புதன், 29 ஜனவரி, 2014

ஆனந்தி சசிதரன் குரலெழுப்புவது பாதிக்கப் பட்டவர்களுக்காகவா அல்லது அநீதி புரிந்தவர்களுக்காகவா?

பகுதி - 1

வடக்கில் மாகாணசபை தேர்தல்கள் நடைபெறும்போது தமிழீழ விடுதலைப் புலிகளின்(எல்.ரீ.ரீ.ஈ) மூத்த தலைவரான சின்னத்துரை சசிதரன் அல்லது எழிலன் என்பவரது மனைவியான ஆனந்தி சசிதரன் தேர்தல் பிரச்சாரங்களின்போது வடக்கு வாக்காளர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்திருந்தார். யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின்(ரி.என்.ஏ) வேட்பாளர்களில் ஒரே ஒரு பெண் வேட்பாளராக இருந்த அவருக்கு தற்செயலாக வாக்காளர் பட்டியலில் முதலாவது இடம் கிடைத்திருந்தது ஆனந்திக்கு சாதகமான ஒரு நிலையை தோற்றுவித்திருந்தது.



அதற்கு மேலதிகமாகää ஆயுதப் படைகளிடம் சரணடைந்த பின் அவரது கணவர் காணாமற் போனதாக அறிவிக்கப்பட்டதினால் தோற்றுவிக்கப் பட்டிருந்த அவரது பரிதாபகரமான நிலமை அவருக்கு அதிகம் அனுதாபத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. நல்ல நிதியுதவியுடன் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த பிரச்சாரம் தேர்தல் வெற்றிக்கான பாதையில் ஆனந்தி சசிதரன் விரைவான வளர்ச்சியை பெறுவதற்கு பேருதவியாக இருந்தது.

தனது பிரச்சாரத்தை தொடங்கும்போது யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட உதயன் பத்திரிகை மற்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் சுடர் ஒளி ஆகிய தமிழ் பத்திரிகைகளின் உரிமையாளரும் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஈ. சரவணபவன் என்பவரினால் ஏற்படுத்தப் பட்டிருந்த சில வகையான தடைகளுக்கு ஆனந்தி முகம் கொடுக்கவேண்டியிருந்தது. ஆனந்தி வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட சுழிபுரத்தை தளமாக கொண்டவராக இருக்கின்றபடியால் அவர் தனக்கு ஒரு அச்சுறுத்தலாக இருப்பார் என்று சரவணபவன் வெளிப்படையாகவே கருதினார். சரவணபவன் அந்த தேர்தல் தொகுதியின் ரி.என்.ஏ அமைப்பாளராக இருப்பதுடன் 2010ல் பாராளுமன்றத்துக்கு தெரிவாவதற்கு பெரும்பாலும் இந்தத் தொகுதியின் வாக்குகளிலேயே தங்கியிருந்தார். அரசியல் ரீதியாக ஆனந்தி அவருக்கு ஒரு நீண்ட கால அச்சுறுத்தலை உருவாக்கியிருந்தார். இதன் விளைவாக உதயன் பத்திரிகை ஆனந்தியின் பிரச்சாரங்களை இருட்டடிப்பு செய்ததுடன் அவரது வேட்பாளர் நிலையை உறுதிப்படுத்தும் விளம்பரங்களுக்கு பணம் செலுத்தியபோதும்கூட அதை பிரசுரிப்பதற்கு மறுத்து வந்தது.

யாழ்ப்பாணத்தில் உள்ள வாசகர்களிடையே உதயன் பத்திரிகை மிகுந்த செல்வாக்கும் தாக்கமும் பெற்றதாக உள்ளதால் இது பெரிய அடியாக இருந்தது. எனினும் இருவருக்கும் தெரிந்த பெருந்தன்மையுள்ள ஊடக அன்பர்களுக்கு நன்றி கூறவேண்டியதான ஒரு தலையீடு காரணமாக சரவணபவன் மற்றும் ஆனந்தி இடையே ஒரு சந்திப்பு அமைதியாக ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தச் சந்திப்பில் உண்மையில் என்ன விடயங்கள் பரிமாறப் பட்டனவோ தெரியாது ஆனால் அதன் காரணமாக நல்லிணக்க நிலையை அணுகுவது வெற்றிகரமாக நிறைவேறியது போலத் தெரிகிறது. அதன் பின்னர் ஆனந்தியின் விளம்பரங்கள் மற்றும் அவரது பிரச்சாரம் பற்றிய செய்திகள் உதயனில் தொடர்ச்சியாக இடம்பெறலாயிற்று. அவருடனான ஒரு விரிவான நேர்காணலும் பிரசுரமாகியிருந்தது.

முன்னேற்றங்கள்

தேர்தல் பிரச்சாரங்களின்போது ஆனந்தி சசிதரன் தொடர்பான வேறு நான்கு விடயங்களும் அவரது ஆதரவை அதிகரிக்க உதவின. முதலாவது ஒரு சில முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களால் நடத்தப்பட்ட ஒரு பகிரங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் ஆனந்தி சசிதரனுக்கு எதிரான விளம்பர அட்டைகளை ஏந்திய வண்ணம் அவருக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினார்கள். அத்தகைய தன்மையான எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று ரி.என்.ஏ வேட்பாளர்களில் ஆனந்திக்கு மட்டுமே நடத்தப்பட்டது.

இரண்டாவது முன்னேற்றம்ää யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்துக்கு அருகில் நடந்ததாக அறிவிக்கப்பட்ட ஒரு சம்பவத்தினால் ஏற்பட்டது. தீவிரமான பிரச்சாரத்துக்குப் பிறகு இரவில் ஆனந்தி வீடு திரும்பும்போது வி.ஐ.பி பிரமுகர் ஒருவரது மோட்டார் வாகன அணி அவரது வாகனத்தை கடந்து சென்றது. அந்த வி.ஐ.பி யின் வாகனத்தை பின்தொடர்ந்த ஒரு உந்துருளி ஆனந்தியின் வாகனத்தை தாக்க முயன்றது. அந்த வாகனத்தின்மீது வீசப்பட்ட ஒரு கனமான பொருள் அதை தாக்கிச் சேதப்படுத்தியது. தெளிவாக தெரியக்கூடிய விதத்தில் வாகனத்துக்கு சேதம் குறைவாக இருந்ததுடன் மேலதிக ஆபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை.

மூன்றாவதாக இடம்பெற்ற சம்பவம் மிகவும் ஆபத்தான ஒன்றாக அறியப்படுகிறது. சீருடையில் இருந்தவர்கள உட்பட ஆயதம் தாங்கியவர்களைக் கொண்ட கும்பல் ஒன்று சுழிபுரத்தில் உள்ள அவரது வீட்டைத் தாக்கி வீட்டையும் அங்கிருந்த தளபாடங்கள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் என்பனவற்றைச் சேதப்படுத்தியது. அவரது பிரச்சார உத்தியோகத்தர்களில் குறைந்தது எட்டுப் பேராவது மோசமாகத் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்கள். அதிர்ஸ்டவசமாக ஆனந்தியும் மற்றும் அவரது மூன்று மகள்மாரும் அந்த தாக்குதல் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் வீட்டின் பின்புற மதிலைத் தாண்டிக் குதித்து பாதுகாப்பான ஓரிடத்துக்கு தப்பி விட்டார்கள். ஒரு தாக்குதல் நடைபெறலாம் என்கிற அச்சம் காரணமாக ஆனந்தியின் பிரச்சார உத்தியோகத்தர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரையும் அவரது பிள்ளைகளையும் வீட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப் படுத்தியிருந்தார்கள்.

சரித்திரப் பிரசித்தி வாய்ந்த வட மாகாணசபை தேர்தல்கள் நடைபெறுவதைப் பற்றி செய்தி சேகரிக்க அநேக ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தில் அப்போது குழுமியிருந்த படியால்ää இந்தச் சம்பவம் அதிக விளம்பரத்தைப் பெற்றது. உள்ளுர் உள்நாட்டு. மற்றம் சர்வதேச ஊடகங்களின் கவனப் பொருளாக ஆனந்தி சசிதரன் மாறியதால் ஓரிரவிலேயே அவர் மிகவும் பிரபலமானார். இந்த தாக்குதலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர்தான் (ஈபி.டி.பி) பொறுப்பு என்று ஆனந்தி குற்றம் சாட்டினார். இது அந்தக் கட்சியினரால் கோபத்துடன் மறுக்கப்பட்டது. சுவராஸ்யமானதாக இந்த விடயம் காரணமாக ஆனந்தி சசிதரன் அதிகமான அரசியல் ஆதாயத்தை அடைந்து விடுவார் எனக் கருதிää ரி.என்.ஏ உயர் மட்டத்தினர் ஒரு அதிகாரபூர்வமான கட்சிப் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தவில்லை.

பிரச்சாரம்

ரி.என்.ஏ இந்த விடயத்தில் செயற்படாததுக்க இரண்டு காரணங்கள் பலராலும் சொல்லப்பட்டது. முதலாவது காரணம் ரி.என்.ஏ உயர்மட்டம் அந்த தாக்குதலின் உண்மைத் தன்மை பற்றி திருப்தி அடையாததால் பகிரங்கமாக பத்திரிகையாளர் மாநாட்டில் தாக்குதல் பற்றிய ஆனந்தியின் கருத்தை ஒப்புக் கொள்ளத் தயக்கம் காட்டியது என்பதாகும். இரண்டாவது காரணம் இந்தச் சம்பவத்தின் பின்னர் ஆனந்தி இனனமும் அதிகம் பிரபலம் அடைவாரே என்று ரி.என்.ஏயின் உயர்மட்டம் கவலையடைந்தது என்பதாகும். உயர் நீதிமன்ற நீதியரசரைக் காட்டிலும் இந்த முகாமைத்துவ உதவியாளர் அதிகம் விருப்புவாக்குகளைப் பெறக்கூடும் என்று ஒரு கவலை இருந்தது. பத்திரிகையாளர் மாநாடு நடக்காது போனாலும்கூட அநேக ஊடகவியலாளர்களுக்கு தனது வீடடில் வைத்தும் மற்றும் தொலைபேசி மூலமாகவும் தனிப்பட்ட நேர்காணல்களை நடத்தியதால் பலமான பிரச்சார அறுவடையை பெற்றுவிட்டதால் ஆனந்திக்கு அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

ரி.என்.ஏக்குள்ளும் மற்றும் தமிழ் புலம்பெயர் சமூகத்துக்குள்ளும் இருந்து விக்னேஸ்வரனுக்கு குழி பறிப்பதன் மூலம் மற்றொரு வேட்பாளர் அவரைவிட அதிகம் எண்ணிக்கையிலான விருப்பு வாக்குகளை பெறச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துக்காக பாடுபடும் பிளவுபட்டுள்ள சக்திகளின் ஒன்றுகூடல்ää இந்த நடவடிக்கைக்கான பிரகாசமான வாய்ப்பு நிலையுள்ளவர் ஆனந்தி சசிதரன் என்று கணித்துக் கொண்டன. பிரச்சாரம் விரிவடைந்து விட்டதால் விக்னேஸ்வரனின் முகாமில் எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கியது. எனவே முகாமுக்குள் சலசலப்பு எழுந்தது அது முன்னாள் நீதிபதியை ஒருபுறம் இராணுவ ஆளுனர் மற்றும் இராணுவ பிரசன்னம் என்பன பற்றி கீழ்மட்;ட மக்களை உசுப்பக்கூடிய சொல்லாட்சிப் பிரயோகங்களை பயன்படுத்துவதற்கும் மற்றும் மறுபுறத்தில் பிரபாகரன் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ என்பனவற்றின் புகழ்களைப் பாடும்படி செய்வதற்கும் சம்மதிக்க வைத்தன. விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராகää சோமசுந்தரம் மாவை சோதிராஜாவின் விருப்பத்துக்கு எதிராக முன்தள்ளிய ரி.என்.ஏ தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன்ää தனிப்பட்ட முறையில் அந்த சவாலை ஏற்றுக்கொண்டுää முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் அதிகபட்ச விருப்பு வாக்குகளை பெறுவதை உறுதி செய்வதற்காகத் தானே யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் தங்கு விடுதியில் முகாமிட்டிருந்தபடியே விக்னேஸ்வரன் சார்பான பிரச்சாரங்களை ஒருங்கிணைப்பு செய்து வந்தார்.

தேர்தல் தினம் நெருங்கிவரும் பொழுது விக்னேஸ்வரன் அதிக எண்ணிக்கையிலான விருப்பு வாககுகளைப் பெறப்போகிறார் எனத் தெரிந்தது. கல்வி மற்றும் உயர் பதவிகளுக்கு மதிப்பளிக்கும் பழமைவாத கருத்துக்களைக் கொண்ட யாழ்ப்பாண மக்கள் படித்த முன்னாள் நீதிபதிக்கே தங்கள் வாக்குகளை வழங்கப் போகிறார்கள் என்பது தெளிவானது. விக்னேஸ்வரனுக்கு மட்டுமே உறுதியாக விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் மற்றவர்களுக்கு அல்ல என்கிற பிரச்சாரம் கால் நடையாகச் சென்று வீட்டுக்குவீடு மேற்கொள்ப்பட்டதை அடுத்துää அவரது விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகரித்தது.

தேர்தல் தினமான செப்டம்பர் 21 ந்திகதி விடியும்போதுää ஆனந்தி தொடர்பான தேர்தல் முன்னேற்றம் நடந்தது. இது ஒரு வன்முறைத் தன்மை வாய்ந்ததாக இருக்கவில்லை. அது ஒரு மோசடி நடவடிக்கையாக இருந்தது. நிஜமான உதயன் பத்திரிகையை போன்ற வடிவத்தில் ஒரு போலி உதயன் பத்pரிகையை அச்சடித்து அதில் ஆனந்தி சசிதரன் ரி.என்.ஏ யினை கைவிட்டு அரசாங்கத்தின் பக்கம் சென்றுவிட்டார் என்கிற பரபரப்பன செய்தியையும் பிரசுரித்திருந்தார்கள். இந்த போலி உதயன் செய்தி அதிக ஆர்வத்தை எழுப்பியிருந்தது ஆனால் அவநம்பிக்கை மற்றும் ஏளனம் காரணமாக அதை எல்லோரும் புறக்கணித்தார்கள். இந்த் கள்ளப் பதிப்புக்கு காரணமானவர்கள் படையினர் தான் என பரவலாக எதிர்பார்க்கப் பட்டதால்ää யாழ்ப்பாண வாக்காளர்களை எளிதில் ஏமாற்ற முடியவில்லை.

போலித்தனம்

எனினும் இந்த போலித்தனமான செயற்பாடு ஆனந்தி சசிதரனின் பக்கம் ஒரு அனுதாப அலையை வீசத்தான் செய்தது. அநேக ரி.என்.ஏ வேட்பாளர்கள் மத்தியிலும் இந்தப் பெண் மட்டும் ஏன் தனியாக இலக்கு வைக்கப்படுகிறார்? காய்த்த மரம்தான் கல்லடிபடும் என்கிற பழமொழியின் கதைதானா இதுவும்? என்கிற கேள்விகள் முளைக்கத் தொடங்கின. ஆனந்தி மீதான தாக்குதல்களின் பின்னணியில் எந்த உள்நோக்கம் இருந்தாலும் சரி அதன் மொத்த விளைவாக ஒரு பெரிய அனுதாப அலை உருவானது. உருவாக்கப்பட்ட அனுதாபம் மிகப் பெரிதாக இருந்ததால் முதலமைச்சர் வேட்பாளரை முடிவு செய்வதற்கு நடத்தப்படும் விருப்பு வாக்கு பந்தயத்தில் மிகவும் நெருக்கமான போட்டி ஏற்படுவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதே என்று விக்னேஸ்வரனின் முகாமில் மீண்டும் ஒரு பயம் உருவானது. எனினும் இறுதி முடிவுகள் விக்னேஸ்வரன் சார்பான முகாமினரது பயத்தை பொய்யாக்கியதுடன்ää விக்னேஸ்வரனது எதிர் முகாமில் உள்ளவர்களது நம்பிக்கையை தவறாகவும் மாற்றியது. விருப்பு வாக்கு எண்ணிக்கையில் 132355 வாக்குளைப் பெற்று சி.வி. விக்னேஸ்வரன் முதலிடத்தை கைப்பற்றிய அதேவேளை ஆனந்தி சசிதரன் 87770 வாக்களைப் பெற்று இரண்டாவதாக வந்திருந்தார்.

ஆனந்தியின் வெற்றி பலபேர்களுக்கு குறிப்பாக சில மேற்கத்தைய இராஜதந்திரிகளுக்கு வியப்பான ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியிருந்தது.ஒரு சக்தி வாய்ந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தூதர் முக்கியமாக அதில் ஈர்க்கப்பட்டதுடன் ஆனந்தியுடன் ஒரு சந்திப்பையும் மேற்கொண்டார். இந்தப் பெண் தூதுவர் கட்சிக்கு உரித்தாகவுள்ள இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை தோல்வியடைந்த பெண்களில் ஒருவருக்கு வழங்கினால் அவர் ஆனந்தி சசிதரனுக்கு தார்மிக அதரவை வழங்குவார் எனச்சொல்லி அதை ரி.என்.ஏ தலைவரை ஏற்றுக் கொள்ள சம்மதிக்க வைப்பதில் முக்கிய பங்கினை வகித்துள்ளாராம். இது ஏற்றுக் கொள்ளப் பட்டதால் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்ட திருமதி மேரி கமலா குணசீலன் நியமனம் பெற்றார்.

ரி.என்.ஏ யின் வெற்றிக்குப் பிறகு மாகாண அமைச்சர்களை நியமிக்கும் விடயத்தில் கட்சி பல்வேறு அழுத்தங்களை தாங்கவேண்டி நேர்ந்தது. பல்வேறு கோரிக்கைகள் மற்றும் எதிர் கோரிக்கைகள் என்பன முறையே அழுத்தம் தெரிவிக்கும் குழுவினராலும் மற்றும் செல்வாக்குள்ள வெளியாட்களாலும் மேற்கொள்ளப் பட்டன. ஆனந்தி சசிதரனின் முகாமைச் சேர்ந்தவர்கள் அவருக்குஅமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் எனக் கோரினார்கள். இந்தக் கோரிக்கை சில பெண்கள் அமைப்புகளாலும் ஆதரிக்கப்பட்டது.எனினும் அப்படி எதுவும் நடக்கவில்லை.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர் என்கிற பொறுப்புடமையை பல விடயங்களாகப் பிரித்து பல்வேறு அமைச்சுகளின் எல்லைகளின் கீழ் மாகாணசபை அங்கத்தவர்களுக்கும் கடமைகளை வழங்கியுள்ளார். இவைகள் ஒரு ஆலோசனையாளர் தகுதியுடையவை மற்றும் இந்த அங்கத்தவர்கள் முறையே அதற்கான பொறுப்பில் உள்ள அமைச்சர்களின் கீழ் கடமையாற்ற வேண்டும். விக்னேஸ்வரன் தனது பொறுப்பின் கீழுள்ள விடயங்களான: “ஆதரவற்ற நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கான சொத்து மறுவாழ்வு மற்றும் உடல் உள்ளம் மற்றும் சமூக ரீதியில் ஊனமுற்றவர்களாக உள்ளவர்களின் மறுவாழ்வு மற்றும் நலன்புரி விடயங்கள் ஊனமுற்ற மற்றும் வேலையற்றவர்களுக்கான நிவாரணம் (இதில் சமூக அம்சங்கள் மற்றும் போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண்கள் தலைமையேற்கும் வீட்டுடமைகள் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் போன்றவர்கள் மீது அதிக வனம் செலுத்துதல்) மற்றும் பிரதானப்படுத்தப்பட்ட பாலினம்” போன்றவற்றில் ஆனந்திக்கு ஒரு பங்கினை ஒதுக்கியுள்ளார்.

டி.பி.எஸ். ஜெயராஜ்


(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல