தனது காதலியுடன் எதிர்வரும் நத்தார் பண்டிகைக்காக ஆடை வாங்குவதற்கு ஆடையகமொன்றுக்கு சென்ற காதலர் ஒருவர், காதலி பிறிதொரு ஆடைக் கடைக்கு செல்வதற்கு அடம் பிடித்ததால் சினமடைந்து ஆடையகம் அமைந்திருந்த 7 மாடிக் கட்டிடத் தொகுதியில் இருந்து குதித்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு சீனாவிலுள்ள ஜியாங்ஸு மாகாணத்தைச் சேர்ந்த த வோ ஹஸியவோ (38 வயது) என்ற காதலனே சம்பவ தினம் ஸுஸொயு நகரிலுள்ள ஆடையகத்துக்கு தனது காதலியுடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்த ஆடையகத்தில் 5 மணித்தியாலங்களை காதலி செலவிட்டு ஆடைகளை கொள்வனவு செய்ததையடுத்து, தவோ ஹஸியவோ வீடு திரும்புவதற்கு காதலியை கோரியுள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே பெருமளவு ஆடைகளை கொள்வனவு செய்திருந்த காதலி, சலுகை அடிப்படையில் பாதணிகளை விற்பனை செய்யும் பிறிதொரு கடைக்கு செல்வதற்கு காதலனை வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது தவோ ஹஸியவோ, தனது காதலியிடம் ஏற்கனவே அளவுக்கதிகமான பாதணிகள் உள்ளதாகவும் மேலும் பாதணிகளை வாங்குவதில் அர்த்தமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால் சினமடைந்த காதலி, தனது காதலரை கஞ்சன் எனவும் அவர் நத்தார் பண்டிகையின் மகிழ்ச்சியை கெடுப்பதாகவும் தெரிவித்து கூச்சலிட்டுள்ளார்.
இதனையடுத்து தவோ ஹஸியவோவுக்கும் அவரது காதலிக்குமிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இறுதியில் பொறுமையிழந்த தவோ ஹஸியவோ, தனது கையிலிருந்த பைகளை தரையில் வைத்துவிட்டு ஆடையகம் அமைந்திருந்த மாடிக் கட்டத்திலிருந்து குதித்துள்ளார். அவர் கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த நத்தார் அலங்காரங்களில் மோதியவாறு தரையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
தவோ ஹஸியவோவும் தனது காதலி யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் 7 ஆம் மாடியிலிருந்து குதிக்கும் சி.சி.ரி.வி கண்காணிப்பு வீடியே கருவியில் பதிவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக