ஞாயிறு, 17 நவம்பர், 2013

புலம்பெயர் தமிழ்மக்களின் கருத்துக்களை செவிமடுக்க நான் தயார்

புலம்­பெயர் தமிழ் மக்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு நான் தயா­ரா­கவே இருக்­கின்றேன். அவர்­களின் கருத்­துக்­க­ளை செவி­ம­டுக்­கவும் நான் தயா­ரா­கவே இருக்­கின்றேன். ஆனால் எந்த சந்­தர்ப்­பத்­திலும் நாட்டை எவரும் பிள­வு­ப­டுத்த இட­ம­ளிக்­க­மாட்டேன் என்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

எங்­க­ளிடம் மறைப்­ப­தற்கு ஒன்­று­மில்லை. நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றி­ருந்தால் யார் என்றும் பார்க்­காது நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு நான் தயார் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் கடந்த வியாழனன்று நடை­பெற்ற விசேட செய்­தி­ யாளர் மாநாட்டில் ஊ­ட­க­வி­ய­லா­ளர்­க­ளி னால் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு பதில் அளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

பொது­ந­ல­வாய செய­லாளர் நாயகம் கமலேஷ் ஷர்­மாவும் இந்த செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டார். ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மேலும் கருத்து வெளி­யி­டு­கையில்,

கேள்வி:-- பிரிட்டன் பிர­தமர் கம­ரூனை சந்­திப்­ பீர்­களா?

பதில்:-- பிரிட்டன் பிர­தமர் கம­ரூனை நான் சந்­தித்து கலந்­து­ரை­யா­டுவேன். அவ­ரு­ட­னான சந்­திப்­புக்கு நான் நேரம் வழங்­கி­யுள் ளேன். சந்­திப்­பின்­போது என்ன நடக்­கின்­றது என்று பார்ப்போம். அவர் என்­னிடம் கேள்­வி­களை கேட்­கலாம். நானும் அவ­ரிடம் சில கேள்­வி­களை கேட்­க­வேண்­டி­யுள்­ளது.

கேள்வி:-- புலம் பெயர் தமிழ் மக்­க­ளு­ட­னான தொடர்­பு­களை கட்­டி­யெ­ழுப்ப எவ்­வாறு செயற்­ப­ட­வுள்­ளீர்கள்?

பதில்:-- புலம்­பெயர் மக்­க­ளுக்கு இலங்கை வரு­மாறு நான் ஏற்­க­னவே அழைப்பு விடுத்­துள்ளேன். நாங்கள் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டலாம். அவர்­களின் கருத்­துக்­க­ளைச் செவி­ம­டுக்க நாங்கள் தயா­ராக இருக்­கின் றோம். அதே­போன்று அவர்­களும் எங்­க­ளது கருத்­துக்­க­ளுக்கு செவி­ம­டுக்­க­வேண்டும். உண்­மையில் இலங்­கையில் என்ன நடக்­கின்­றது என்­ப­தனை அவர்கள் வந்து பார்க்­க­வேண்டும். எனவே புலி­களின் அனு­தா­பி­க­ளுடன் மட்டும் பேச்­சு­வார்த்தை நடத்­தாமல் எங்­க­ளு­டனும் பேச்சு நடத்­த­வேண்டும்.

மக்­க­ளையும் அர­சியல் தலை­வர்க­ளையும் கொலை செய்த முன்னாள் போரா­ளி­க­ளுக்கு புனர்­வாழ்வு அளித்து சமூ­கத்­துடன் இணைத்­துள்ளோம். 14 ஆயிரம் முன்னாள் போரா­ளிகள் இரண்டு அல்­லது மூன்று வரு­டங்­களில் சமூ­க­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­டனர். இதே­வேளை சிறுவர் போரா­ளி­களை ஒரு சில மாதங்­க­ளி­லேயே விடு­வித்­து­விட்டோம். இவை ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு செய்­தி­யாக இருக்­கலாம். ஆனால் எம்மைப் பொறுத்­த­வரை இவை வாழ்வா சாவா போன்ற விட­யங்­க­ளாகும்.

30 வரு­டங்­க­ளாக நாங்கள் பயங்­க­ர­வாதம் கார­ண­மாக கஷ்­டப்­பட்­டுள்ளோம். அந்­தக்­கா­லங்­களில் ஒவ்­வொரு நாளும் மர­ணங்கள் காணப்­பட்­டன. 10 அல்­லது 15 சட­லங்கள் வரு­வ­துண்டு. ஆனால், அதிர்ஷ்­ட­வ­ச­மாக தற்­போது அவ்­வாறு எதுவும் இல்லை. கடந்த சில ஆண்­டு­க­ளாக எவ்­வி­த­மான குண்­டு­களும் வெடிக்­க­வில்லை. நாடு அமை­தி­யாக உள்­ளது.

எனவே மக்­களின் மனதை வெல்­லு­வ­தற்கு நாங்கள் தயார். அதற்­கான கொள்­கை­ களை உரு­வாக்­கி­யுள்ளோம். ஆனால், ஒரு விட­யத்தை குறிப்­பி­ட­வேண்டும். எந்த சந்­தர்ப்­பத்­திலும் நாட்டை எவரும் பிள­வு­ப­டுத்த இட­ம­ளிக்­க­மாட்டேன். நாட்டைப் பிரிக்க ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டேன்.

கேள்வி: இந்­திய பிர­தமர் இலங்கை பொது­ந­ல­வாய மாநாட்­டுக்கு வராமை தொடர்பில் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ளீர்­களா? அல்­லது இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சரின் வருகை குறித்து மகிழ்ச்­சி­ய­டை­கின்­றீர்­களா?

பதில்: கடந்த முறை பேர்த் நகரில் இடம்­பெற்ற பொது­ந­ல­வாய மாநாட்­டிலும் இந்­திய பிர­தமர் கலந்­து­கொண்­டி­ருக்­க­வில்லை. அந்­த­வ­கையில் இம்­முறை பொது­ந­ல­வாய மாநாட்டில் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் கலந்­து­கொண்­டுள்ளார். இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சரின் பங்­கு­பற்றல் தொடர்பில் நான் திருப்­தி­ய­டை­கின்றேன்.

கேள்வி:-- தமிழ் மக்­களின் உணர்வு கார­ண­மா­கவே பிர­தமர் வர­வில்­லையா?

பதில்:-- எனக்கு இந்­திய பிர­தமர் அனுப்­பி­யு­ள்ள கடி­தத்தில் அவ்­வாறு எதுவும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

கேள்வி:-- இலங்கை வரும் நாடு­களின் பிர­தி ­நி­திகள் தாம் பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்­து­கொள்ள வரு­வ­தைப்­போன்று மனித உரிமை விட­யங்­க­ளையும் எழுப்­பு­வ­தற்கு வரு­வ­தாக தெரி­வித்­துள்­ளனர். இது தொடர்பில் உங்கள் கருத்து ?

பதில்:-- அது குறித்து நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன். அவர்கள் வந்து உண்­மையில் இலங்­கையில் என்ன நடக்­கின்­றது என்று புரிந்­து­கொள்­ள­மு­டியும். அவர்­களை நான் வர­வேற்­கின்றேன். அவர்கள் எம்­மு­டனும் பேச்­சு­ந­டத்­த­வேண்டும். எங்­க­ளுடன் கலந்­து­ரை­யா­ட­வேண்டும். புலி­களின் அனு­தா­பி­க­ளுடன் மட்டும் பேச்­சு­வார்த்தை நடத் ­தாமல் எம்­மு­டனும் கலந்­து­ரை­யா­ட­வேண் டும்.

கேள்வி: பொது­ந­ல­வாய அமைப்பின் தலை மைப் பத­வியை ஏற்­ற­துடன் அடுத்த இரண்டு வரு­டங்­களில் உங்கள் செயற்­பா­டுகள் எவ்­வாறு அமையும்?

பதில்:-- சிறந்த கேள்வி. நான் பொது­ந­ல­வாய அமைப்பின் தலை­வ­ராக இருப்பேன். ஆனால் பொது­ந­ல­வாய உறுப்பு நாடுகள் கலந்­து­ரை­யாடி எடுக்கும் தீர்­மா­னங்­களை நான் நடை­மு­றைப்­ப­டுத்­துவேன்.

இள­வ­ரசர் சார்ள்ஸை சந்­திக்­கும்­போது 'ஆயு­போவன்' என்று கூறுவேன். இதுதான் இலங்­கை­யர்கள் மரி­யாதை செலுத்தும் வித­மாகும். அது மகா­ரா­ணி­யாக இருந்­தாலும் சரி தலை­வ­ராக இருந்­தாலும் சரி பிச்­சைக்­கா­ர­ராக இருந்­தாலும் இதுவே முறை­மை­யாகும். இள­வ­ரசர் சார்ள்­ஸுடன் பேச்­சு­வார்த்தை நடத்­துவேன்.

நீங்கள் ஒரு விட­யத்தை மனதில் வைத்­துக்­கொள்­ள­வேண்டும். 30 வரு­டங்­க­ளாக நாங்கள் பய­ங்­க­ர­வாதம் கார­ண­மாக கஷ்­டப்­பட்டோம். அதா­வது பல மனித உரிமை மீறல்கள் இக்­கா­லத்தில் நிகழ்ந்­தன. சிறு­வர்கள், பெண்கள், கர்ப்­பிணிப் பெண்கள் என அக்­கா­லத்தில் பொது மக்கள் கொல்­லப்­பட்­டனர். 30 வரு­டங்­க­ளாக நாங்கள் கஷ்­டப்பட்டோம். ஆனால், 2009ஆம் ஆண்டின் பின்னர் எவ­ரும் கொல் ­லப்­ப­ட­வில்லை.

கேள்வி:-- எனினும் 2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்­தத்தில் பொது மக்கள் கொல்­லப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்ற குற்­றச்­சா­ட்டு?

பதில்:-- 2009 ஆண்டு மட்­டு­மன்றி கடந்த 30 வரு­டங்­க­ளாக மக்கள் கொல்­லப்­பட்­டனர். குறைந்­த­பட்சம் 2009 ஆம் ஆண்டில் அவ்­வா­றான சம்­ப­வங்­களை நாங்கள் நிறுத்­தி­யுள்ளோம். 2009 ஆம் ஆண்டின் பின்னர் எந்தக் கொலையும் இடம்­பெ­ற­வில்லை.

இந்தக் கேள்­வியை கேட்ட ஊட­க­வி­ய­லாளர் தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­த­வில்லை.

அது குறித்து பிரச்­சி­னை­யில்லை. நீங்கள் கையை உயர்த்­திய விதத்தில் இந்த விட­யத்தைப் பற்றி கேள்­வி­யெ­ழுப்­பு­வீர்கள் என்று எனக்குத் தெரியும்.

இலங்­கையில் எங்­க­ளுக்கு என ஒரு சட்டக் ­கட்­ட­மைப்பு உள்­ளது. கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவை நிய­மித்­தி­ருந்தோம். அதன் செயற்­பா­டுகள் இடம்­பெற்­றுக் ­கொ­ண்­டி­ருக்­கின்­றன.

இலங்­கையின் மனித உரிமை ஆணைக்­குழு உள்ளது. அதனை பலப்­ப­டுத்த பொது­ந­ல­வா­யமும் தற்­போது ஆத­ரவு வழங்­கு­வ­தாக தெரி­வித்­துள்­ளது.

எனவே, இலங்­கையில் மனித உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக யாருக்கு முறைப்­பாடு செய்­ய­வேண்­டு­மா­னாலும் அதற்கு ஒரு முறைமை காணப்­ப­டு­கின்­றது. அது கற்­ப­ழிப்பு, சித்­தி­ர­வதை என எது­வா­கவும் இருக்­கலாம். எனவே, நாட் டின் சட்ட முறை­மையை நீங்கள் மதிக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். நாட்டின் கலா­சா­ரத்தை மதிக்­க­வேண்டும்.

இவை குறித்து ஆராய்­வ­தற்கு நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம். ஏதா­வது மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றி­ருந்தால் அதற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கத் தயா­ரா­கவே இருக்­கின்றேன். யாராக இருந் தாலும் நடவடிக்கை எடுக்கத் தயார். எங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை.


ஜே.ஜி.ஸ்டீபன், ரொபட் அன்டனி
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல