ஞாயிறு, 17 நவம்பர், 2013

கொமன்வெல்த் பண்­பு­களை மீறும் சனல் 4 மீதான நட­வ­டிக்­கைகள்

கொமன்வெல்த் மாநாட்டை இலங்கை அர­சாங்கம், கொழும்பில் பெரும்­பா­டு­பட்டு நடத்­தி­யது. இந்த மாநாட்டை நடத்­து­வ­தற்­காக இலங் கை பட்­ட­பாடு கொஞ்ச நஞ்­ச­மல்ல.

அது­போ­லவே, இந்த மாநாட்டை நடத்­து­வ­தற்­காக, இலங்கை விட்டுக் கொடுப்­பு­களை செய்­தி­ருந்­தாலும், கொமன்வெல்த் அமைப்பின் கொள்­கை­களைப் பேணிக் கொள்­வ­திலும் கூடவே விட்­டுக்­கொ­டுப்­புடன் நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

சனல்- – 4 குழு­வினர் தடுக்­கப்­பட்ட விவ­காரம், ஜன­நா­யக ரீதி­யான போராட்­டங்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடை என்றும் பல்­வேறு விட­யங்­களில் இலங்கை அர­சாங்கம் கொமன்வெல்த் அமைப்பின் அடிப்­படைக் கோட்­பா­டு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு எழுந்­தி­ருக்­கி­றது.

இலங்­கையின் கொலைக்­க­ளங்கள் ஆவ­ணப்­ப­டங்­களின் மூலம், இறுதிப் போரில் நடந்த பல போர்க்­குற்­றங்கள் தொடர்­பான வீடி­யோக்­க­ளையும், படங்­க­ளையும் வெளி­யிட்­டதன் மூலம் சனல் –- 4 தொலைக்­காட்­சிக்கும் இலங்கை அர­சுக்கும் இடையில் ஒரு பனிப்போர் பல ஆண்­டு­க­ளா­கவே நடந்து வந்­தி­ருந்­தது.

இலங்கை அர­சுக்கு எதி­ராக மனி­த­ உ­ரிமை மீறல்­க­ளுக்கு எதி­ராக கருத்­துக்­களை வெளி­யிடும் எவ­ரையும், விடு­தலைப் புலி­களின் ஆத­ர­வா­ளர்கள், புலி­களின் பணத்­துக்­காக செயற்­ப­டு­ப­வர்கள் என்று முத்­திரை குத்திப் பழக்­கப்­பட்டு விட்­டது இலங்கை அர­சாங்கம்.

இந்­த­நி­லையில், சர்­வ­தேச அளவில் இலங்­கைக்குப் பெரும் அவ­மா­னத்தை ஏற்­ப­டுத்­திய சனல்- – 4 மீதும், அர­சாங்கம் அத்­த­கைய குற்­றச்­சாட்டை சுமத்­தி­யது ஆச்­ச­ரி­ய­மா­ன­தல்ல.

போர்க்­குற்­றங்­களை அம்­ப­லப்­ப­டுத்தி வந்த சனல்- – 4 மீது கடும் கோபத்தில் இருந்த அர­சாங்கம், அதன் ஊட­க­வி­ய­லா­ளர்­களை இலங்­கைக்குள் வர­வி­டாமல் இறுக்­கத்தைப் பேணி­வந்­தது.

ஆனால், கொமன்வெல்த் மாநாட்டை நடத்தும் பொறுப்பு இலங்­கை­யிடம் வந்­த­போது, சனல்- – 4 தொலைக்­காட்­சிக்கு மட்டும் அனு­மதி மறுத்தால், அது கொமன்­வெல்த்தின் கோட்­பா­டு­க­ளுக்கு விரோ­த­மாகி விடும் என்­பதைப் புரிந்து கொண்டே, சனல் -– 4 குழு­வினர் கொழும்பு வர அனு­மதி வழங்­கி­யது.

சனல்- – 4 குழு­வி­ன­ருக்கு கொழும்பு அனு­மதி வழங்­கி­யதை இலங்­கையின் உச்­ச­பட்ச ஊடக சுதந்­தி­ரத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்­தி­ருந்தார்.

இதனை, உச்­சக்­கட்­ட­மான நகைச்­சு­வை­யா­கவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், இலங்­கையின் ஊடக சுதந்­திர நிலை எந்த நிலையில் உள்­ள­தென்­பதை, வெளி­யி­லுள்ள எவரும் வந்து கூற­வேண்­டி­ய­தில்லை.

இத்­த­கைய நிலையில் சனல் – -4 தொலைக்­காட்­சிக்கு வழங்­கப்­பட்ட அனு­ம­தியை ஊடக சுதந்­தி­ரத்தின் உச்­சக்­கட்டம் என்­பது எந்­த­ள­வுக்கு பொருத்­த­மா­னது?

சனல் -– 4 குழு­வுக்கு அர­சாங்கம் அனு­மதி அளித்­தது ஒரு நிர்ப்­பந்­தத்தின் பேரி­லேயே தவிர, விரும்பிக் கொடுத்த அனு­ம­தி­யல்ல.

எங்­க­ளிடம் மறைப்­ப­தற்கு எது­வு­மில்லை என்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ செய்­தி­யாளர் சந்­திப்­பு­களில் கூறி­னாலும் – எவரும் வரலாம், எங்கும் சென்று பார்­வை­யி­டலாம் என்று உத்­த­ர­வாதம் கொடுத்­தாலும், சனல் – -4 குழு­வி­ன­ருக்கு அத்­த­கைய சுதந்­தி­ரத்தை அர­சாங்கம் அளிக்­க­வில்லை.

சனல் – -4 குழு­வி­ன­ருக்கு அனு­ம­தியும் கொடுத்து விட்டு, அவர்­களை முடக்கிப் போடு­வ­தற்கும் அர­சாங்கம் திட்­ட­மிட்டே செயற்­பட்­டுள்­ளது என்ற சந்­தேகம் வலு­வாக எழுந்­துள்­ளது.

ஒரு கையால் கொடுத்துவிட்டு மறு கையால் பிடுங்கிக் கொள்ளும் உத்திதான் சனல் – -4 விட­யத்தில் கையா­ளப்­பட்­டது.

சனல் -– 4 குழு­வினர் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வந்­தி­றங்கி, வெளியே வந்­த­போதே அவர்­களை எதிர்ப்புப் போராட்­டக்­கா­ரர்கள் தான் வர­வேற்­றனர்.

அவர்­களை சமா­ளித்துக் கொண்டு, கொழும்பு சென்ற குழு­வினர் மறுநாள் கிளி­நொச்சி செல்­வ­தற்­காக ரயிலில் சென்ற போது அனு­ரா­த­பு­ரத்தில் வழி­ம­றித்து போராட்டம் நடத்­தப்­பட்­டது.

பொலிஸார் அவர்­க­ளுக்குப் பாது­காப்பு வழங்கி, கிளி­நொச்சி அழைத்துச் செல்­வ­தற்குப் பதி­லாக, கொழும்­புக்கே கொண்டு சென்­றனர்.

குறிப்­பிட்ட நேரத்தில், சனல் -4 குழு­வினர் கட்­டு­நா­யக்க விமான நிலையம் வரும் தக­வ­லையும், ரயிலில் அவர்கள் பயணம் செய்யும் தக­வ­லையும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு யார் கொடுத்­தது என்ற கேள்வி எழுந்­தது.

தாம் கொழும்பில் வந்­தி­றங்­கி­யதில் இருந்தே புல­னாய்­வா­ளர்கள் தம்மைப் பின்­தொ­டர்­வ­தாக சனல் – 4 குழு­வினர் கூறி­யி­ருந்­தனர்.

ஆக, சனல் – -4 குழு­வி­ன­ருக்கு கொழும்பு வர அனு­ம­தித்த அர­சாங்­கமே, அவர்­களை வடக்­கிற்குச் செல்ல விடாமல் போராட்­டக்­கா­ரர்கள் மூலம் முடக்­கி­யது.

இந்தப் போராட்­டங்கள் சர்­வ­தேச அளவில் அர­சாங்­கத்­துக்கு நல்ல பெயரை ஏற்­ப­டுத்திக் கொடுக்­க­வில்லை.

கலம் மக்ரே இலங்கை வந்து நிைல­மை­களைப் பார்த்து உண்­மையை உணர்ந்து கொள்­ளட்டும் என்று கூறிய அர­சாங்கம், அதற்­கான சூழலை ஏற்­ப­டுத்திக் கொடுக்­க­வில்லை.

சனல் – -4 போன்ற ஊட­க­வி­ய­லா­ளர்­களும், வெளி­நாட்டுப் பிர­தி­நி­தி­களும் வடக்­கிற்கு செல்­வதைத் தடுப்­ப­தற்­கா­கவே அர­சாங்கம் பலாலி – -இரத்­ம­லா­னைக்கு இடை­யி­லான விமான சேவை­க­ளையும் கடந்த ஒரு வார­மாகத் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்தி வைத்­துள்­ளது.

சனல் -– 4 குழு­வி­ன­ருக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட போராட்­டங்கள், பொலிஸில் செய்­யப்­பட்ட முறைப்­பாடு என்று எல்­லாமே, சனல் – -4 குழு­வினர் கொமன்வெல்த் மாநாட்­டுக்கு அப்பால் செயற்­ப­டவோ நக­ரவோ முடி­யா­த­படி போடப்­பட்ட திட்­ட­மா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.

ஒரு பக்­கத்தில் கொமன்வெல்த் அமைப் பின் கொள்­கை­களின் பெறு­மா­னங்­களை கட்டிக் காப்­ப­தாக, கூறிக் கொள்ளும் அர­சாங்கம், ஊட­கங்கள் விட­யத்தில் பொறுப்­புடன் நடந்து கொள்­ள­வில்லை.

ஜனா­தி­ப­தியை நெருங்க விடாமல் பி.பி.சி. செய்­தி­யா­ளர்கள் தடுக்­கப்­பட்­டது இதற்கு இன்னோர் உதா­ரணம்.

அது­போலத் தான், காணா­மற்­போ­னோரின் உற­வி­னர்கள் கொழும்பில் போராட்டம் நடத்தச் சென்­ற­போது வழி மறிக்­கப்­பட்டு திருப்பி அனுப்­பப்­பட்­டனர்.

இவை­யெல்­லாமே, அர­சாங்கம் இந்த மாநாட்டை வெளிப்­படைத் தன்­மை­யுடன் நடத்தும் அர்ப்­ப­ணிப்பைக் கொண்­டி­ருக்­க­வில்லை என்­ப­தற்கும், கொமன்வெல்த் பண்­பு­களை மதிக்­க­வில்லை என்­ப­தற்கும் சான்­று­க­ளா­கவே அமைந்­தன.

ஒரு சர்­வ­தேச மாநாட்டை நடத்த ஆசைப்­பட்ட அர­சாங்கம், பார­பட்­ச­மின்றி ஊட­கங்­க­ளையும் ஜன­நா­யக பண்­பு­க­ளையும் மதிக்கும் அள­வுக்கு செயற்­பட்­டி­ருக்க வேண்டும்.

ஆனால், அரசாங்கத்தினால் அவ்வாறு இருக்க முடியவில்லை. ஒன்றையும் தாம் மறைக்கவில்லை என்று அரசாங்கம் கூறு வது சரியானால், ஊடகவியலாளர்களின் சுயாதீனத்தை எதற்காகத் தடுக்க வேண்டும்?

இந்தக் கேள்விதான் இன்று உலகெங்கும் எழுப்பப்படுகிறது.

சனல் – -4 குழுவினர் இலங்கைக்கு வரு வதற்கு அனுமதி மறுத்திருந்தால் கூட, இந் தளவுக்குப் பெரிய விவகாரமாக மாறியிருக் காது.

அனுமதியைக் கொடுத்து, கொழும்புக்கு அழைத்து விட்டு, அவர்களை அடக்க முனைந்தது தான், இலங்கைக்கு சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொமன்வெல்த் மாநாட்டின் மூலம் இதுபோன்ற பல விடயங்களில் இலங்கை அரசாங்கம் தனது தலையிலேயே மண்ணை வாரிக் கொட்டியுள்ளது.


-கபில்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல