புதன், 11 டிசம்பர், 2013

கேஷ் பேக் என்பது ஒரு புதை குழி!! உஷார்..

கேஷ் பேக் அளிக்கும் கிரெடிட் கார்டுகளை நோக்கி பல்வேறு வாடிக்கையாளர்களும் ஈர்க்கப்படுவதற்கு தாங்கள் செலவு செய்யத தொகையில் ஒரு தொகுதி பணத்தை நமக்கு வழங்கப்படுதாக சொல்லப்படுவது தான். கிரெடிட் கார்டுகளை நீங்கள் சாதூர்யமாக பயன்படுத்தினால் உங்களுடைய கட்டணங்களை செலுத்தும் வகையிலும் மற்றும் உபரி பணமாகவும் உங்களுக்கு மாதந்தோறும் போனஸ் கிடைக்கவும் செய்யும்.



எனினும், நீங்கள் சில கிரெடிட் கார்டு தொடர்பான தவறுகளை இழைக்கவும் செய்கிறீர்கள். கன்ஸ்யூமரிஸம் கமெண்டரி (Consumerism Commentary) என்ற அமைப்பைச் சேர்ந்த லூக் லாண்டெஸ் என்பவர் கேஷ் பேக் கிரெடிட் கார்டுகளில் நம்மை பலியாக்கும் இடங்களாக சில விஷயங்களை பட்டியலிட்டிருக்கிறார் உங்களுக்காக!

பெரும் செலவாலிகள்!!

கிரெடிட் கார்டு இல்லாதவர்களை விட கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதிகமாக செலவு செய்கிறார்கள். கட்டணங்களை செலுத்துவதற்காக பணமாக செலுத்துவது வெளிப்படையான செயல்பாடாக தோன்றினாலும், இதில் நீங்கள் மொத்தமாக பார்க்கும் பணம் உங்களிடம் ஒரு மனரீதியான தாக்கத்தை ஏற்படுத்தி விடும். கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி யாரேனும் கட்டணங்களை செலுத்த முயன்றால் இதே மாதிரியான தாக்கம் இருக்காது. பரிசுகளுடன் வரும் கிரெடிட் கார்டு திட்டங்களில் உள்ள கேஷ் பேக் திட்டம் அதிகளவில் செலவு செய்வதை ஊக்கவிக்கிறது, ஏனெனில் கேஷ் பேக் பரிசுகளாகவும் மற்றும் செலவு செய்வதன் மூலம் அதிகமாக கிடைக்கவும் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

கேஷ் பேக் வசதியை பாதிக்கும் விஷயம்

நீங்கள் கிரெடிட் கார்டை வைத்து செய்த செலவை சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதிப்படுத்துங்கள். அதனை நீங்கள் அடுத்த மாதத்தில் செலுத்தலாம் என்று நினைத்தால், உங்களுடைய கேஷ் பேக் பரிசுகளை நீங்கள் மறந்து விட வேண்டியதுதான். ஏனெனில், நீங்கள் செலுத்த வேண்டிய தொகையின் வட்டியானது, உங்களுக்கு பரிசுகளை தர நினைப்பவர்களின் திட்டங்களை தவிடுபொடியாக்கிவிடும்.

பரிசுத் திட்டங்கள் இல்லாமல் வரும் கிரெடிட் கார்டுகளை விட, கேஷ் பேக் பரிசுகளுடன் கிடைக்கும் கிரெடிட் கார்டுகளுக்கு அதிகமான வட்டி விகிதம் உள்ளதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, அந்த கார்டுகளை வாங்கும் முன்னர், உங்களால் கட்டணங்களை குறித்த நேரத்தில் செலுத்தி விட முடியுமா என்று உறுதிப்படுதிக் கொள்ளுங்கள.

வாடிக்கையாளர்களை கவரும் திட்டம்

அதிகமான வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காக, கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தங்களுடைய கேஷ் பேக் சதவீதத்தை அதிகரித்துள்ளன. தாங்கள் வாங்கும் பொருட்களில் 5 சதவீதத்தில் இழந்தவர்களுக்கு இந்த படிநிலை உதவுகிறது.

வங்கியின் சூழ்ச்சி

பொதுவாகவே, கார்டு வைத்திருப்பவர் ஒருவர் பொருட்களை வாங்கும் போது, அதில் 1% முதல் 5% வரையிலான சதவீதத்தை பெறுவார். ஆனால், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் சில குறிப்பிட்ட வகையறாக்களுக்கு மட்டுமே கேஷ் பேக் பரிசுகளை அளித்து புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதுடன், அந்த வகையான பொருட்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றவும் செய்கின்றன.

தவறாக வகைப்படுத்தப்பட்ட கொள்முதல்கள்

நீங்கள் பொருட்களை வாங்கும் போது, நீங்கள் எந்த இடத்தில் பொருட்களை வாங்கினால் கேஷ் பேக் கிடைக்கும் என்பதை கவினித்து பாருங்கள். உதாரணமாக, நீங்கள் ரிலையன்ஸ் ஃபுட்-ல் வாங்கும் பொருளுக்கு 5% கேஷ் பேக் கிடைத்தால், அதே பொருளை 'மோர்' போன்ற பிற சில்லறை விற்பனை கடைகளில் வாங்கும் போது உங்களுக்கு அந்த அளவிற்கு முழுமையான கேஷ் பேக் கிடைக்காது. ஏனெனில், ஒவ்வொரு கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனத்திடமும் அவர்களுக்கான விற்பனையாளர்களின் பிரத்யோகமான பட்டியல் இருக்கும். அங்கே நீங்கள் பொருட்களை வாங்கும் போது உங்களுக்கு கேஷ் பேக் புள்ளிகள் கிடைக்கும்.

கேஷ் பேக் பரிசுகளை வாங்குவது கடினமான விஷயம்

கேஷ் பேக் திட்டங்களின் பயன்களை பெறும் வகையில் நீங்கள் எல்லாவிதமான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் நீங்கள் பின்பற்றினாலும், அவற்றை நீங்கள் பெறுவது மிகவும் கடினமான செயல்பாடாக இருக்கும். மேலும் நீங்கள் குறிப்பிட்ட நிலையை (Target) அடையும் முன்னரே உங்களுடைய கணக்கை மூட வேண்டியிருந்தால், உங்களுடைய கேஷ் பேக் புள்ளிகளை நீங்கள் இழந்து விடுவீர்கள்.

கேஷ் பேக் என்பது எப்பொழுதும் கேஷ் பேக் அல்ல!

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவராக இருக்கும் நீங்கள், கிரெடிட் கார்டுகள் தொடர்பாக வங்கிகள் வெளியிடும் சலுகைகள் தவறான திசைக்கே நம்மை வழி நடத்திச் செல்லும் என்பதை நீங்கள் கண்டிப்பாக உணர வேண்டும். எனவே, நீங்கள் கிரெடிட் கார்டுகளை வாங்கும் முன்னர், பல்வகைப்பட்ட நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் சிறந்த திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தால் இத்திட்டத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அதிகமாக புள்ளிகளைப் பெறுவது எப்படி?

விதிகளும், கட்டுப்பாடுகளும் பெரிய எழுத்துகளில் அச்சிடப் பட்டிருக்கும் கிரெடிட் கார்டுகளை மட்டும் நீங்கள் பார்த்து வாங்குவீர்கள். அதே சமயம், உங்களுடைய கிரெடிட் கார்டில் உள்ள அபராதத்திற்கான விதிமுறைகளை படிக்காமல் வாங்கினால் உங்களால் முழுமையான கேஷ் பேக் புள்ளிகளைப் பெற முடியாது.

மாறுபடும் விதிகளும், கொள்கைகளும்

பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை தெரிவிக்காமலேயே கேஷ் பேக் கிரெடிட் கார்டுகளின் விதிகளை மாற்றி வருகின்றன. வாடிக்கையாளர்கள் அவர்களுடைய பரிசுகளை ஏமாறாமல் பெறுவதற்காக, அரசாங்கம் இது போன்ற செயல்பாடுகளை தடுக்க திட்டமிட்டு வருகிறது.

பொய்யான நிறுவன பட்டியல்

ஒவ்வொரு கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனத்திற்கும், எந்தெந்த விற்பனை நிறுவனத்திடம் வாங்கினால் கேஷ் பேக் பரிசுகள் கிடைக்கும் என்ற பட்டியல்கள் உள்ளன. ஆனால், அதை விட்டு விட்டு நீங்கள் அதே போன்ற பொருட்களை மற்றவர்களிடம் வாங்கினால் உங்களுக்கு கேஷ் பேக் கிடைக்காது. உண்மையில், சில பெரிய அங்காடிகள் கேஷ் பேக் திட்டங்களில் சேர்க்கப்படாமல் இருக்கின்றன. இவற்றில் சில அங்காடிகள், பிற அங்காடிகளை விட தள்ளுபடியான விலையில் அந்த பொருட்களை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல