது என்பதே உண்மை.
ஆனால் ஆட்சி அதிகாரத்திலும், வேலைவாய்ப்பு, கல்வியிலும் தெலுங்கானா பிராந்திய மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இதனால்தான் அவர்கள் தனி மாநில கோரிக்கையையே கையில் எடுக்க நேரிட்டது.
தெலுங்கானா குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்.
நீர்வளம் நிரம்பிய தெலுங்கானா
தெலுங்கானா பிராந்தியத்தில் கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆகிய இரு ஆறுகளும் வளம் கொழிக்க வைக்கின்றன. இதில் கிருஷ்ணாவின் பங்கு 68 சதவீதமாகும். 69 சதவீத அளவுக்கு கோதாவரி ஆறு இப்பகுதியில் ஓடுகிறது.
பாதி வனப்பகுதி இங்குதான்
ஆந்திர மாநிலத்தின் ஒட்டுமொத்த வனப்பகுதியில், 45 சதவீதம் தெலுங்கானாவிலத்தான் அமைந்துள்ளது.
நிலக்கரியும் ஏராளம்
நாட்டின் மொத்த நிலக்கரி இருப்பில் 20 சதவீதம் தெலுங்கானா பகுதியில்தான் உள்ளது.
பாதி வருவாய் தெலுங்கானாதான் தருகிறது
ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 50 சதவீதம் தெலுங்கானாவிலிருந்துதான் கிடைக்கிறது.
மக்கள் தொகையிலும் பாதி இங்குதான்
ஆந்திர மாநில மக்கள் தொகையில் 42 சதவீதம் பேர் இந்தப் பகுதியில்தான் உள்ளனர்.
இந்துக்கள் அதிகம்
தெலுங்கானா பகுதியில் 85.9 சதவீதம் இந்துக்கள் உள்ளனர். முஸ்லீம்களின் எண்ணிக்கை 12.4 சதவீதமாகும். கிறிஸ்தவர்கள் 1.2 சதவீதம் பேர். மற்றவர்கள் 0.4 சதவீதம் உள்ளனர்.
17 லோக்சபா சீட்கள்
தெலுங்கானா பகுதியில் மொத்தம் 17 லோக்சபா தொகுதிகள் உள்ளன.
சட்டசபைத் தொகுதிகள் 119
இங்குள்ள சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கை 119 ஆகும்.
பாதிப் பரப்பளவு இங்குதான்
ஒட்டுமொத்த ஆந்திராவின் பரப்பளவில் 42 சதவீதம் தெலுங்கானாவில்தான் உள்ளது. அதாவது 1,14,840 சதுர கிலோமீட்டர்.
தெலுங்கானா மாநிலப் பிரிவினையால் தெலுங்குத் திரையுலகம் பாதிக்காது என்று அத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவைப் பிரிக்கும் முடிவைத் தொடர்ந்து பெரும் குழப்பம் தெலுங்குத் திரையுலகம் குறித்து எழுந்துள்ளது.
போடோலாந்து, கர்பி அங்லாங் மாநிலங்களை உருவாக்கக் கோரி அசாமில் போராட்டம் தீவிரம்!!
தெலுங்கானாவைத் தொடர்ந்து அசாமை 3 மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. போடோலாந்து, கர்பி அலாங் மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்பதற்கான போராட்டங்கள் உக்கிரமடைந்துள்ளன.
கர்பி அங்கலாங் மாவட்டத்தில் நேற்று பெரும் வன்முறை வெடித்தது. அரசு அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அலுவலகங்கள் எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் ஒருவர் பலியானார். மேலும் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் போடோலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி 12 மணி நேர ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்தும் வடகிழக்கு மாநிலத்துக்கு செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டங்களால் அசாமில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தெலுங்கானாவைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்...

தெலுங்கானா பிரிவினை தெலுங்குத் திரையுலகை பாதிக்குமா??
தெலுங்கானா மாநிலப் பிரிவினையால் தெலுங்குத் திரையுலகம் பாதிக்காது என்று அத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவைப் பிரிக்கும் முடிவைத் தொடர்ந்து பெரும் குழப்பம் தெலுங்குத் திரையுலகம் குறித்து எழுந்துள்ளது.
ஆனால் இந்தப் பிரிவினையால் தெலுங்குத் திரையுலகம் பாதிக்கப்படாது என்று அத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் உடனடியாக இழப்பு ஏதும் ஏற்படாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தெலுங்குத் திரையுலகம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இத்துறை ஆண்டுக்கு ரூ. 12,000 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டுகிறது.
தெலுங்கில் ஆண்டுக்கு 150 படங்கள் வரை தயாரிக்கப்படுகிறது.
90களுக்கு முன்பு வரை சென்னையில்தான் தெலுங்குத் திரையுலகம் செயல்பட்டு வந்தது. பின்னர்தான் ஹைதராபாத்துக்கு இடம் பெயர்ந்தது.
தெலுங்குத் திரையுலகைப் பொறுத்தவரை அதில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கடலோர ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்தான். தெலுங்கானா போராட்டத்தின்போது கூட அதனால்தான் தெலுங்கானா போராட்டக்காரர்கள் தெலுங்குத் திரையுலகினரை குறி வைத்து எதிர்ப்பு காட்டினார்கள்.
தெலுங்கானா பிரிவினையால் தெலுங்குத் திரையுலகுக்கு உடனடி பாதிப்பு வராது என்று பிரபல தயாரிப்பாளர் தம்மரெட்டி பரத்வாஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,30 சதவீத படப்பிடிப்புகள் விசாகப்பட்டனம் உள்ளிட் பிற கடலோர ஆந்திராவில்தான் நடைபெறுவதாக கூறினார்.

தெலுங்கானா.. 'அங்கிட்டு கோடீஸ்வர சாமிகள்.. இங்கிட்டு கல்வி நிறுவனங்கள்'
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா உருவாகும் நிலையில் எந்த பிரதேசத்துக்கு லாபம்? நட்டம்? என்ற கணக்கும் பார்க்கப்பட்டு வருகிறது.
நாட்டின் 29வது புதிய மாநிலமாக தெலுங்கானா உருவாக இருக்கிறது. இது கடலோர ஆந்திர, ராயலசீமா பகுதிகளில் கடும் எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது. தெலுங்கானா உருவாக்கத்துக்கான காங்கிரஸின் முடிவை எதிர்த்து முழு அடைப்புப் போராட்டம் வன்முறை வெடித்துள்ளன.
இதனிடையே தெலுங்கானா, ஆந்திரா பகுதிகளில் உள்ள 'வளம்' பற்றிய கணக்குகளும் பட்டியலிடப்பட்டு வருகிறது. இந்தக் கணக்கில் தெலுங்கானாவில் முக்கிய கல்வி நிறுவனங்களும் ஆந்திராவில் கோடீஸ்வர கோயில்களும் ஒதுங்கியுள்ளன.
முக்கிய கல்வி நிறூவனங்களான ஐஐடி மேடக், என்.ஐ.டி வாரங்கல், ஐ.எஸ்.பி. கட்சிபெளலி, பி.ஐ.டி.எஸ். பிலானி வளாகம், என்.ஐ.எப்.டி. ஹைதராபாத் வளாம்- மடபூர், நல்சார் சட்ட பல்கலைக் கழகம் போன்ற சர்வதேச அளவில் புகழ்பெற்றவை. இவை அனைத்துமே தெலுங்கானாவில்தான் இருக்கின்றன. மத்திய பல்கலைக் கழகங்களான ஹைதராபாத் பல்கலைக் கழகம், ஆங்கிலம்,வெளிநாட்டு மொழிகள் பல்கலைக் கழகம் ஆகியவையும் தெலுங்கானாவில்தான் இருக்கின்றன.
இப்படி முக்கிய பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் தெலுங்கானாவில் ஒதுங்கிவிட்டதால் விசாகப்படினத்தில் ஐஐஎம் அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்படலாம். இதேபோல் சித்தூரில் ஐஐஐடி அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது. மத்திய பல்கலைக் கழகம் ஒன்றும் எஞ்சிய ஆந்திராவுக்கு கிடைக்கலாம்.
அதேநேரத்தில் ஆண்டு வருமானம் ரூ10 கோடிக்கு அதிமாகக் கொடுக்க 10 கோயில்களில் 7 ஆந்திராவில்தான் இருக்கின்றன. கடந்த ஆண்டு ரூ2010 கோடி வருவாய் கொடுத்த திருப்பதியும் ஆந்திராவில்தான் இருக்கின்றன.
ஆண்டுக்கு ரூ40 கோடி கொடுக்கும் காளஹஸ்தி, ஆண்டுக்கு ரூ65 கோடி கொடுக்கும் விஜயவாடா துர்கமல்லேஸ்வர ஸ்வாமி, ஸ்ரீசைலம், போன்றவை எல்லாமே 'ஆந்திராவில்' இருக்கின்றன. இதேபோல் விசாகப்பட்டினம் நரசிம்ஹ ஸ்வாமி தேவஸ்தானம், அன்னாவரம் ஸ்ரீ வேங்கட சத்யநாரயண ஸ்வாமி போன்றவையும் ஆந்திராவிலேயே இருக்கின்றன,
ஆக கல்வியா? செல்வமா? என்ற போட்டிதான் இது!முக்கிய கல்வி நிறூவனங்களான ஐஐடி மேடக், என்.ஐ.டி வாரங்கல், ஐ.எஸ்.பி. கட்சிபெளலி, பி.ஐ.டி.எஸ். பிலானி வளாகம், என்.ஐ.எப்.டி. ஹைதராபாத் வளாம்- மடபூர், நல்சார் சட்ட பல்கலைக் கழகம் போன்ற சர்வதேச அளவில் புகழ்பெற்றவை. இவை அனைத்துமே தெலுங்கானாவில்தான் இருக்கின்றன. மத்திய பல்கலைக் கழகங்களான ஹைதராபாத் பல்கலைக் கழகம், ஆங்கிலம்,வெளிநாட்டு மொழிகள் பல்கலைக் கழகம் ஆகியவையும் தெலுங்கானாவில்தான் இருக்கின்றன.
இப்படி முக்கிய பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் தெலுங்கானாவில் ஒதுங்கிவிட்டதால் விசாகப்படினத்தில் ஐஐஎம் அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்படலாம். இதேபோல் சித்தூரில் ஐஐஐடி அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது. மத்திய பல்கலைக் கழகம் ஒன்றும் எஞ்சிய ஆந்திராவுக்கு கிடைக்கலாம்.
அதேநேரத்தில் ஆண்டு வருமானம் ரூ10 கோடிக்கு அதிமாகக் கொடுக்க 10 கோயில்களில் 7 ஆந்திராவில்தான் இருக்கின்றன. கடந்த ஆண்டு ரூ2010 கோடி வருவாய் கொடுத்த திருப்பதியும் ஆந்திராவில்தான் இருக்கின்றன.
ஆண்டுக்கு ரூ40 கோடி கொடுக்கும் காளஹஸ்தி, ஆண்டுக்கு ரூ65 கோடி கொடுக்கும் விஜயவாடா துர்கமல்லேஸ்வர ஸ்வாமி, ஸ்ரீசைலம், போன்றவை எல்லாமே 'ஆந்திராவில்' இருக்கின்றன. இதேபோல் விசாகப்பட்டினம் நரசிம்ஹ ஸ்வாமி தேவஸ்தானம், அன்னாவரம் ஸ்ரீ வேங்கட சத்யநாரயண ஸ்வாமி போன்றவையும் ஆந்திராவிலேயே இருக்கின்றன,
போடோலாந்து, கர்பி அங்லாங் மாநிலங்களை உருவாக்கக் கோரி அசாமில் போராட்டம் தீவிரம்!!
தெலுங்கானாவைத் தொடர்ந்து அசாமை 3 மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. போடோலாந்து, கர்பி அலாங் மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்பதற்கான போராட்டங்கள் உக்கிரமடைந்துள்ளன.
கர்பி அங்கலாங் மாவட்டத்தில் நேற்று பெரும் வன்முறை வெடித்தது. அரசு அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அலுவலகங்கள் எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் ஒருவர் பலியானார். மேலும் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் போடோலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி 12 மணி நேர ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்தும் வடகிழக்கு மாநிலத்துக்கு செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டங்களால் அசாமில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக