ஞாயிறு, 17 நவம்பர், 2013

“பயமா? பயம் என்றால் என்­னம்மா?”

வேப்பமர உச்சத்தில் பேய் இருக்கிறது. அங்கே போகக்கூடாது!

ஐயோ! என்ர ராசா நீ சின்­னப்­பிள்ளை தனி­யாக எங்­கேயும் போகக்­கூ­டாது. என்ர கடவுள் இங்கை வாடி. எனக்குக் கிட்ட இரடி. தனியே எங்­கேயும் போக­வேண்டாம்!

ஆந்தை கத்­து­வதைக் கேட்­டாலும் ஆட்­காட்டிக் குருவி கீச்­சிட்­ட­படி பறந்து திரிந்­தாலோ உங்கை உம்­மாண்டி வருது சத்தம் போடக் கூடாது. சத்தம் போட்டால் பிடிச்­சுக்­கொண்டு போயிடும்!

என்­றெல்லாம் பெரி­ய­வர்கள் சின்­ன­வர்­களைப் பார்த்து சொல்­லு­வதை நாமும் கேட்­டி­ருக்­கிறோம்.

சின்­ன­வர்கள் மீதான பெரி­ய­வர்­களின் இவ்­வா­றான பக்­கு­வப்­ப­டுத்தல் முறை என்­பது சரி­யா­ன­தொன்­றல்ல. சின்ன வயதில் இருந்தே சின்­ன­வர்­களைப் பெரி­ய­வர்கள் பயந்­தாம்­கொள்­ளி­க­ளாக வளர்க்கப் பாடு­ப­டு­கி­றார்கள் என்­ப­தையே இது எடுத்­துக்­காட்­டு­கி­றது.

காட்டில் வாழும் விலங்­குகள் பற்­றியும் அவற்றின் சிறப்­பி­யல்­பு­க­ளையும் சொல்­லலாம்.

கடல், குளம், ஆற்றில் வாழும் உயி­ரி­னங்கள் பற்­றியும், நிலத்தில் ஊர்ந்து வாழும் ஊர்­வன பற்­றியும் சொல்­லலாம்.

வர­லாற்று மனி­தர்­களின் வீரம் பற்­றியும் சான்­றோர்­களின் புகழ்­பற்­றியும் கதை­க­ளாகச் சொல்­லலாம்.

சிறு­வர்­களின் நடத்­தை­களை அவ­தா­னிக்­கலாம். அந்த அவ­தா­னங்­களில் ஒரு எச்­ச­ரிக்கை உங்­க­ளுக்குள் இருக்க வேண்டும். தவ­றா­னது என்று உங்­க­ளுக்குத் தெரிந்தால் அவற்­றினைச் சுட்­டிக்­காட்­டு­வ­தற்கு சில சம்­ப­வங்­களைச் சொல்லிச் சொல்­லலாம்.

தயவு செய்து பயம் என்­பதை மட்டும் சொல்லிக் கொடுக்­கா­தீர்கள். சரி­யில்­லாத நடத்­தை­க­ளாலும் முர­டான செய­ற்­பா­டு­க­ளாலும் வரக்­கூ­டிய பாத­கங்­களை அவர்­க­ளுக்குச் சொல்லக் கூடிய தகுதி பெற்­றோ­ருக்கு இருக்­கி­றது. அதைச் சொல்லிப் பய­மு­றுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

இப்­ப­டித்தான் ஒருநாள் இரவு தாயின் அருகில் படுத்­தி­ருந்த அந்த சிறு­வ­னுக்கு ஏனோ தூக்கம் வர­வில்லை.

படுக்­கையை விட்டு எழுந்­தவன் கதவை திறந்து வெளியே வந்தான். வீட்டின் அரு­கி­லேயே குளம் இருந்­தது. பௌர்­ணமி நிலவும் அதன் ஒளியில் ரம்­மி­ய­மாக காட்சி தரும் குளத்தின் நீர்ப்­ப­ரப்பும் அவன் மனதை கவர்ந்­தன.

அச்­சி­றுவன் குளக்­க­ரையில் அமர்ந்து கொண்டு சிறு­கற்­களை நீரில் போட்டு அதன் மூலம் எழும் அலை­களை ரசித்­த­படி இருந்தான்.

வீட்டில் திடு­மென கண்­வி­ழித்த தாய் அருகில் படுத்­தி­ருந்த மகனை காணாமல் பத­றிப் ­போனாள். கதவு திறந்­தி­ருப்­பது கண்டு பதைபதைப்­புடன் வெளியே ஓடி வந்தாள்.

தன்­மகன் குளக்­க­ரை­யிலே அமர்ந்­தி­ருப்­பதை பார்த்து நிம்­மதி பெரு­மூச்­சு­ விட்டாள்.

அவன் அருகில் சென்று “மகனே நள்­ளி­ரவு வேளையில் இங்கு வந்து தனி­யாக இருக்­கி­றாயே! உனக்கு பயம் இல்­லையா?” என்று கேட்டாள்.

உடனே அந்த சிறுவன் “பயமா? பயம் என்றால் என்­னம்மா?” என்று கேட்டான் அதற்கு பதில் சொல்ல தெரி­யாமல் திகைத்தாள் அந்த தாய்.

இளம் வயதில் பயம் என்றாலே என்னவென்று அறியாத அந்தச் சிறுவன் யார் தெரியுமா?

பல நாடுகளை வென்று வெற்றிகளை அள்ளிக்குவித்த மாவீரன் நெப்போலியன் தான் அவன்.


சமரபாகு சீனா உத­யகுமார்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல