புதன், 11 டிசம்பர், 2013

மண்டேலாவின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள செல்லவேண்டும் என்பதை நினைக்க அச்சமாகவுள்ளது - செக் குடி­ய­ரசின் பிர­தமர்

தென் ஆபி­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி நெல்சன் மண்­டே­லாவின் மரணச் சடங்கில் கலந்­து­கொள்­வதை தவ­ற­வி­டக்­கூ­டாது என உலகத் தலை­வர்கள் மும்­மு­ர­மா­க­வுள்ள நிலையில், செக் குடி­ய­ரசின் பிர­தமர் ஜிரி ருஸ­னொக்கோ அவர்­க­ளி­ட­மி­ருந்து வேறு­பட்டு விளங்­கு­கிறார்.

பாரா­ளு­மன்­றத்தில் ருஸ­னொக், பாது­காப்பு அமைச்சர் விளஸ்­ரிமில் பிசெக்­குடன் கலந்­து­ரை­யா­டலில் ஈடு­படும் மேற்படி காட்­சி­ செக் பொது தொலைக்­காட்­சியில் ஒளி­ப­ரப்­பப்­பட்­ட­தை­ய­டுத்து பிர­தமர் கடும் கண்­ட­னத்­துக்­குள்­ளா­கி­யுள்ளார்.

அந்த கலந்­து­ரை­யா­டலில் ஜனா­தி­பதி மிலொஸ் ஸெமன் காலில் ஏற்­பட்ட காய­மொன்றால் மண்­டே­லாவின் மரணச் சடங்கில் கலந்­து­கொள்­வ­தற்கு தென் ஆபி­ரிக்கா செல்ல முடி­யாமை குறித்து ருஸ்னொக் விப­ரிக்­கையில், ‘நான் அங்கு (தென் ஆபி­ரிக்கா) செல்ல வேண்­டி­யுள்­ள­தை­யிட்டு அச்­ச­மா­க­வுள்­ளது’ என தெரி­வித்­தி­ருந்தார்.

இதன்­போது தென் ஆபி­ரிக்க பயணம் மிக நீண்­ட­தா­க­வுள்­ள­தா­கவும், அச்­ச­மயம் தான் பகல் மற்றும் இரவு போசன விருந்­து­ப­சா­ரங்­களில் கலந்­து­கொள்ள ஏற்­க­னவே திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

நெல்சன் மண்­டே­லாவின் மரணச் சடங்­கிற்கு செல்­வது எரிச்­சலை ஏற்­ப­டுத்தும் விடயமாக ருஸ்னொக் விமர்­சித்­தமை குறித்து கடும் கண்­டனம் எழுந்­ததால் அவர் அதற்­காக மன்­னிப்பு கோரி­யுள்ளார்.

‘நான் எனது வார்த்­தை­க­ளுக்­காக மன்­னிப்பு கோரு­கிறேன். நான் மண்­டே­லாவின் மரணம் தொடர்­பாக அத்­த­கைய வார்த்தைப் பிர­யோ­கத்தை பிர­யோ­கித்­தி­ருக்கக் கூடாது’ எனத் தெரி­வித்த அவர், டிசம்பர் மாதம் முழு­வதும் தான் எதிர்­கொண்­டுள்ள அதிக பணி­க­ளுக்கு மத்­தியில் எதிர்­பா­ராத நிகழ்­வு­க­ளுக்கு நேரத்தை ஒதுக்­கீடு செய்­வது சிர­ம­மா­க­வுள்­ள­தாக கூறினார்.

இந்நிலையில் நெல்சன் மண்டேலாவின் மரணச் சடங்கில் செக் குடியரசை பிரதி நிதித்துவம் செய்யும் வகையில் யார் கலந்து கொள்வது என்பது குறித்து எதிர்வரும் தினங்களில் தீர்மானிக்கவுள்ளதாக தெரி வித்தார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல