ஞாயிறு, 17 நவம்பர், 2013

ஸ்ரீவித்யாவின் மருத்துவ செலவுக்கு அவர் சம்பாதித்த பணத்தை தர மறுத்த அறக்கட்டளை!

கடந்த 2006-ல் கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்த ஸ்ரீவித்யா தான் சம்பாதித்த சொத்து முழுவதையும் அறக்கட்டளைக்கு மாற்றி இருந்தார்.பின்னர் மருத்துவ செலவுக்கு அவர் சம்பாதித்த பணத்தை கேட்டபோது அதைத் தர அறக்கட்டளை மறுத்தது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் ஸ்ரீவித்யாவின் டாக்டர்.

தனது இறுதி நாட்களில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவனந்தபுரத்திலுள்ள கேன்சர் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ஸ்ரீவித்யா. அப்போது அவரை நேரில் சந்திக்க பல நடிகர், நடிகைகள் முயன்றும் யாருக்கும் அனுமதி தர மறுத்த ஸ்ரீவித்யா, தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த கமலை மட்டும் நேரில் சந்திக்க அனுமதி தந்தார்.

இதற்கிடையில் தான் சம்பாதித்த சொத்து முழுவதையும் அறக்கட்டளைக்கு மாற்றி எழுதினார் ஸ்ரீவித்யா. தொடந்து அவரது சிகிச்சை செலவுக்கு அறக்கட்டளையிடம் பணம் கேட்டபோது தர மறுத்துவிட்டனராம்.

இதுபற்றி ஸ்ரீவித்யாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கிருஷ்ணன் நாயர் கூறும்போது, ‘ஸ்ரீவித்யாவுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தது. இதை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றப்பட்டிருப்பார். தனது சொத்துக்களை அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார் ஸ்ரீவித்யா. அவர்களிடம் சிகிச்சைக்காக நிதியுதவி கேட்டபோது தர இயலாத நிலை உள்ளதாக தெரிவித்தனர். மருந்து நிறுவனம் ஒன்றுதான் சலுகை விலையில் ஸ்ரீவித்யாவுக்கு மருந்துகளை வழங்கியது” என்றார்.


aanthaireporter
Share |

   
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல