கொமன்வெல்த் மாநாடு இன்றுடன் முடிவடைகின்ற சூழலில், இந்த மாநாட்டின் மூலம் இலங்கை அடைந்துள்ள பலன்கள் என்ன என்ற கேள்விகளும் கூடவே எழுகின்றன.
ஏனென்றால், இந்த மாநாட்டை இலங்கை அரசாங்கம் அவ்வளவு சுலபமாக நடத்தி முடிக்கவில்லை.
இதற்காக உள்நாட்டிலும் வெளியுலகிலும் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.
கடுமையான எதிர்ப்புகள், குற்றச்சாட்டுகள், அழுத்தங்கள், நெருக்கடிகள் எல்லாவற்றையும் தாண்டியே இந்த மாநாட்டை நடத்த முடிந்துள்ளது.
இந்தளவு பெரிய போராட்டத்தின் மூலம் இலங்கை, கொமன்வெல்த் மாநாட்டை நடத்தி முடித்தாலும், அடுத்த இரண்டு ஆண்டுகள் கொமன்வெல்த் அமைப்புக்குத் தலைமை தாங்கும் முக்கிய பொறுப்பு இலங்கைக்கு வந்துள்ளது.
ஒரு பக்கத்தில், இந்த மாநாட்டை நடத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கம் தன் மீதுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கப் பார்ப்பதான ஒரு கருத்தும் உள்ளது.
இந்தக் கருத்து, தமிழ் நாட்டில் மட்டும் இருக்கவில்லை. நியூயோர்க் ரைம்ஸ் கூட இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஆனால், கொமன்வெல்த் மாநாடும், இலங்கையிடம் வந்துள்ள அதன் தலைமைப் பொறுப்பும், அத்தகைய மறைத்தலுக்கு உதவியாக இருக்குமா என்பது கேள்விக்குரியது.
2009இல் போர் முடிவுக்கு வந்த சில மாதங்களில், ரினிட்டாட்டில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டில், கொழும்பில் மாநாட்டை நடத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்ட போது, போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பலவும், உறுப்புநாடுகளுக்குச் சரியாகத் தெரிந்திருக்கவில்லை.
போரை வெற்றி கொண்ட இலங்கை, அமைதியையும் வென்று விடும் என்ற நம்பிக்கையில் அப்போது இந்த மாநாட்டை நடத்த அவர்கள் இணங்கினர்.
அதேவேளை, மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கமோ, இத்தகையதொரு சர்வதேச மாநாட்டின் மூலம், உலகின் ஆதரவையும் கவனத்தையும் தன்பக்கம் திருப்பி எல்லா சிக்கல்களில் இருந்தும் விடுபட்டுக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டிருந்தது.
ஆனால் காலப்போக்கில், ஒவ்வொரு குற்றச்சாட்டுகளாக, வெளிவர வெளிவர, சர்வதேச சமூகம் ஆடிப்போனது.
இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்த எடுத்த முடிவு சரியானதா என்ற சந்தேகம் கூடப் பலநாடுகளுக்கு ஏற்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், அண்டைநாடான இந்தியாவினது ஆதரவு, இலங்கைக்குப் பலமாகக் கிடைத்ததால், மாநாட்டை நடத்தும் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
இந்த மாநாட்டை நடத்துவதற்காக இலங்கை பலநாடுகளின் காலில் விழாத குறையாக ஆதரவு தேடவேண்டியிருந்தது.
பல விடயங்களில் விட்டுக் கொடுக்கவும், படியிறங்கிச் செல்லவும் வேண்டியிருந்தது.
இதன் மூலம் தான், இந்த மாநாட்டை நடத்தும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளவும், நடத்தி முடிக்கவும் முடிந்துள்ளது.
பொருளாதார ரீதியாக பெரும் செலவுகளுடன் இந்த மாநாட்டை நடத்தி முடித்திருந்தாலும், இதனால் நீண்டகால பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கும் என்று அரசாங்கம் உறுதியாக நம்புகிறது.
அதுமட்டுமன்றி, 1976ஆம் ஆண்டில் சிறிமாேவா பண்டாரநாயக்க பிரதமராக இருந்த போது நடத்தப்பட்ட அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டுக்குப் பின்னர், ஒரு பெரிய சர்வதேச மாநாட்டை நடத்தியவர் என்ற பெருமையையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பெற்றுக் கொள்கிறார்.
இந்தப் பெருமிதமும், பொருளாதார வாய்ப்புகளும் தான், இந்த மாநாட்டின் மூலம் இலங்கை அடையப் போகும் பலன்களாக இருக்குமேயானால், இதற்காக எதிர்கொள்ளப்பட்ட சவால்கள் மிகவும் அதிகமென்றே கூறலாம்.
இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்பதற்கான ஆதாரங்கள் கடந்த பல மாதங்களாகவே ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தன.
பல நாடுகள் குற்றச்சாட்டுகளை எழுப்பி இலங்கையை பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
இன்னும் இந்தியா போன்ற நாடுகள் வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுத்தன.
இப்படியாக, கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்காக இலங்கை மீது செலுத்தப்பட்ட அழுத்தங்கள் அதிகம்.
கொமன்வெல்த் மாநாட்டை நடத்தும் நிலையில் இருந்து பின்வாங்கியிருந்தாலோ, அதற்கான பொறுப்பை இலங்கை ஏற்காதிருந்தாலோ, இலங்கை இந்தளவுக்கு சர்வதேச அளவில் கசக்கிப் பிழியப்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான்.
கொமன்வெல்த் மாநாட்டை அண்டிய காலப்பகுதியில், கனடா, பிரிட்டன், அமெரிக்க, அவுஸ்திரேலிய, நியூஸிலாந்து ஊடகங்கள், இலங்கைக்கு எதிரான கருத்துகளையும், போர்க்குற்றங்கள், மனிதஉரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் ஆதாரங்களையும், தகவல்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டுப் பரபரப்பை எற்படுத்தின.
இவையெல்லாம், மீண்டும் ஒருமுறை, இலங்கையின் மீதுள்ள கறைகளை உலகின் முன்பாக, வெளிச்சம் போட்டுக் காண்பித்தன.
இது சர்வதேச அரங்கில் இலங்கையை ஒரு போர்க்குற்ற நாடாகக்காட்டும், கருத்தை உருவாக்கியுள்ளன.
இவற்றை மறைக்கவே கொமன்வெல்த் மாநாட்டை இலங்கை பயன்படுத்தியுள்ளதாகவும், கருத்துருவாக்கப்பட்டுள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டை இலங்கை நடத்த முற்படாதிருந்தால், இந்தளவுக்கு இலங்கை நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்குமா என்பது கேள்விக்குறியே. அதேவேளை, இத்தகைய குற்றச்சாட்டுகள், நெருக்கடிகள், அழுத்தங்கள், வளைந்து கொடுப்புகளுக்கு மத்தியில் அரசாங்கம் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தி முடித்திருப்பினும், இது முற்றிலும் சாதகமான பெறுபேற்றைத் தருமா என்பது கேள்விக்குறியே
குறிப்பாக, பல்வேறு தரப்புகளும், கருதுவது போன்று, போர்விதி மீறல்களையும் மனிதஉரிமை மீறல்களையும் மூடி மறைப்பதற்கு கொமன்வெல்த் மாநாட்டையும், அதன் தலைமைத்துவப் பொறுப்பையும் இலங்கையினால் எந்தளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற கேள்வி உள்ளது.
கொமன்வெல்த் அமைப்புக்குத் தலைமையேற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம், அதற்கேற்ற பக்குவத்துடன் நடந்து கொள்ள வேண்டிய நெருக்கடியான சூழல் ஒன்று உருவாகியுள்ளதை மறுக்க முடியாது.
மனித உரிமைகள், ஜனநாயகம், ஊடக சுதந்திரம் உள்ளிட்ட- கொமன்வெல்த்தின் அடிப்படைப் பெறுமானங்களை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு வந்திருக்கிறது.
இவை எதையும், போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை செய்திருக்கவில்லை.
ஆனால், கொமன்வெல்த் தலைமைப் பொறுப்பு, இத்தகைய நிலையை உருவாக்குவதற்கான அழுத்தங்களை இலங்கை மீது கொடுக்கப் போகிறது.
கொமன்வெல்த் தலைமைத்துவத்துக்காக, அதன் பண்புகளுக்கேற்ப, அரசாங்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளிலும், அடங்கிப் போகவேண்டிய நிலை ஏற்படும்.
இதற்கு வளைந்து கொடுக்க இலங்கை மறுக்குமேயானால், கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்காக அரசாங்கம் எதிர்கொண்ட நெருக்கடிகளை விடவும், கடுமையான சோதனைகளை அதன் தலைமைப் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக போராட வேண்டியிருக்கும்.
இந்த நிலையில், கொமன்வெல்த்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இலங்கைக்கு இந்த மாநாடு, எத்தகைய நிதிசார் முதலீட்டுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தாலும், மனிதஉரிமைமீறல்கள் என்று வரும் போது, இந்த தலைமைப் பதவி இலங்கைக்கு அழுத்தங்கள் மிக்கதொன்றாகவே இருக்கப் போகிறது.
-சத்ரியன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக