ஞாயிறு, 17 நவம்பர், 2013

மாற்று அர­சியல் கேந்­தி­ர­மாக மாறி­யுள்ள யாழ்ப்­பாணம்

கொமன்வெல்த் மாநாடு, வடக்கின் மீதான உல­கத்தின் கவ­னத்தை மீண்டும் ஒரு­முறை திருப்பி விட்­டுள்­ளது.

கொமன்வெல்த் மாநாட்­டுக்கு வருகை தந்த சில வெளி­நாட்டுத் தலை­வர்­களும், பிர­தி­நி­தி­களும், வடக்­கிற்குப் பயணம் மேற்­கொண்­டது முக்­கி­ய­மா­ன­தொரு திருப்பம்.

இந்­தியப் பிர­தமர் மன்­மோ­கன்­சிங்கும், வடக்கு மாகாண முதல்வர் விக்­னேஸ்­வ­ரனின் அழைப்பை ஏற்றும் – தமிழ்­நாட்டின் அர­சியல் நிர்ப்­பந்­தங்­களில் இருந்து தப்­பிக்­கவும், யாழ்ப்­பாணம் செல்லும் ஒரு திட்­டத்­தையும் கொண்­டி­ருந்தார்.

ஆனால், கொமன்வெல்த் மாநாட்டில் பங்­கேற்­ப­தில்லை என்று அவர் எடுத்த முடி­வினால், இந்­தியப் பிர­த­மரின் யாழ்ப்­பாணப் பயணம் கிட்­டத்­தட்ட சாத்­தி­ய­மற்­ற­தா­கி­யுள்­ளது.

இந்­தியப் பிர­தமர் மன்­மோ­கன்சிங், யாழ் ப்­பா­ணத்­துக்குச் சென்று, வட மாகாண முதல்­வரைச் சந்­தித்­தி­ருந்தால், அது ஒரு அர­சியல் திருப்­ப­மா­கவே அமைந்­தி­ருக்கும்.

ஏற்­க­னவே, இலங்­கையின் மாற்று அர­சியல் கேந்­திர மைய­மாக மாறத் தொடங்­கி­யுள்ள யாழ்ப்­பா­ணத்­துக்கு, இது இன்னும் பெறு­ம­தியைக் கூட்­டி­யி­ருக்கும்.

இலங்­கையில் கொழும்­புக்கு மாற்­றான, அர­சியல் கேந்­திர மைய­மாக, ஒரு காலத் தில் யாழ்ப்­பா­ணமும், பின்னர், கிளி­நொச்­சியும் விளங்­கின.

விடு­தலைப் புலி­களின் பலம் தான், அத்­த­கைய நிலையை இந்த நக­ரங்­க­ளுக்குப் பெற்றுக் கொடுத்­தி­ருந்­தது.

அது­போ­லவே, இப்­போது மீண்டும் யாழ்ப்­பாணம், இலங்­கையின் மாற்று அர­சி யல் கேந்­திர மைய­மாக மாற்றம் பெறத் தொடங்­கி­யுள்­ளது.

இதற்குக் காரணம், வட மாகா­ண­சபைத் தேர்தல் தான்.

வடக்கு மாகாண சபைக்கு நடத்­தப்­பட்ட தேர்­தலில், அர­சாங்கத் தரப்பு வெற்றி பெற்­றி­ருந்தால், இத்­த­கைய நிலை ஒரு­போதும், யாழ்ப்­பா­ணத்­துக்குக் கிடைத்­தி­ருக்க மாட்­டாது.

ஏனென்றால், கொழும்பின் குர­லா­கவே யாழ்ப்­பா­ணமும் எதி­ரொ­லிக்கும் என்­ப தால், அதனை அத்­த­கை­ய­தொரு மாற்று அர­சியல் கேந்­தி­ர­மாக எந்­த­வொரு வெளிச் சக்­தியும் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­காது.

ஆனால், வட மாகாண சபைத் தேர்­த லில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பெற்ற வெற்றி, யாழ்ப்­பா­ணத்­துக்­கான அந்தக் கதவை மீளவும் திறந்து விடக் கார­ண­மா­கி­யுள்­ளது.

அதுவும், ஆறில் ஐந்து பெரும்­பான்மை பலத்­துடன் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆட்­சியைப் பிடித்­ததும், தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்பும், இலங்கை அரசின் போக்கும் ஒரே கோட்டில் பய­ணிக்­க­வில்லை என்­பது சர்­வ­தேச சமூ­கத்­துக்கு, வெளிச்­ச­மாகி விட்­டது.

இந்த நிலையில் தான், வடக்கின் மீதான, குறிப்­பாக வடக்கு மாகா­ணத்தின் புதிய அர­சு­ட­னான உற­வு­களில் வெளி­நா­டுகள் கவ னம் செலுத்தத் தொடங்­கி­யுள்­ளன.

வட மாகாண முதல்­வ­ராக சி.வி.விக்­னே ஸ்­வரன் பத­வி­யேற்ற பின்னர், முத­லா­வ­தாக அவரைச் சென்று சந்­தித்­தி­ருந்தார் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சல்மான் குர்ஷித்.

அதற்குப் பிறகு, கிட்­டத்­தட்ட கடந்த ஒரு மாத காலத்தில், அமெ­ரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், தென் கொரியத் தூதுவர், ஐரோப்­பிய ஒன்­றியப் பிர­தி­நிதி என்று வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரிகள் அடுத்­த­டுத்து வட மாகாண முதல்­வரைச் சந்­தித்துப் பேசினர்.

கொமன்வெல்த் மாநாட்டில் பங்­கேற்க வந்த கனே­டிய வெளி­வி­வ­கார மற்றும் மனி­த­ உ­ரி­மை­க­ளுக்­கான நாடா­ளு­மன்றச் செயலர் தீபக் ஒப்ராய், பிரித்­தா­னியப் பிர­தமர் டேவிட் கமரொன், நியூ­ஸி­லாந்து வெளி­வி­வ­கார அமைச்சர் உள்­ளிட்­டோரும், வட க்கு மாகா­ணத்­துக்குச் சென்று முதல்வர் விக்­னேஸ்­வ­ரனை சந்­தித்­துள்­ளனர்.

இன்னும் பலர் அங்கு செல்லும் வாய்ப்­புக்­களும் உள்­ளன.

இப்­ப­டி­யொரு முக்­கி­யத்­துவம் யாழ்ப்­பா­ணத்­துக்கு வரும் என்று அர­சாங்கம் கரு­தி­யி­ருக்­காது.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் இந்த நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தாலும், சர்­வ ­தேச தலை­வர்­களின் கவ­னிப்­புக்­கு­ரிய – அக்­க­றைக்­கு­ரிய மைய­மாக யாழ்ப்­பா­ண த்தை திரும்பிப் பார்க்கச் செய்­துள்­ளது கொமன் வெல்த் மாநாடு தான்.

கொமன்வெல்த் மாநாட்­டுக்குப் பின்னர், வடக்கின் மீதான சர்­வ­தேச கவ­னிப்பும், வடக்­கு­ட­னான சர்­வ­தே­சத்தின் தொடர்­பா­ட லும் இன்னும் அதி­க­ரிக்க வாய்ப்­புகள் உள்­ளன.

இது தமிழர் தரப்பின் பிரச்­சி­னைகள் மேலும் சர்­வ­தேச மயப்­ப­டு­வ­தற்­கான இன்­ னொரு பரி­ணா­மத்தை அளிக்கும்.

இது, “ஒரே இலங்கை, ஒரே அரசு, ஒரே கொள்கை” என்ற – எல்­லாமே “ஒரே குடை யின் கீழ், ஒரே குடும்­பத்தின் கீழ்” இருக்க வேண்டும் என்ற அர­சாங்­கத்தின் நிகழ்ச்சி நிர­லுக்கு சவா­லா­கி­யுள்ள ஒரு விவ­கா­ர­மாகும்.

2009இல் விடு­தலைப் புலிகள் அழிக்­கப்­பட்­ட­துடன், தமி­ழர்­களின் தனி­யான அர­சி யல் களத்­தையும் மூடி­விட்­ட­தா­கவே அர­சாங்கம் கரு­தி­யி­ருந்­தது.

ஆனால், கொழும்­புக்கு மாற்­றான, தமி­ழரின் அர­சியல் கேந்­திர நிலையம் ஒன்று மீளப் பிறப்­பெ­டுப்­பதை, அர­சாங்­கத்­தினால் தடுக்­கவோ தவிர்க்­கவோ முடி­ய­வில்லை.

வட மாகா­ண­சபை தெரிவு செய்­யப்­பட்­ட தும், வடக்கை நோக்கி படை­யெ­டுக்கும் வெளி­நாட்டுத் தூது­வர்கள், இரா­ஜ­தந்­தி­ரி­க­ளையும், தலை­வர்­க­ளையும் அர­சாங்­கத்­தி னால், தடுக்க முடி­ய­வில்லை.

போருக்குப் பின்னர், வடக்கை அபி­வி­ருத்தி செய்து சாதனை செய்து விட்டோம் என்று பிர­க­ட­னப்­ப­டுத்­திய அர­சாங்­கமே, இவை­ய­னைத்­தையும் வந்து பார்க்­கும்­படி வெளி­நா­டு­க­ளுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தது.

இத்­த­கைய நிலையில், வடக்கின் மீதான வெளி­நா­டு­களின் கரி­ச­னை­யையும், வடக்கு மாகாண சபை­யு­ட­னான வெளி­நா­டு­களின் அதி­கா­ர­பூர்­வ­மான தொடர்­பு­க­ளையும் அறு த்­தெ­றிய முடி­யாத நிலை ஒன்று உரு­வா­கி­யுள்­ளது.

அதுவும், இதற்கு முன்னர் ஒரு எதிர்க்­கட்­சி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வெளி­நா­டு­க­ளுக்கு கூறும் கருத்­துக்­க­ளுக்கும், வடக்கு மாகா­ணத்தில் அதி­கா­ரத்தில் உள்ள அரசு ஒன்று கூறும் அதி­கா­ர­பூர்­வ­மான கருத்­துக்கும் இடையில் வேறு­பா­டுகள் இருக் கும்.

தமிழ்­மக்­களின் பிரச்­சி­னை­களை ஜன­நா­யக ரீதி­யாக தெரிவு செய்­யப்­பட்ட ஒரு அரசின் மூலம் வெளிப்­ப­டுத்­தப்­படும் வாய்ப்பு முதல் முறை­யாக தமி­ழர்­க­ளுக்கு கிடைத்­துள்­ளது.

அதைப் பயன்­ப­டுத்திக் கொள்ள பல்­வேறு நாடு­களும் முனை­கின்­றன.

அதே­வேளை, இந்த வாய்ப்பைத் தமிழர் தரப்பும் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்­டி­யதும் முக்­கி­ய­மா­னது.

இதனை இரண்டு வித­மாக மேற்­கொள்­ளலாம்.

முத­லா­வது, வெளி­நாட்டுத் தொடர்­புகள் மூலம் வடக்கு மாகா­ணத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான வாய்ப்­பு­களை உரு­வாக்கிக் கொள்­வது.

இரண்­டா­வது, தமிழர் பிரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வைப் பெறு­வ­தற்­கான தள­மா கப் பயன்­ப­டுத்திக் கொள்­வது.

வெளி­நாட்டு தொடர்­புகள் மூலம் வடக்கு மாகா­ணத்தை அபி­வி­ருத்தி செய்­வதில் வரை­ய­றுக்­கப்­பட்­ட­ள­வுக்கே மாகாண சபையால் பங்­காற்ற முடியும்.

ஏனென்றால், மாகாண சபைக்கு நிதி அதி­காரம் கிடை­யாது.

மாகாண சபைக்குத் தேவை­யான நிதியை திரட்டும் அதி­கா­ர­மில்­லா­ததால், மத்­திய அரசின் கையை ஏந்த வேண்­டிய நிலை உள்­ளது.

வெளி­நா­டு­க­ளிடம் இருந்து நிதி உத­வி­களைப் பெறு­வ­தா­னாலும், மத்­திய அரசின் ஊடா­கவே அதைப் பெற வேண்­டி­யுள்­ளது.

இத்­த­கைய நிலையில், வடக்கை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கும், வெளி­நாட்டு உத­வி­களைப் பெறு­வ­தற்கும் வடக்கு மாகாண சபை பெரும் போராட்டம் நடத்த வேண்­டிய நிலையே ஏற்­படும்.

ஆனால், வெளி­நா­டு­க­ளு­ட­னான தொடர்­புகள் மூலம் தமிழர் பிரச்­சி­னையை சர்­வ­தேச மயப்­ப­டுத்­து­வ­தற்கு இது முக்­கிய தள­மாக விளங்க முடியும்.

குறிப்­பாக, தமிழர் தரப்பின் தற்­போ­தைய அர­சியல் இரா­ஜ­தந்­திரப் போருக்­கான அடி­ஊற்­றாக வடக்கு மாகாண சபை மாறத் தொடங்­கி­யுள்­ளது.

வடக்­கிற்­கான நிதியை கட்­டுப்­ப­டுத்­து­வது போன்று இதனை அர­சாங்­கத்­தினால் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது.

அர­சாங்­கத்­தினால் இதனை ஜீர­ணித்துக் கொள்ள முடி­யாத போதிலும், வடக்கு மாகாண சபைக்கும், வெளி­யு­ல­கிற்­கு­மான நெருக்கம் அதி­க­ரிப்­பதை அர­சாங்­கத்­தினால் வேடிக்கை பார்ப்­பதை விட வேறேதும் செய்ய முடியாது.

போருக்குப் பிந்திய நான்கு ஆண்டுகளை யும் அரசாங்கம், அரசியல்தீர்வு, அதிகாரப் பகிர்வு, பொறுப்புக்கூறல், புனர்வாழ்வு, புனரமைப்பு, ஜனநாயகம், பாதுகாப்பு, சுதந்திரம் என்று வடக்கிலுள்ள மக்களின் எல்லாப் பிரச்சினைகளையும் – சாதகமான முறையில் தீர்க்கும் முயற்சியில் கணிசமான முன்னேற்றத்தை எட்டியிருந்தால், கொழும் பிலும், யாழ்ப்பாணத்திலும், இருவேறு அதிகார மையங்கள் உருவாகியிருக்க முடி யாது.

ஒற்றையாட்சி என்று அரசாங்கம் கூவிக் கூவி, நடத்திய இனவாத அரசியல் வியாபாரம் தான், மீண்டும் யாழ்ப்பா ணத்தை இலங்கையின் இரண்டாவது அரசியல் கேந்திர மையமாக உருவாக்கியு ள்ளது.

இந்த இரண்டாவது அரசியல் கேந்திர மையத்தின் மீள் எழுச்சியின் விளைவு, இலங்கை அரசுக்கு சாதகமானதொன்றாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

-ஹரி­கரன்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல