1. வைகறையில் கண் விழித்து
வாசலில் நீர் தெளித்து
காலைக் கடன் முடித்து
கரியால் பல் துலக்கி
கை கால் முகம் கழுவி
கடவுளை வணங்கி
கைச் சீனியை நாவால் நக்கி
கசாயத் தேநீர் குடிக்க
உடற்ச் சோர்வு
ஓடி மறைந்து விடும்
2. கணவன் குழந்தைகளுக்கு
காலை உணவளித்து
எஞ்சியதை உண்டு
இடுப்பில் படங்கு கட்டி
கம்பும் கூடையும் குழந்தையுமாய்
மடுவத்துக் கோடி
ஆயாவின் பாதுகாப்பில்
அதை விட்டு விட்டு...
3. பள்ளங்களில் இறங்கி
மேடுகளில் ஏறி
ஓட்டமும் நடையுமாய் ஓடி
நிரை பிடித்து நின்று
முக வியர்வையை
முந்தானையால் துடைக்க
முறைப்பார் கங்காணி
குரைப்பார் கணக்கப்பிள்ளை
சங்குக்கு சற்று பிந்தியதால்....
4. ஓடு ஓடு ஆளோடு ஓடு..
என்று கடுகடுப்பார் கங்காணி
இறாத்தல் இல்லாட்டி
பேர் கிடைக்காது என்று
எச்சரிப்பார் கணக்கன் கைக்கம்பைக் காட்டி
கூடையை தலை சுமக்க
வேதனையை மனம் சுமக்கும்
அடுத்தவர் வேதனையை
அறியா அற்ப ெஜன்மங்கள்
என்று நம் மனம் சபிக்கும்
5. மனிதர்கள் மட்டுமா...?
மாறி மாறி வரும் பருவ
கால நிலையும் எம்மை
பாடாய் படுத்தும்
சுட்டெரிக்கும் சூரியன்
சுழன்றடிக்கும் புயல் காற்று
கொட்டும் மழை இடி மின்னல்
நடுங்க வைக்கும் குளிர்
நாளாந்தம் துன்புறுத்தும்
6. அட்டைக் கடியும்
அரிப்பெடுக்கும் எரிப்பூச்சியும்
கொட்டும் தேனீக்களும்
கொடிய விஷப்பாம்புகளும்
கடிக்கும் கட்டெறும்புகளும்
அன்றாடம் எங்களை
ஆட்டிப் படைக்கும்
தோட்ட அதிகாரிகளைப் போல....
7. கூனிக் குறுகி கொழுந்து கூடை சுமந்து
காலை முதல் மாலை வரை
கடுமையாய் ஓடி உழைத்து
வியர்வை சிந்தி வேலை செய்தாலும்
வேலை வாங்கும் நிர்வாகம்
மனிதராகவே எம்மை மதிப்பதில்லை
கடுகளவும் கருணையும் காட்டுவதில்லை
அவர்களுக்கு வேண்டியதெல்லாம்
வேலை வேலை வேலை.... யொன்றேதான்.
8. வேலை முடித்து விறகுக் கட்டுச் சுமையோடு
வீட்டுக்குப் போனாலும் விடிவில்லை எமக்கு
ஈர விறகு எரியாது அடம்பிடிக்கும்
கரியும் புகையும் கண்களை குளமாக்கும்
குனிந்து குனிந்து அடுப்பூதியே
இடுப்பும் கடுகடுக்கும்
உடம்பும் சோர்ந்து விடும்
உள்ளமும் சலிப்படையும்.
9. குழந்தைகளின் நச்சரிப்பு
குடிகாரக் கணவனின்
கோரத் தாண்டவம்
வீட்டின் வறுமை எங்களை
விரட்டும் ஓட.... ஓட.
மத்தளம் போல் அடிபட்டு
குடும்பத்தைக் கட்டிச் சுமக்கும்
சுமைதாங்கிகளாய் நிலை கொண்டோம்.
10. நாட்டின் பொருளாதார உயர்வுக்கு
நாங்கள் ஓடி உழைத்தாலும் எம்
வீட்டு பொருளாதாரம் என்றும்
வறுமை கோட்டுக்குள்ளேயே
வீழ்ந்து கிடக்கும் வளர்ச்சியின்றி
விலைவாசி ஏற்றமும்
நாட் கூலியும் எங்களை
நாயாய் துரத்தும் வேலைக்கு
ஓட்டு வாங்கியோர் ஒய்யாரமாய்
வாழ்வார்கள் உயர் மாடியிலே....
11. சங்கங்கள் இருந்தென்ன
சந்தாப் பணம் கொடுத்தென்ன
ஓட்டு போட்டென்ன
நாட்டில் அரசும்
அமைச்சர்களும் இருந்தென்ன
கூடிய ஊதியம் கிடைத்தென்ன
கூட்டு ஒப்பந்தங்கள் செய்தென்ன
எங்கள் வலியும் சுமையும் என்றும்
இம்மியும் குறைந்த பாடில்லை.
12. பெயருக்கும் புகழுக்கும் மட்டுமே
பெண்கள் அமைப்புக்கள்
கண்கள் இருந்தும் எம்மை காணாதவர்
காதுகள் இருந்தும் எம்குரல் கேளாதவர்
எங்களுக்கும் சமூகத்துக்கும்
இருக்கும் எரியும் பிரச்சினைகள்
ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரமுண்டு.
அன்றும் .... இன்றும் ..... என்றும்
நாங்கள் சுமை தாங்கிகளே...... .

வாசலில் நீர் தெளித்து
காலைக் கடன் முடித்து
கரியால் பல் துலக்கி
கை கால் முகம் கழுவி
கடவுளை வணங்கி
கைச் சீனியை நாவால் நக்கி
கசாயத் தேநீர் குடிக்க
உடற்ச் சோர்வு
ஓடி மறைந்து விடும்
2. கணவன் குழந்தைகளுக்கு
காலை உணவளித்து
எஞ்சியதை உண்டு
இடுப்பில் படங்கு கட்டி
கம்பும் கூடையும் குழந்தையுமாய்
மடுவத்துக் கோடி
ஆயாவின் பாதுகாப்பில்
அதை விட்டு விட்டு...
3. பள்ளங்களில் இறங்கி
மேடுகளில் ஏறி
ஓட்டமும் நடையுமாய் ஓடி
நிரை பிடித்து நின்று
முக வியர்வையை
முந்தானையால் துடைக்க
முறைப்பார் கங்காணி
குரைப்பார் கணக்கப்பிள்ளை
சங்குக்கு சற்று பிந்தியதால்....
4. ஓடு ஓடு ஆளோடு ஓடு..
என்று கடுகடுப்பார் கங்காணி
இறாத்தல் இல்லாட்டி
பேர் கிடைக்காது என்று
எச்சரிப்பார் கணக்கன் கைக்கம்பைக் காட்டி
கூடையை தலை சுமக்க
வேதனையை மனம் சுமக்கும்
அடுத்தவர் வேதனையை
அறியா அற்ப ெஜன்மங்கள்
என்று நம் மனம் சபிக்கும்
5. மனிதர்கள் மட்டுமா...?
மாறி மாறி வரும் பருவ
கால நிலையும் எம்மை
பாடாய் படுத்தும்
சுட்டெரிக்கும் சூரியன்
சுழன்றடிக்கும் புயல் காற்று
கொட்டும் மழை இடி மின்னல்
நடுங்க வைக்கும் குளிர்
நாளாந்தம் துன்புறுத்தும்
6. அட்டைக் கடியும்
அரிப்பெடுக்கும் எரிப்பூச்சியும்
கொட்டும் தேனீக்களும்
கொடிய விஷப்பாம்புகளும்
கடிக்கும் கட்டெறும்புகளும்
அன்றாடம் எங்களை
ஆட்டிப் படைக்கும்
தோட்ட அதிகாரிகளைப் போல....
7. கூனிக் குறுகி கொழுந்து கூடை சுமந்து
காலை முதல் மாலை வரை
கடுமையாய் ஓடி உழைத்து
வியர்வை சிந்தி வேலை செய்தாலும்
வேலை வாங்கும் நிர்வாகம்
மனிதராகவே எம்மை மதிப்பதில்லை
கடுகளவும் கருணையும் காட்டுவதில்லை
அவர்களுக்கு வேண்டியதெல்லாம்
வேலை வேலை வேலை.... யொன்றேதான்.
8. வேலை முடித்து விறகுக் கட்டுச் சுமையோடு
வீட்டுக்குப் போனாலும் விடிவில்லை எமக்கு
ஈர விறகு எரியாது அடம்பிடிக்கும்
கரியும் புகையும் கண்களை குளமாக்கும்
குனிந்து குனிந்து அடுப்பூதியே
இடுப்பும் கடுகடுக்கும்
உடம்பும் சோர்ந்து விடும்
உள்ளமும் சலிப்படையும்.
9. குழந்தைகளின் நச்சரிப்பு
குடிகாரக் கணவனின்
கோரத் தாண்டவம்
வீட்டின் வறுமை எங்களை
விரட்டும் ஓட.... ஓட.
மத்தளம் போல் அடிபட்டு
குடும்பத்தைக் கட்டிச் சுமக்கும்
சுமைதாங்கிகளாய் நிலை கொண்டோம்.
10. நாட்டின் பொருளாதார உயர்வுக்கு
நாங்கள் ஓடி உழைத்தாலும் எம்
வீட்டு பொருளாதாரம் என்றும்
வறுமை கோட்டுக்குள்ளேயே
வீழ்ந்து கிடக்கும் வளர்ச்சியின்றி
விலைவாசி ஏற்றமும்
நாட் கூலியும் எங்களை
நாயாய் துரத்தும் வேலைக்கு
ஓட்டு வாங்கியோர் ஒய்யாரமாய்
வாழ்வார்கள் உயர் மாடியிலே....
11. சங்கங்கள் இருந்தென்ன
சந்தாப் பணம் கொடுத்தென்ன
ஓட்டு போட்டென்ன
நாட்டில் அரசும்
அமைச்சர்களும் இருந்தென்ன
கூடிய ஊதியம் கிடைத்தென்ன
கூட்டு ஒப்பந்தங்கள் செய்தென்ன
எங்கள் வலியும் சுமையும் என்றும்
இம்மியும் குறைந்த பாடில்லை.
12. பெயருக்கும் புகழுக்கும் மட்டுமே
பெண்கள் அமைப்புக்கள்
கண்கள் இருந்தும் எம்மை காணாதவர்
காதுகள் இருந்தும் எம்குரல் கேளாதவர்
எங்களுக்கும் சமூகத்துக்கும்
இருக்கும் எரியும் பிரச்சினைகள்
ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரமுண்டு.
அன்றும் .... இன்றும் ..... என்றும்
நாங்கள் சுமை தாங்கிகளே...... .



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக