புகையிரதம் என்பது இரும்புப் பாதைகள் என்று சொல்லப்படும் தண்டவாளங்களின் வழியாக ஒரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து செல்லக் கூடியதுமான ஒரு போக்குவரத்து வண்டியாகும். இதற்கு பயன்படும் தண்டவாளங்கள் இரண்டு உருக்கினாலான தடங்களாகவோ, அல்லது புதுவரவான ஒற்றைத் தண்டவாளமாகவோ, அல்லது காந்தத் தண்டவாளமாகவோ இருக்கலாம்.
புகையிரதம் முன்னர் செல்வதற்கான உந்து சக்தியானது ஒரு தனியான வண்டி மூலமோ அல்லது பல மோட்டார்கள் மூலமோ அளிக்கப்படுகிறது. புகையிரதம் அறிமுகமான கால கட்டத்தில் குதிரைகள் மூலமும் அதன் பின்னர் பல வருடங்களுக்கு நீராவி மூலமும் அதன் பின்னர் தற்பொழுது டீசல் அல்லது மின் ஆற்றல் மூலமும் உந்து சக்தி அளிக்கப்படுகிறது.
புகையிரதங்களின் வகைகள்
நீராவி புகையிரதம், நிலக்கரி புகையிரதம், அகலப்பாதை புகையிரதம், மீட்டர் பாதை புகையிரதம், எலக்ட்ரிக் புகையிரதம், பறக்கும் புகையிரதம், மெட்ரோ புகையிரதம், அதிவேக புகையிரதம் என பல வகைகள் உள்ளன.
புகையிரதம் பயணம் செய்யும் இடத்தை பொறுத்தும் சில வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை, புறநகர் புகையிரதம், நகர புகையிரதம்.
புகையிரதத்தின் வேகத்தை பொருத்தும் வகைகள் மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டு விரைவு புகையிரதம், பயணிகள் புகையிரதம் பயன்பாட்டிற்கு ஏற்ப பலவகையான புகைவண்டிகள் புழக்கத்தில் உள்ளன. பயணியர் புகையிரதம் பொது மக்கள் பயன்பாட்டிற்காகவும் சரக்குப் புகையிரதங்கள் நிலக்கரி, பெட்ரோல், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படுகின்றன. இன்னும் சில இடங்களில் பயணிகள், சரக்கு இரண்டும் ஒரே புகையிரதத்தில் கொண்டு செல்லப்படுகின்றன.
உந்து ஆற்றல்
புகையிரதம் பயன்பாட்டிற்கு வந்த தொடக்க காலத்தில் குதிரைகளைக் கொண்டோ அல்லது புவியீர்ப்பு விசையினாலோ நகர்த்திச் செல்லப்பட்டன. பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீராவிப் பொறி பயன்படுத்தப்பட்டது. 1920 களில் இருந்து நீராவி புகையிரதங்களின் பயன்பாடு டீசல் அல்லது மின் ஆற்றலைப் பயன்படுத்தும் புகையிரதங்களின் அறிமுகத்தால் குறைந்து வந்தது. தற்காலத்தில் ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் நீராவி புகையிரதங்கள் வழக்கொழிக்கப்பட்டாலும் சில நாடுகளில் குறிப்பாக சீனாவில் பயன்பாட்டில் உள்ளது. எனினும் இவையும் சிறிது சிறிதாக நிறுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல நாடுகளில் வரலாற்றுச் சின்னமாக இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் நீலகிரி மலை புகையிரதம், டார்ஜிலிங் மலை புகையிரதம் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.
பயணியர் புகையிரதம்
பயணியர் புகையிரதம் என்பது பயணியர் பெட்டிகளைக் கொண்டிருக்கும். இவை பயணிகளை ஒரு புகையிரத நிலையத்தில் இருந்து மற்றோர் நிலையத்திற்கு கொண்டு சேர்க்கின்றன. நிலையங்களுக்கு இடையேயான தொலைவு ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் இருந்து சில ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை இருக்கலாம். பயணநேரமும் நிமிடக்கணக்கில் இருந்து நாட்கணக்கு வரை மாறுபடும். இவற்றுள் பலவகைகள் உள்ளன.
நெடுந்தொலைவு புகையிரதங்கள் நாட்டின் இருவேறு பகுதிகளுக்கு இடையே ஓடுகின்றன. சில இரு வேறு நாடுகளையும் இணைக்கின்றன.
அதுவிரைவு புகையிரதங்கள் இவை பகல் நேரங்களில் பெரும்பாலும் இயக்கப்படுகின்றன. இவை பொதுவாக மக்கள் தொகை மிகுந்த பெருநகரங்களை இணைக்கின்றன. பிரான்சில் உள்ள டிஜிவி (TGV) என்னும் மிகுவிரைவு புகையிரதம், ஏப்ரல் 3, 2007 அன்று, மணிக்கு 574.8 கிலோ.மீ சராசரி விரைவில் ஓடி, உலகில் ஒரு புதிய அரியசெயல் நிகழ்த்தியுள்ளது. நகரிடை புகையிரதங்கள்- இடையில் நில்லாமல் குறிப்பிட்ட இரு நகரங்களை இணைக்கின்றன.
பயணியர் புகையிரதங்கள் - நகரங்களுக்கு உள்ளே மாணவர்கள், பணியாளர்கள் போன்ற மக்களின் அன்றாடப் போக்குவரத்துக்கான புகையிரதங்கள் ஆகும்.
சரக்குத் புகையிரதங்கள்
சரக்குத் புகையிரதங்கள் சரக்குப் பெட்டிகளை இழுத்துச் செல்கின்றன. திட, நீர்மப் பொருட்களை எடுத்துச் செல்ல வெவ்வேறு பெட்டிகள் உள்ளன. உலகின் பெரும்பாலான சரக்குப் போக்குவரத்து புகையிரதங்கள் மூலமே நடைபெறுகிறது. சாலையை விட புகையிரதத்தில் பொருட்களை எடுத்துச் செல்வது பயனுறுதிறன் மிக்கதாகும்.
சில நாடுகளில் சரக்குள்ள சரக்குந்துகளே நேரடியாக புகையிரதங்களின் மீது வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் சரக்குகளை ஏற்றி இறக்கும் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது.
இலங்கையில் புகையிரதம்
இலங்கைக்கு ஆங்கிலேயரால் தான் புகையிரதம் கொண்டுவரப்பட்டது. இது முதலில் பொருட்களை ஏற்றி செல்லவே பயன்பட்டது. பின்னர் இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு இலங்கை அரசாங்கத்தால் மனிதர்களையும் ஏற்றும் வகையில் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக