புதன், 29 ஜனவரி, 2014

பெண்களை எளிதில் புரிந்து கொள்வதற்கான 10 வழிகள்!!!

பெண்களை பூவோடு ஒப்பிட்டு கூறுவார்கள். ஏனெனில், அவர்கள் மலர் போன்ற மனதை உடையவர்கள். ஒரு பெண் தன்னை உண்மையாக விரும்பும் ஒரு மனிதரிடம் தன்னைப் பற்றி வெளிப்படுத்த தயங்கமாட்டாள். மேலும், அது பொய் எனத் தெரிந்தால். அதனை தாங்கவும் மாட்டாள். இன்றைய பெண்கள் நாகரீக வாழ்வு வாழ்ந்து வந்தாலும். ஒவ்வொரு பெண்ணும் பெண்ணிற்கே உரிய பண்புகளுடன் தான் காணப்படுகின்றாள்.


பெண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான காரியங்களில் ஒன்றாகும். நீங்கள் எவ்வளவு காலம் தான் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தாலும். பெண்களை முழுவதுமாக புரிந்து கொள்வது என்பது கடினமான ஒன்றாகும். நீங்கள் விரும்பும் பெண்ணை மதிப்பிடுவதற்கு உங்கள் வாழ்நாள் முழுவதும் தேவைப்படலாம். பெண்களை முழுவதும் புரிந்து கொண்டு. நமது உறவை வலுப்படுத்த பல வழிகள் உள்ளன.

நீங்கள் விரும்பும் பெண்ணை புரிந்து கொள்ள அவரோடு அதிகமாக பேச வேண்டும். இது ஒரு விட்டுகொடுத்தல் முறையாகும். அதனால் நீங்கள் அந்த பெண்ணிடம் உண்மையாகவும். வெளிப்படையாகவும் இருந்தால். அவர்கள் உங்களை முழுமையாக நம்புவார்கள். உங்கள் அன்பையும். உறுதியையும் அவர்களுக்கு அளித்தால். உங்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு. தன்னை பற்றி சொல்ல முன் வருவார்கள்.

நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அல்லது எவ்வளவு நன்றாக முயற்சி செய்திருந்தாலும், அவர்களிடம் பொறுமையை கடைப்பிடிப்பது தான் மிகவும் முக்கியமானதாகும். ஒரே இரவிலோ அல்லது ஒரே வருடத்திலோ நடக்கக்கூடியது அல்ல. பத்தாண்டுகள் பிறகு அவர்களிடம் ஏதேனும் புதிதாக கண்டறிந்தால், அதற்காக ஆச்சரியப்பட வேண்டாம். அவர்களிடம் கனிவாகவும், அன்புடனும் புரிதலுடனும் இருப்பது தான் முக்கியமாகும். ஒரு பெண்ணிடம் வெளிப்படையாக அணுகுவதே நல்லது. இதனால், அவர்களிடம் சிறு காரியங்களுக்கு ரியாக்ட் செய்து அவர்களை வருத்தப்படச் செய்யாதீர்கள்.



பொறுமை

ஒரு பெண்ணை புரிந்துகொள்ள சில காலம் தேவைப்படும். ஒரு பெண்ணை நன்றாக புரிந்துகொள்ள தேவைப்படுவது பொறுமைதான். சில நாட்களிலேயே அல்லது மாதங்களிலேயே புரிந்துகொள்ள எதிர்பார்க்கக்கூடாது. விதையை விதைத்து பூவிற்காக காத்திருங்கள்.

அன்பு

ஒரு பெண்ணை நன்றாக புரிந்துகொள்ள அன்புடன் அவரை எதிர்கொள்ளவேண்டும். தன்னை மிகவும் விரும்பும் ஒருவரிடம் எந்த ஒரு பெண்ணும் தன் எண்ணங்களை முழுவதுமாக வெளிப்படுத்துவாள். நீங்கள் அன்புடன் எதிர்கொண்டால் தன்னை புரிந்துகொள்ள அனுமதி அளிப்பாள்.

அன்பும் அக்கறையும்

நீங்கள் அன்புடன் அவர்களை எதிர்கொண்டாலும் உடனே தன்னை வெளிப்படுத்த தயங்குவார்கள். தன்னை அன்புடனும் அக்கறையுடனும் கையாளும் ஒருவரிடம் மெல்ல அவர்களின் எண்ணத்தையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்துவார்கள்.

பேசுதல்

பெண்கள் அதிகம் பேச விரும்புவார்கள். ஒரு பெண்ணை புரிந்து கொள்வதற்கு அவருடன் நன்கு பேசத் தொடங்க வேண்டும். இது ஒரு பெண்ணை புரிந்து கொள்வதற்கான முதல் படியாகும். நீங்கள் அவர்களிடம் வெளிப்படையாக பேசுவதால் அவர்களை சரியாக மதிப்பிட முடியும்.

முதல் படி

ஒரு பெண்ணை புரிந்துகொள்ள இந்த முதல் படியை தொடங்கவேண்டும். அவர்களை வெளிப்படையுடனும் நேர்மையுடனும் அணுக வேண்டும். இந்த முதல் படியான பகிர்தல் மூலம் அவர்கள் தன்னை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள அனுமதி அளித்து உங்களைப் பற்றி அவர்கள் புரிந்து கொள்ள விரும்புவார்கள்.

வேறுபாடு

ஒவ்வொரு பெண்ணும் அவர்களது வழியில் வேறுப்பட்டே இருப்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும். ஒரு சிலர் வெளிப்படையாகவும் ஒரு சிலர் நாணத்துடனும் இருப்பார்கள். அவர்களை ஒப்பிட்டு பார்க்காமல் எளிதாக அவர்களை புரிந்துகொள்ள முற்படுங்கள்.

கேள்வி எழுப்புங்கள்

பெண்கள் அதிகம் பேச ஆசைப்படுவார்கள். ஏதாவது கேள்வி கேட்டு அவர்களை பேச அனுமதி அளியுங்கள். இவ்வாறு அவர்களை பேச விட்டு உங்களின் சரியான கேள்விகள் மூலம் அவர்களை புரிந்துகொள்ளுங்கள்.

அவர்களது கடந்த காலம்

ஏன் சில பெண்கள் ஒரு சில நேரம் சரியாக பழகாமல் போவதற்கும் வெளிப்படையாக பகிராமல் இருப்பதற்கும் காரணம் இருக்கக்கூடும். அதனால், அவர்களை புரிந்துகொள்ள அவர்களின் கடந்தகாலத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அந்த கடந்தகால நிகழ்வுகளால் தான் அவள் இப்படி இருக்கிறாள் என்பது தெரியவரும்.

ஒன்றாக சேர்ந்து நேரத்தை செலவழிப்பது

வழக்கமாக அவர்களை சந்திப்பது மற்றும் அவர்களுடன் சேர்ந்து சேர்ந்தே இருப்பது போன்றவற்றை ஏற்பாடு செய்யவேண்டும். அவர்களோடு நீண்ட நேரம் செலவிடுவதால் அவர்களை பற்றி புரிந்துகொள்ள முடியும்.

உறுதியளிப்பு

நீங்கள் விரும்பும் பெண்ணிடம் உங்கள் உறவு உறுதியானதாக இருக்க வேண்டும். பெண்கள் பொதுவாக உறுதியான உறவின் போதுதான் தன்னை பற்றி பகிர்ந்து கொள்ளவும் வெளிப்படுத்தம் செய்வார்கள். நீங்கள் அவர்களுக்காக எதையும் செய்வீர்கள் என்ற உத்திரவாதத்தின் மூலம் தான் அவர்களை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.


Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல