பொதுநலவாய மாநாட்டு இலட்சினையில் "வணக்கம்" என்ற பதத்தை நீக்கிவிட்டு "ஆயுபோவன்" என்ற சிங்களப் பதத்தை தமிழில் எழுதப்பட்டது ஏன்? என்று வெளிநாட்டு தமிழ் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அந்தக் குழுவில் தான் இல்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்தார். பொதுநலவாய மாநாட்டு இலட்சினையில் அழகான தமிழில் "வணக்கம்" என்று எழுதப்பட்டிருந்ததற்கு மேலாக "ஆயுபோவன்" என்ற சிங்கள வார்த்தை தமிழில் ஒட்டப்பட்டுள்ளது. இது ஏன் என்று அந்த ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு ஒரே வரியில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா பதிலளித்த பின்னர் அநுர பிரியதர்ஷன யாப்பா அந்த ஊடகவியலாளரைப் பார்த்து "நீங்கள் வேண்டுமென்றே இந்தக் கேள்வியை எழுப்புகின்றீர்கள்" என்று குறிப்பிட்டார்.

ஞாயிறு, 17 நவம்பர், 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக